சிறப்பம்சக் கதை

நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்த சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்

ஜூன் 5, 2017


Image
Photo Credit: Mokshana Wijeyeratne

கதை சிறப்புக்கூறுகள்
  • இலங்கையின் ஏராளமான இயற்கைவளங்கள் மற்றும் நிறைவான உயிர்ப்பல்வகைமை ஆகியவற்றைப் பாதுகாப்பது நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வலுவான பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது.
  • அனர்த்தங்களின் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களைக் குறைப்பதற்கு சுற்றாடல் மதிப்பீடுகளை உள்வாங்கிக்கொள்ளுதல் மற்றும் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்பகட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிடுதல் அவசியமாகும்.
  • இலங்கையின் கட்டமைப்புக்களும் கொள்கைகளும் பிராந்தியத்திலுள்ள மிகச்சிறந்தவற்றுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. தற்போது நடைமுறைப்படுத்தலே சவாலாகவுள்ளது.

இலங்கையின் தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்டவெள்ளம் மாலக்க ரொட்றிகோவைப் போன்று பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டுள்ளது. மாத்தறையிலுள்ள தனது வீட்டையும் விட்டுவைத்திராத வெள்ளமானது வடிந்து செல்வதைப் பார்க்கையில் அவர் தம் மனது ஆறுதலடைந்தாலும் “ இந்தப் பகுதி வழமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை” என்று கூறுகையில் வருத்தம் வெளிப்பட்டது. அவரது வீட்டிற்கு அருகாமையில்; காணப்படும் நில்வளா கங்கையினூடாக அடித்துச் செல்லப்படும் நீரைகட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய ஆற்றல் இயல்பாக அவ் ஆற்றின் அணைகளுக்கு உள்ளன. ஆனால் இம்முறை கொட்டித்தீர்த்த கனமழையால் அந்தக்கட்டுக்களை உடைத்துக்கொண்டு நீர் ஊரின் உள்ளே புகுந்து அனர்த்தமிழைத்தது.

தம் சிறுபராயத்தில் தம்முடையவீட்டைச் சுற்றிப் பலகால்வாய்கள் இருந்தமை மாலக்கரொட்ரிகோவிற்கு இன்னமும் ஞாபகமுள்ளது. ஆனபோதும் அன்றிருந்த கால்வாய்களில் பலவும் புதியவீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் அமைப்பதற்காக நிரப்பப்பட்டுவிட்டன.

போருக்குப் பிந்திய அபிவிருத்தியானது வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் ஏராளமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் நிறைவான உயிர்ப்பல்வகைமையை பேணிக்காப்பதும் நாட்டுமக்களின் நலனுக்கும் வலுவான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் இன்றியமையாததொன்றாகத் திகழ்கின்றது.

இன்றையதினம் உலகசுற்றாடல் தினத்தை முதன்மையாக அடையாளப்படுத்துகையில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாதவகையில் இலங்கை எங்ஙனம் அதன் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்போகின்றது என்பதும் அபிவிருத்திக்கான பாதையைஎ ங்ஙனம் வடிவமைக்கப் போகின்றது ? என்றச வால் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

சுற்றாடலுக்கு சாதகமான கொள்கைகளை நடைமுறைக்கிடல்

வறுமையானது தொடர்ச்சியாக காணப்படும் சுற்றாடல் பிரச்சனைகளில் ஒன்றாக இலங்கையில் இருந்துவருகின்றது. உதாரணமாக நோக்குமிடத்து வாழ்வாதாரத்தைதேடிச் செல்கின்ற மக்கள் அடிக்கடி காடுகளுக்குரித்தான நிலப்பகுதியை அத்துமீறிக் கையகப்படுத்திக் கொள்வதுண்டு. இலங்கையின் ஒட்டு மொத்தநிலப்பகுதியில் 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியில் 70 வீதமாக பரவிக்கிடந்த காடுகள் தற்போதோ குறைவடைந்து 29.7 வீதமாக மாத்திரம் காணப்படுகின்றது என வன இலாகா திணைக்களம் மதிப்பீடொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

காடுகளை அழிப்பதும் திட்டமிடப்படாத அபிவிருத்தியும் வெள்ள அனர்த்தத்தின் கனதியை அதிகரிப்பதில் முக்கியமான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றபோதும் அதிகரிக்கும் சனத்தொகை, விவசாயப் பாவனைக்காக மேலும் அதிகமான நிலப்பகுதியை மாற்றியமைத்தல் மற்றும் துரிதமான நகரமயமாக்கல் என்பன போன்ற விடயங்களும் இதற்கானமேலும் காரணங்களாக அமைந்துள்ளன..

