Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை பிப்ரவரி 14, 2019

இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலைவரம் (SLDU) : இலங்கையின் மக்கள்தொகை மாற்றத்தை வழிப்படுத்தல்

Image

Download இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலைவரம் (SLDU) : இலங்கையின் மக்கள்தொகை மாற்றத்தை வழிப்படுத்தல்

 


கதை சிறப்புக்கூறுகள்

  • பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், இலங்கையில் வறுமை என்பது வலுவான பொருளாதார வளர்ச்சிகாரணமாக தொடர்ச்சியாக குறைவடைந்துவருகின்றது.
  • அதிகரித்த அளவிலான கடன்கள் விடயத்தைக் கையாள்வதற்காக இலங்கை கொள்கைகளை வகுத்துள்ளது. ஆனால் முக்கியமான கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்களின் வேகமானது மந்தமாகவுள்ளது.
  • குறைவடைந்து வருகின்ற தொழில்செய்யும் வயதுடைய சனத்தொகையானது வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் அத்தோடு ஓய்வுதியத்தைப் பாதிக்கும். தொழில் முயற்சியாண்மை ,கல்வி மற்றும் தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியன இந்த மக்கள்தொகை மாற்றத்தைத் தடுக்க முடியும்.

உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலைவர (SLDU) அறிக்கையின் புதிய பிரசுரத்தில் இந்த தீவகமானது சவால்மிக்க பேரினப் பொருளாதாரக் களவமைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மோதலுக்குப் பிந்திய உயர் வளர்ச்சி போக்கானது வேகம் குறைந்துவிட்டது. கொந்தளிப்பான உலகளாவிய சூழல் மற்றும் கட்டமைப்பு ரீதியான பலவீனமான போட்டித்தன்மை தொடர்ந்தும் வளர்ச்சியையும் வெளித்துறை செயற்திறனையும் நலிவுறுச்செய்துவருகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட நிதித்துறை முன்னேற்றங்களையும் அதிகரித்த வட்டி செலவீனங்கள் உருமறைப்புச் செய்துவருகின்றன.

அறிக்கை விசேடமாக  மக்கள் தொகை கட்டமைப்புடன் தொடர்புபட்டுள்ள சவால்கள் குறித்து கவனம் செலுத்துவதுடன் இலங்கை எதிர்வரும் தசாப்தங்களிற்கு தயாராவதற்கு பல வருட கொள்கை சீர்திருத்தமும் ஸ்தாபனரீதியான வலுப்படுத்தலையும் பரிந்துரை செய்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தில் கடந்த ஆறு மாதத்தில் இடம்பெற்ற முக்கிய விடயங்களை ஆய்வு செய்யும் SLDU யுத்தத்திற்கு பிந்தைய கால வளர்ச்சி குறைவடைந்துள்ளது என தெரிவிக்கின்றது. எனினும் அரசியல்ஸ்திரதன்மை மற்றும் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுதல் ஆகியவை காணப்பட்டால்  பொதுவான கண்ணோட்டம் ஸ்திரமானதாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நிலைவரம் தொடர்ந்தும் குழப்பகரமானதாக காணப்படும் ஒரு நிலையில்  இலங்கை  உரிய நடவடிக்கைகளை எடுத்து முன்னேற்றம்கண்டுவருகின்றது. உள்நாட்டு இறைவரிச்சட்டம், பொறுப்பு முகாமைத்துவ சட்டம் (Active Liability Management Act ) நிறைவேற்றப்பட்டமை,போன்றவை 2019 மற்றும் அதன் பின்னரும்  அதிகரிக்கக்கூடிய வெளிநாட்டு கடன்  மீள்நிதியிடல் ஆபத்துக்களை இலங்கை எதிர்கொள்வதற்கு தயாராக உதவுகின்றது.

