சிறப்பம்சக் கதை

உலகப் பொருளாதாரத்துடன் இலங்கை எவ்வாறு மேம்பட்ட ரீதியில் ஒன்றிணைந்து கொள்ளமுடியும்?

மே 29, 2017


Image

சமத்துவ வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஜான் வலிஸர் மே 12ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது ரீவி 1 தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.


கட்டுரையின் விசேட அம்சங்கள்
  • இலங்கையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை மேலும் போட்டித்தன்மைமிக்கதாக மாற்றுவதற்கும் மறுசீரமைப்புக்கள் தேவையாகவுள்ளன என்பதை உலக வங்கியின் துணைத்தலைவர் ஜான் வலிஸர் வலியுறுத்தினார்.
  • வியாபாரச் சூழ்நிலையை முன்னேற்றுவதனூடாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் அவதானம் செலுத்துவதனூடாகவும், வளர்ந்துவரும் நிலைபேறான சுற்றுலாத் துறையில் அக்கறைகாண்பிப்பதன் மூலமாகவும் இலங்கை மேலும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்க முடியும்.
  • புதிதாக நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமானது, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுமிடத்து மறுசீரமைப்புக்களுக்கு மேலும் ஏற்புடையதான சூழ்நிலையை உருவாக்குவதற்கு துணையாக அமையும்.

சமத்துவ வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஜான் வலிஸர், மே மாத முற்பகுதியில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், முக்கிய தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் சமத்துவமான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் முன்னெடுக்கப்படும் விரிவான நிதிநிலை பொருளாதார மற்றும் ஆட்சி மறுசீரமைப்புக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தச் சந்திப்புக்கள் சந்தர்ப்பமாக அமைந்தன.

அதிகமான தனியார் துறை தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் பெறுமதி சேர் உற்பத்தி திறன்களை மேம்படுத்துகின்றமையானது அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலாக இருக்கின்ற அதேவேளை அதிகமான ஏற்றுமதிகளை செய்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவதாகவும் மேலும் அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உள்ளீர்த்துக்கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளது.

இந்த நோக்கத்தை அடைய வேண்டுமானால் அரசாங்கமானது பொருளாதாரத்தை தயார்ப்படுத்துவதுடன் மேம்பட்ட போட்டித்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என வலிஸர் தெரிவித்தார். வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலமாக எவ்வாறு இலங்கையானது உலகப் பொருளாதாரத்துடன் தன்னை மென்மேலும் ஒன்றிணைத்துக்கொள்ளமுடியும் என்பது தொடர்பாக வலிஸர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்களைப் பார்க்கலாம்.

மேலும் போட்டித்தன்மைமிக்க பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை கட்டியெழுப்புதல்

உலகின் பெறுமதி பொருளாதார கட்டமைப்பின் ஓர் அங்கமாக இலங்கை திகழ்வதற்கு நாட்டு மக்களின் திறன்களையும் வல்லமைகளையும் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இது அதிகமான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு வழிகோலும்.  இந்த இலக்கை அடைவதற்கு வர்த்தக உடன்படிக்கைகள் துணையாக அமையக்கூடும் என வலிஸர் சுட்டிக்காட்டுகின்றார்.  தனியார் துறையினருக்கு நிதி கிடைக்கக்கூடிய மேம்பட்ட வசதிகளை வழக்குதல் போன்ற நடவடிக்கைகளானது இலங்கையின் வியாபாரச் சூழ்நிலையை முன்னேற்றுவதற்கு துணையாக அமையும் என அவர் மேலும் தெரிவிக்கின்றார். 

அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதை இலகுபடுத்துகின்றதற்காக போதுமான வரிக்குறைப்புக்களை வழங்குகின்ற ஜி.எ.ஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் நீண்ட காலப்பகுதியை எடுத்து நோக்கினால் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். இருப்பினும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மூலோபாயரீதியான சிந்தனையே உண்மையில் அவசியத் தேவையாகவுள்ளது.

உள்ளக பொருளாதாரத்துடன் ஒன்றிநிற்பதை உறுதிப்படுத்துகின்றதாக சில பாரிய திட்டங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வலிஸர்இ “கட்டமைப்புக்களும் உட்கட்டுமானங்களும் உரியவகையில் அமைந்திருக்க வேண்டும்” என குறிப்பிடுகின்றார்.

தனியார் துறையிரினர் மத்தியில் ஏற்பட்டுவரும் தேவைப்பாடுகளைச் சந்திக்கத்தக்கவாறு புதிய பட்டதாரிகள் பெறுமதிமிக்க தொழில்களை தேடிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை அதிகரித்துக்கொள்ள கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் முதலீடுகள் அமையவேண்டும்.

சேவைத் துறையை ஊக்குவிப்பதானது தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில் தருநர்களால் அதிகமாக நாடப்படும் துறைகளில்  இலங்கையர்கள் பயற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான அதிகமான சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

“அரசாங்கத்தின் சரியான ஒத்துழைப்புமிக்க கொள்கைகள் மூலமாக உலக சந்தையில் பெரிதான பங்கை பெற்றுக்கொள்வத்றகான சரியான நிலையில் இலங்கை காணப்படுகின்றது” என வலிஸர் சுட்டிக்காட்டுகின்றார். 