இயற்கைஅனர்த்தங்களால் ஏற்படும் தாக்கங்களின் அளவைக் குறைக்கவும் அபிவிருத்தித்திட்டங்களின் உச்சபட்சபலாபலனைப் பெற்றுக்கொள்ளவும் அபிவிருத்தி நடைமுறைகளுக்கான சுற்றாடலியல் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதனுடன்  கூடியதாக நிலவமைப்பு முகாமைத்துவம் தொடர்பான முழுமையான புரிந்துணர்வு அவசியமாகும்.  இரண்டாவது விடயமானது பிரச்சனைகள் வரமுன்பாக அவற்றைத் தடுப்பதற்கு உதவுகின்றது. இவற்றுள் சிறந்தகொள்கைக் கட்டமைப்புக்களை உள்வாங்கிக்கொள்ளுவதும் பலதரப்பட்ட பங்குதாரர்களுக்கிடையில் வினைத்திறன்மிக்க தொடர்பாடல் வழிகளைக்கட்டியெழுப்பவதும் இறுக்கமானமுறையில் சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைக்குட்படுத்துவதும் சமமளவில் முக்கியத்துவமுடையவையாகக் காணப்படுகின்றன.

முன்னோக்கிய சூழலியல் கொள்கைகளைக் கொண்ட நாடாக இலங்கை இன்றையநிலையில் பிராந்தியத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றாடலைப் பேணிப் பாதுகாத்து ஒழுங்கமைப்பதற்கான பல்வேறு சட்டதிட்டங்களையும் நிறுவனங்களையும் உள்ளடக்கியதான கொள்கைகளைக் கொண்டநாடாக இலங்கை தன்னைநிலைநிறுத்திக்கொண்டுள்ளது. ஆனாலும் உண்மையானசவாலாக இவற்றைநடைமுறைக்கிடுவதே காணப்படுகின்றது.

இலங்கையின் நகரங்கள் தற்போது சரியானதிசையில் முன்னோக்கிய அடியெடுத்துவைக்கத் தொடங்கியுள்ளன. அவை தற்போது தீவிரமான காலநிலைநி கழ்வுகளால் உருவாகும் புதிய சவால்களுக்குஏ ற்புடையதாக மாற்றிக்கொள்ளும் நடைமுறைக்குள்ளாகிவருகின்றன..உதாரணமாக நோக்குமிடத்து கொழும்பு பெருநகரத் திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் Metro Colombo Urban Development Project (MCUDP) கீழ் சுமார் 16 லட்சம் மக்கள் வெள்ள அனர்த்த தவிர்ப்பு நடவடிக்கைகளால் நன்மையடையவுள்ளனர். 

இந்த இலட்சியகரமான பொருளாதார மற்றும் பௌதீக மீளுருவாக்கதிட்டமானது அவசரகாலச் சூழ்நிலைகளின்போது மக்களையும் வியாபாரங்களையும் பாதுகாக்கும் அதேவேளை இயற்றை அனர்த்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான செலவுகளையும் குறைக்கவழிகோலும்.

பணியில் தன்னார்வத் தொண்டர்கள்

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் சமூகஅபிவிருத்திக்கானசர்வதேசஅமைப்பைச் சேர்ந்ததன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

28 வயதுடைய நிமந்தி ஆரியசிங்கவும் அந்ததொண்டர்களில் ஒருவர். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து தனது நாட்களை முன்னுதாரணமாக நிமந்தி நகர்த்திக்கொண்டிருக்கின்றார்.

