செய்தி வெளியீடு

இலங்கையின் உயா் கல்வித்துறையை முன்னேற்ற உலக வங்கி நிதி உதவி

மே 12, 2017


வொஷிங்டன், மே 12, 2017, இலங்கையின் உயா் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதற்காக 100 மில்லியன் அமொிக்க டொலா்களை வழக்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளா்சபை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த புதிய முன்முயற்சியானது,  உயா் கல்வித் துறையின் முன்னுாிமைக்குாிய பிாிவுகளில் அதிகமானவா்களை உள்வாங்குவதற்கும், பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் தரத்தை முன்னேற்றுவதற்கும்,  ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உதவும்.

2003 ஆம் ஆண்டு முதல் உயா் கல்வித்துறையில் பெறப்பட்ட அனுபவங்களில் இருந்து  விருத்திசெய்யப்பட்ட AHEAD எனப்படும் புதிய உயா் கல்வி விாிவாக்கல் மற்றும் அபிவிருத்தி துாித்தப்படுத்தல் திட்டமானது  உலக வங்கியின் Program for Results lending instrument.  ”பெறுபேறுகளைத் தரும் கடன் கருவி” திட்ட நிதியுதவியை  பயன்படுத்தும் முதலாவது திட்டமாகும்.  நிலைபேறான அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைவதற்காக நிறுவனரீதியான திறன்களை கட்டியெழுப்புதில் இத்திட்டம் கவனம் செலுத்துகின்றது.

 “ மேல் நடுத்தர வா்க்க நாடு என்ற நிலையை எய்துவதற்கான இலங்கையின் அபிலாஷையானது நாட்டிலுள்ள மக்கள் எந்தளவிற்கு திறனுள்ளவா்களாகவும் பல்துறைசாா் ஆற்றலைக்கொண்டவா்களாகவும் இருப்பதிலேயே தங்கியுள்ளது” என உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளா் ஐடா சுவராய் ரிடில்கொவ் தொிவித்தாா். ”இந்த நாட்டின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய அதிக திறன்களைக் கொண்ட விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள், மருத்துவா்கள், தொழில்முயற்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், கல்விமான்கள்  மற்றும் ஆசிாியா்களை உயா் கல்விக் கட்டமைப்பானது உருவாக்கவேண்டும்.  நாட்டில் போட்டித்தன்மையை முன்னேற்றுவதும் வளா்ச்சியை ஏற்படுத்துவதும் இலங்கை அரசாங்கத்தின்  முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த முயற்சியில் அவா்களுக்கு ஒத்துழைப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என அவா் மேலும் தொிவித்தாா்.

2004 ஆம் ஆண்டில் உயர் கல்வி பங்கேற்பு தொடர்பான 115 நாடுகளில் 88 இடத்தில இலங்கை இருந்தது. மேலும் கீழ் மத்திய வர்க்க நாடுகளில் உயர் கல்வித்துறைக்கான ஆட்சேர்ப்பு வீதமானது சராசரியாக 44 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை, இலங்கையிலோ 21 வீதமாக காணப்படுகின்றது.  பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படும் விஞ்ஞானம் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் பங்கேற்பதை முன்னேற்றம் காணச்செய்வதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

AHEAD திட்டத்தின் முக்கிய கவனத்திற்குரித்தான பகுதியாக பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கல்வித்தராதரத்தை அதிகரிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் நவீன கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளை விரிவாக்க வகைசெய்தல் மற்றும் மதிப்பீட்டு முறைமையை மேம்படுத்துதல் ஆகியன அமைந்துள்ளன. பட்டதாரிகளின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை வலுப்படுத்தல் குறித்தும் அவதானம் செலுத்தப்படுகின்றது.

“அரசாங்கத்தின் பெறுபேறுகளை நோக்காகக் கொண்ட உயர் கல்வி அபிவிருத்தி மூலோபாயத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற முதலாவது முன்முயற்சியாக இது அமைந்துள்ளது.” என முன்னணி கல்வி விசேடத்துவவியலாளரும் பணித்திட்ட தலைவருமான ஹர்ஸ அடுருபனே தெரிவித்தார். “மேல் நடுத்தர வருமானமுள்ள நாடாக வளர்ச்சிகாணும் இலங்கையின் அபிலாஷைகளை சந்திப்பதற்கு அறிவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியன அதிகமாக தேவைப்படும் துறைகளையும் சேவையையும்  விரிவுபடுத்துவதற்கு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்“

மாறுபட்ட பல உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 600,000 மாணவர்களும் ஏறத்தாழ 5,000 கல்விமான்கள் முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் 2023 ஆம் ஆண்டு நிறைவு காலப்பகுதியைக் கொண்ட இத்திட்டத்தின் ஆறு ஆண்டு காலப்பகுதியில் நேரடியாகப் பயனடையவுள்ளனர். இந்தத்திட்டத்தின் மூலமாக சிறப்பான தராதரம் கொண்ட பல்கலைக்கழக பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்த முடியுமாகையால் தனியார் துறையினர் அரசாங்கத்தரப்பினரும் பயனடைவர். பரந்துபட்ட கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும்முன்னேற்றங்கள் மூலமாக எதிர்கால பல்கலைக்கழக மாணவ சந்ததியினரும் பணியாளர்களும் பயனடைவர்.  ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க செயற்பாடுகளால் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதி ஒத்துழைப்பானது புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச ((IBRD) வங்கியிடமிருந்து பெறப்படும் 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்திலிருந்து ((IDA) வழங்கப்படும் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி ஆகியன மூலமே சாத்தியமாகின்றது. உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு பல்கலைக்கழக மானியக் குழு மேம்பட்ட தொழில் நுட்பக் கல்விக்கான இலங்கை நிறுவனம் ஆகியன தேசிய மட்டத்தில் இத்திட்டத்தின் நடைமுறைக்கிடல் பங்காளர்களாக இருப்பர். பதினைந்து அரச துறை பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியன நிறுவனரீதியான மட்டத்தில் நடைமுறைக்கிடல் பங்களார்களாக இருப்பர்.

ஊடகத் தொடர்பாளர்கள்
ஊர் Washington:
Elena Karaban
தொலை: ekaraban@worldbank.org
+1 (202) 473-9277
ஊர் Colombo:
Dilinika Peiris
தொலை: +94 (011) 5561347
dpeiris@worldbank.org

வாய்ப்பு வளங்கள்



Api
Api

Welcome