'அதிகளவு பலாபலன்களை பெறுவதற்கு முன்னையை சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது அவசியம்'; என  SLDU வினை எழுதியவரும் இலங்கை மாலைதீவிற்கான சிரேஸ்ட பொருளாதார நிபுணருமான பெர்ணாண்டோ தெரிவிக்கின்றார். பொதுநிதி முகாமைத்துவத்தை மேலும் பலப்படுத்துதல் சமூகப் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு அளித்தல் ,  சமூக பாதுகாப்பினை இலக்குவைத்தால் போன்ற  எதிர்கால சீர்திருத்தங்கள் உயர் அபிவிருத்தி தாக்கங்களை வழங்கலாம் என தெரிவிக்கின்றார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சமீபத்தைய அபிவிருத்திகள் பின்வருமாறு:

இலங்கையின் கடன்கள் குறிப்பிடத்தக்க ஆபத்தை கொண்டுள்ளன

இலங்கையின் மத்திய அரசாங்கத்தின் கடன் மிகவும் உயர்வானதாக காணப்படுகின்றது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 வீதமாக இது காணப்படுகின்றது.நாடு உயர் நடுத்தர வருமான நாடு என்ற நிலையை நோக்கி நகரும் நிலையில் அது வர்த்தக அடிப்படையில் அதிகளவு செலவு மற்றும் ஆபத்துக்களை உள்ளடக்கிய கடன்களை பெறுகின்றது.

வெளிநாட்டு  நாணயங்களை அடிப்படையாக கொண்ட பெரும்பாலான கடன்கள் சர்வதேச சொவொறின் பிணைகள் இலங்கையின் அபிவிருத்தி பிணை முறிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்தை கடன்களாக காணப்படுகின்றன.இது 2017 இல் 53 வீதமாக காணப்பட்டது.2000 ம் ஆண்டில் இது மூன்றுவீதமாக காணப்பட்டது.

2019 முதல் 2023 மற்றும் 2025 முதல் 2028 வரையிலான காலப்பகுதியில் யுரோ பிணைமுறியில் திருப்பி செலுத்தப்படவேண்டிய முழுமையான தொகை 12.15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கைக்கு புதிய விடயம் என தெரிவித்துள்ள SLDU இது இலங்கையை மீளசெலுத்தும் நெருக்கடிக்குள் சிக்கவைக்கலாம் எனவும் தெரிவிக்கின்றது.

இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த ஆபத்துகளை தவிர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைத்துள்ளது. எனினும் முக்கிய சீர்திருத்தங்கள் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவது கரிசனைக்குரிய விடயமாக உள்ளது.

கடன் முகாமைத்துவத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆபத்துக்களையும் செலவுகளையும் கையாள்வதில் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இது உள்ளுர் நிதிச்சந்தையை அபிவிருத்தி செய்யவும் நிதியை பெறுவதற்கான வழிமுறையை அதிகரிக்கவும் வழிகோலுகின்றது.

 


"அதிகளவு பலாபலன்களை பெறுவதற்கு முன்னையை சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது அவசியம்"
Fernando Im
Senior Country Economist for Sri Lanka and the Maldives

Image

வறுமை வேகமாக குறைவடைகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க வறுமை காணப்படும் பகுதிகள் உள்ளன

கடந்த இரு தசாப்தத்தில்  இலங்கையின் பொருளாதாரம் துரித வேகத்தி;ல விரிவடைந்ததுடன் கடும் வறுமையை ஓழிப்பதற்கும் நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் காரணமாக 2013 இல் 15.4 வீதமாக காணப்பட்ட வறுமை 2016 இல் 9.7 வீதமாக குறைவடைந்தது. உலக வங்கியின் சர்வதேச வறுமை எல்லைக்கோடான  நாளொன்றிற்கு 3.20 அமெரிக்க டொலர் என்பதை அடிப்படையாக வைத்து இது மதிப்பிடப்பட்டது.

