செய்தி வெளியீடு

இலங்கையின் சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இலங்கை மற்றும் உலக வங்கி

செப்டம்பர் 5, 2016


கொழும்பு - செப்ரம்பர் 5, 2016- தரம் குறைதல் மற்றும் இயற்கை வளங்களை சுரண்டல் என்பவற்றில் இருந்து இலங்கையின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் வளங்களை பாதுகாப்பதற்கு உதவியாக 45 மில்லியன் டொலர்கள் கடனில் இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் இன்று கைச்சாத்திட்டன. இயற்கை வளங்களின் இழப்பு மற்றும் தரம் குறைதலினால் அதிகளவு பாதிக்கப்படும் அயல் சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இந்த செயற்றிட்டம் உதவும்.

சூழல்தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவச் செயற்றிட்டமானது (ESCAMP) சுமார் 15,000 பேருக்கு பயனளிக்கும். அவர்களில் 30 வீதம் பெண்களாகும். அவர்களில் பெரும்பாலானோர் ஒதுக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களாகும். போட்டித்திறன் மிக்க மற்றும் பொருத்தமான வாழ்வாதார சந்தர்ப்பங்களை அறிமுகம் செய்வதன் மூலம் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்து, போஷிக்கும். வனவிலங்கு திணைக்களம் மற்றும் வன திணைக்களத்தின் ஊடாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் முகாமைத்துவத்திற்கு இந்த செயற்றிட்டம் ஆதரவளிக்கும். பல்வேறுபட்ட பங்குதாரர்கள் மத்தியில் மேம்படுத்தப்பட்ட கள முகாமைத்துவம், சிறந்த விழிப்புணர்வு மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் தொடர்பான மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் இயற்கைசார் சுற்றுலாத்துறையின் அதிகரித்த அளவு என்பன சில எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளாகும்.

“சிறந்த சூழல்தொகுதியுடன் இலங்கை ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் சூழல்தொகுதி என்பவற்றுக்கு இடையில் சமநிலையை பேணுவது என்பது மிகவும் முக்கியமாகும். சூழல்தொகுதியை பாதுகாப்பது மாத்திரமின்றி, வறுமையில் இருந்து மீள்வதற்கு மக்களுக்கு உதவவும் வேண்டும்” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் Idah Pswarayi-Riddihough தெரிவித்தார். “இந்த இயற்கை பாரம்பரியத்தை முகாமை செய்வதே அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும். நன்கு முகாமை செய்யப்பட்ட சூழல்தொகுதியின் பயன்களில், மேம்படுத்தப்பட்ட தேசிய பொருளாதாரமும், மனித-வனவிலங்கு முரண்பாடு மற்றும் காலநிலை மாற்ற விளைவுகள் போன்ற சவால்களை அடையாளம் காணல் என்பன உள்ளடங்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அதேவேளைஇ இலங்கையின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு சுற்றுச் சூழல் முகாமைத்துவம் மற்றும் வாரிசுகளின் முக்கியத்துவத்தினை உலக வங்கி குழுவின் அண்மைய மதிப்பீடான முறைசார் வதிவிட கண்டறிதல் (SCD) சுட்டிக்காட்டுகின்றது.

“இலங்கை முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வேறு உயிரியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொறுப்பான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தினை இந்த செயற்றிட்டம் மேம்படுத்தும்” என சிரேஷ்ட சுற்றுச்சூழல் நிபுணரும், செயற்றிட்ட செயலணியின் தலைவருமான தர்ஷனி டி சில்வா தெரிவித்தார். “தமது நிறுவன கட்டளைகள் தொடர்பில் பாதுகாப்பினை வழங்குவதற்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் வன திணைக்களத்தின் இயலுமையை விருத்தி செய்யும் அதேவேளை, முக்கியமான சூழல்தொகுதியில் மற்றும் பயன் பகிரலில், கூருணர்வுமிக்க சூழல்தொகுதியில் இணக்கமான அபிவிருத்தியை முன்னிறுத்துவதற்கு, விஜயம் செய்பவர் சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கு மற்றும் காட்டு மற்றும் வனவிலங்கு வளங்களின் ஆற்றலை பெருக்குவதற்கு, பாதுகாப்பில் பங்குபற்றலை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் வாழும் சமுதாயங்களின் நிலைத்த உறவுகளை உருவாக்க அவை உதவும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுற்றுச்சூழல் நடவடிக்கை திட்டமான, புனருதயவிற்கு இணையாக காட்டுப் பகுதியை பரவலாக்கும் அரசாங்கத்தின் கொள்கையுடன் இந்த செயற்றிட்டம் பொருந்துகின்றது. மனித-யானை சகவாழ்வு பொறியமைப்புக்களை அது விருத்தி செய்வதுடன், விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் நீர்நிலைகளை பாதுகாக்கும். அத்துடன், காலநிலை மற்றும் அனர்த்த அபாயங்களின் சமூக உள்ளடக்கலுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, காடழித்தல் மற்றும் காட்டு சீரழிவினால் உமிழ்யுகளை குறைப்பது (REDD+) தொடர்பான மூலோபாயத்தையும், நிலையான நீர், விவசாயம் மற்றும் சக்தி முயற்சிகளை முன்னிறுத்துவதற்கான கொள்கைகளையும் இந்த செயற்றிட்டம் மீள அமுலாக்கும்.

உலக வங்கியின் சலுகைக் கடன் வழங்கும் பிரிவான சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் (IDA), 5 வருட மேலதிக காலம் உள்ளடங்கலாக 25 வருடங்கள் முதிர்ச்சி காலப்பகுதியுடன்,  இந்த செயற்றிட்டத்திற்கான கடன் வழங்கப்படுகின்றது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சானது, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சின் நெருங்கிய பங்காளித்துவத்துடன் இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

ஊடகத் தொடர்பாளர்கள்
ஊர் Washington
Joe Qian
தொலை: +1 (202) 473 56331
jqian@worldbank.org
ஊர் Colombo
Dilinika Peiris-Holsinger
தொலை: +94 (011) 5561347
dpeiris@worldbank.org

வாய்ப்பு வளங்கள்


Api
Api

Welcome