இயற்கைஅனர்த்தமொன்று இடம்பெறுவதற்கு முன்பாகவே பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என உலகவங்கியின் சுற்றாடல்துறை சிறப்பியலாளர் தர்ஷனி டி சில்வா தெரிவிக்கின்றார்.  வரையறுக்கப்பட்ட ஆற்று ஓதுக்கிடங்களில் வாழும் சமூகத்தினரை மீளக்குடியமர்த்துவதாகவோ அன்றேல் பருவமழைவருவதற்கு முன்பாக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆபத்திற்குரியபகுதிகளில் இருந்துவேறிடங்களுக்கு நகர்த்துவதாகவோ இதனைஅர்த்தம் கொள்ளமுடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்தமுயற்சிகள் வெற்றியளிக்கவேண்டுமானால் மக்கள் அரசுடன் இணைந்து மிகநெருக்கமாக பணியாற்றவேண்டும். “வெள்ளம் எப்போதுவரும் எங்குவரும் ,இயற்கை அனர்த்தங்களின் போது எவ்வாறுமுகங்கொடுப்பது? உதாரணமாக பாதுகாப்பான இடங்கள் எங்கு அமைந்துள்ளன போன்ற விடயங்களில் எமது மக்கள் அறிவூட்டப்படுவார்ளே யானால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்”என்கிறார் ஆரியசிங்க .   “ இயற்கைஅனர்த்தங்கள் தொடர்பாக சிறுவர்களுக்கு அறிவூட்டுகின்ற செயற்பாட்டை பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.

 “தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்புடையவகையில் சமூகங்களை வலுவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் இருக்கவேண்டும்” என்று ஏற்றுக்கொள்ளும் மாலகரொட்றிகோ“ மக்களை அறிவூட்டும் நடவடிக்கையைமுன்னெடுத்தால் அதிகமான உயிர்களைப் பாதுகாக்கமுடியும் ”என்கிறார்.

சமூக அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத்தொண்டர்களைப் பொறுத்தவரையில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் கடினமான பணிதொடர்ந்தும் காத்துக்கிடக்கின்றது.   தமதுசொந்தக்காலில் எழுந்து நிற்பதற் குமக்களுக்கு உதவிகள் தேவைப்படும்; அத்தோடுவெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ளவீடுகளையும் வியாபாரத்தலங்களையும் மீளமைப்பதற்குநேரமும் பணமும் தேவைப்படும்.

வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வைமீளமைப்பும் விடயத்தில் முன்னோக்கியுள்ளசவால்கள் மிகவும் பாரியதாக காணப்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்ளும் உலகவங்கியின் சுற்றாடல் சிறப்பியலாளர் ஆரியசிங்க பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுவதற்காக இலங்கையர்கள் எவ்வளவு விரைவாகதமதுநேரத்தையும் பணத்தையும் முன்வந்து வழங்க அணிதிரண்ட செயற்பாட்டையிட்டுதாம் பெருமைகொள்வதுடன் முன்னோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் நம்பிக்கைகொள்ளச்செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

அண்மையில் இடம்பெற்றதைப் போன்றவெள்ள அனர்த்தம் மீண்டும் ஏற்படாது தடுக்கமுடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்  கரிசனைமிக்கதாக கையாளப்படும் அபிவிருத்தி, நன்கு நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் தொடர்பாடல் மூலோபாயங்கள் அபாயவலயத்திற்குள் உள்ள சமூகங்கள் இழப்புக்களை தவிர்ப்பதற்கு வழிகோலும் என்கிறார்.  “ இலங்கையின் கொள்கைகளும் கட்டமைப்புக்களும் பிராந்தியத்தில் சிறப்பானதாகக் காணப்படுகின்றன”எனச் சுட்டிக்காட்டும் டி சில்வா“ அவற்றை நடைமுறைப்படுத்துவதே தற்போது நமக்குமுன்பாகஉள்ள சவாலாக அமைந்துள்ளது”எனத் தெரிவித்தார்.


Api
Api

Welcome