எவ்வாறு இலங்கை உலகப் பொருளாதாரத்துடன் மேலும் சிறப்பாக ஒன்றிணைமுடியும்

முதலீடுகளுக்கான சூழ்நிலையை முன்னேற்றுதல் மற்றும் Doing Business    போன்ற சர்வதேச தரப்படுத்தலில் அதன் பெறுபேறுகளை வலுப்படுத்தல் மூலமாக முதலிடுவதற்கான ஆர்வமிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை மென்மேலும் ஈர்ப்புடையதாக மாறும்.

முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் கவனத்தைக் குவித்து செயற்படுவதன் மூலமாக இலங்கை நாடுகின்ற இலக்கை நோக்கி நகரமுடியும் என வலிஸர் குறிப்பிடுகின்றார்.  உட்கட்டுமான முதலீட்டு தேவைப்பாடுகள் மற்றும் வரையறைகள் என்பதை அடையாளங்கண்டு முன்னெடுக்கும் அர்ப்பணிப்ப மிக்க சுற்றுலாத்துறை மூலோபாயத் திட்டத்தின் மூலமாக இலங்கையின் துரித வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலாத்துறையை நிலைபேறானதாக கட்டியெழுப்ப முடியும்.


" அரசாங்கத்தின் சரியான ஒத்துழைப்புமிக்க கொள்கைகளின் துணையுடன் உலகச் சந்தையில் பெரிதான பங்கொன்றை கைப்பற்றிக்கொள்வதற்குரிய மிகவும் பொருத்தமான ஸ்தானத்தில் இலங்கை நிலைகொண்டுள்ளது "

ஜான் வலிஸர்

உலக வங்கியின் சமத்துவ அவிருத்தி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான துணைத் தலைவர்

இலங்கையில் அதிகரித்த போட்டித்தன்மைக்காக வரி மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல்

வரி வருமானமானது மொத்தத்தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதமாக மாத்திரமே அமைந்துள்ளதால், இவரி மறுசீரமைப்புகள் தொடர்பாக இலங்கை முழுமையாக கவனம் செலுத்துவது அவசியமாகும்.  தமது மொத்த தேசிய உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் குறைவான தொகையை பெற்றுக்கொள்கின்ற நாடுகள் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் மாத்திரமன்றி பொருளாதார வளர்ச்சியிலும் பிரதிகூலங்களை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மிகவும் வறுமைப்பட்டவர்கள் மற்றும் மிகவும் நலிவடைந்தவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட இலக்கு நிர்ணயித்த செலவுகள் மூலமாக அன்றேல் மிக கீழ்மட்டத்தில் வருமானம் ஈட்டுகின்றவர்களுக்காக தொழில்களை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்பின்மையை குறைத்தல் ஆகிய விடயங்களில் முன்னுரிமைகொடுக்கும் முதலீடுகளை மேற்கொள்வது போன்ற மறுசீரமைப்பு கொள்கைகள் மூலமாக வறுமை ஒழிப்பு விடயத்திலும் முன்னேற்றம் காணமுடியும் என வலிஸர் விளக்குகின்றார்.  சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், வரிச் சீர்த்திருந்தங்கள் போன்ற பல்வேறு கொள்கைகள் மீதான தடத்தில் தொடர்ந்து பயணிப்பதற்காகவும் அவற்றை முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காகவும் புள்ளிவிபர ஆய்வுகளை பயன்படுத்த முடியும்.  இதன் மூலமாக அரசாங்கம் பாடங்களைக்கற்று தமது பெறுபேறுகளை முன்னேற்றிக்கொள்வதற்கு வழி கிட்டுகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டமானது இலங்கையர்கள் வேண்டிநிற்கும் பொறுப்புக்கூறும் தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும்

மேலும் வெளிப்படைத்தன்மை உடையதும் மேம்பட்ட ரீதியில் அணுகக்கூடியதுமான அரசாங்கத்தை மக்கள் கோரியதிலிருந்தே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கருக்கொண்டது. இந்த சட்டத்திற்கு பாராளுமன்றமும் பச்சைக்கொடி காண்பித்தது.  தற்போது பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற விண்ணப்பங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  எந்தத் தகவல்களை எவ்வாறாக பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும் என்பது தொடர்பாக இவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்கள்.

தகவல் அறியும உரிமைச் சட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலானது இலட்சியகரமான சீர்திருத்தங்களுக்கான பரந்துபட்டரீதியிலான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கு வழிகோலும். “ தம்மிடமிருந்து பங்களிப்பைக் கோரிநிற்கின்ற அரசாங்கமானது வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொண்டு பொதுமக்களான தமது வேண்டுகோள்களின் அடிப்படையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முன்வருவதாக பொதுமக்கள் உணருகின்றபோது அது ஒத்துழைப்பையும் இணக்கத்தன்மையையும் மேம்படுத்தும்” எனச் சுட்டிக்காட்டுகின்றார். உலக வங்கியின் துணைத்தலைவர் ஜான் வலிஸர். “இவ்வாறான சீர்திருந்தங்களை முன்னெடுக்கும் போது மாத்திரம் வெளிப்படைத்தன்மையானது முக்கியமானதல்ல மாறாக அரசாங்கத்திற்கும் அந்த அரசாங்கம் செயற்படுகின்ற சூழ்நிலைக்கும் இந்த வெளிப்படைத்தன்மையானது முக்கியமானதாகும்”


Api
Api

Interview with Sri Lankan network TV 1

Welcome