2015 இல் சமுர்த்தி திட்டம் விஸ்தரிக்கப்பட்டமை,பலாபலன்களை வழங்கியது.சமூக உதவிகளை மேலும் சிறந்த விதத்தில் இலக்குவைத்திருந்தால் இன்னும் சிறந்த பலாபலன்கள் கிடைத்திருக்கும்.

எனினும் பெருமளவு மக்கள் மீண்டும் வறுமையில் சிக்குவதற்கு சிறிய அதிர்ச்சியே போதும் என்ற நிலையே காணப்படுவதை கருத்தில் கொள்வது அவசியம் என அறிக்கை தெரிவிக்கின்றது.

மோசமான காலநிலை கடந்த சில வருடங்களில் தாக்கத்தை செலுத்தக்கூடியதாக மாறியுள்ளது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

பல மாவட்டங்களிற்கு இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.வடக்குகிழக்கு மாவட்டங்களில் அதிகளவு வறுமை காணப்படுகின்றது. இரத்தினபுரி,கண்டி, பதுளை ஆகியமாவட்டங்களில் வறுமையில் உள்ள மக்களில் நான்கில் ஒரு வீதத்தினர் காணப்படுகி;ன்றனர்.மனித முதலீடு,அடிப்படை சேவைகள்,வேலைகள் கிடைப்பது சந்தைகளை அணுககூடியதாகவுள்ளமை போன்ற  பல்வேறு விடயங்களிற்கு  தீர்வை காண்பதற்கு இலங்கை பல்வேறு தந்திரோபாயங்களை முன்வைக்கவேண்டும்..

Image

இலங்கை தீவிர மக்கள் தொகைமாற்றத்தை சந்தித்து வருகின்றது-இதனை எதிர்கொள்வதற்கு நாடு இன்னமும் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

உலகின் ஏனைய பல நாடுகளை போல இலங்கையும் பாரிய மக்கள் தொகை மாற்றத்தை அச்சத்துடன் பார்த்தவாறு உள்ளது. இலங்கையின் தொழில்புரியும் வயது சனத்தொகை 2005 இல் அதிகரித்தது,எனினும் இது மெல்ல மெல்ல வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகி;ன்றது. இது தொழிலாளர்கள் கிடைப்பது,சுகாதாரம் இகல்வி போன்ற சேவை துறைகளின் வழங்குதல் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் ஓய்வுதீயம் வேலைவாய்ப்பு பொதுநிதி போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மிகவேகமாக அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கைக்கு ஆதரவளிக்கும் விதத்தில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு வழிகாட்டும் ஆதரவு குறித்தும் கரிசனை காணப்படுகின்றது.

அதிகரிக்கும் செலவீனங்கள் காரணமாக அரச ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகளை வழங்குவதற்கு நீண்டகால அடிப்படையில் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.

அதேவேளை தனியார் துறையினருக்கான ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத் (EPF) திட்டம் இரண்டு வருடகால ஓய்வுதீயத்துடன் தொடர்புபட்ட செலவீனங்களை எதிர்கொள்வதற்கு போதியதாக காணப்படவில்லை.

கடும் சவால்கள் காணப்படுவதை எதிர்பார்க்கலாம், தொழிலாளர் ஆற்றல் எல்லையை பரந்துபட்டதாக்குவதற்கு விநியோகத்தின்  பல்வேறு அம்சங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

கல்வி இலக்குகளிற்கு முன்னுரிமையளிப்பதன் மூலம்,தொழில்சந்தையில் பட்டதாரிகள் எதிர்கொள்ளும திறன் இன்மைக்கு காரணமான திறன்களை முன்னேற்றுதல்,தொழில்முனைவோரை ஊக்குவித்து வளர்த்தெடுத்தல்,போன்றவற்றின் மூலம் இளம் தலைமுறையினர் தொழிலாளர் படையில் பங்களிப்பு செய்வதற்கான உந்துதலை வழங்கலாம்.

இறுதியாக பெண் தொழிலாளர் படையணியை அதிகரிப்பதன் மூலம்  மக்கள் தொகைமாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.




Api
Api