Skip to Main Navigation
பேச்சுக்கள் & எழுத்துப்படிவங்கள் ஜூன் 28, 2018

இலங்கையில் தொழில்களின் எதிர்காலம் இளையோரின் கைகளில்

குழுநிலை கலந்துரையாடலின் அங்கத்தவர்களே,மதிப்பார்ந்த விருந்தினர்களே, சகாக்களே, இந்தக் காலைப்பொழுதில் எம்மோடு இணைந்துகொண்ட உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறேன்.இந்த வருடத்தின் மிக மும்முரமாக காலப்பகுதியாக இருந்தும் இங்கே வருகை தந்துள்ள உங்களுக்கு எமது நன்றிகள்.

இலங்கை அபிவிருத்தி பற்றிய மேம்பாட்டு அறிக்கையானது வருடாந்தம் இரு தடவைகள் வெளியிடப்படும் உலக வங்கியின் நுண் பொருளாதாரவியல் பதிப்பு. இது தற்போதைய நிலையில் பொருளாதாரத்தின் நிலைகள் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்கும் அதன் வழி மத்திய முதல் நீண்ட காலத்துக்கான பெறுபேறுகளின் கனதியான எதிர்வுகூறலை வழங்குவதற்குமாகும். இந்த வழியில் வெளிப்படுத்தப்படுகின்ற வாய்ப்புக்களையும் சவால்களையும் கூட இது கவனம் செலுத்துகிறது.  திட்டமிடல் வல்லுநர்கள், வர்த்தக முனைவோர், நிதியியல் சந்தைப் பங்காளர்கள், பொதுமக்கள்,  இலங்கையின் பொருளாதார முன்னற்றத்தில் அக்கறை காட்டுகின்றஆய்வாளர்கள் மற்றும் தொத்தில்துறை சார்ந்தோர் எனப் பரந்து விரிந்த  பல்வேறுபட்ட சபையோருக்கு  இந்த வெளியீடு போய்ச்சேரவேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்துகிறோம். 

நண்பர்களே, என் சகா ரல்ப் நாம் 6 மாதங்களுக்கு முதல் இறுதியாக இந்த அறிக்கையை வெளியிட்டதிலிருந்து இலங்கை கண்டா முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றி துரிதமாக ஒரு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவார். 

இரண்டாவதாக, இலங்கைக்கோ உலகிலுள்ள ஏனைய பல நாடுகளுக்கோ முக்கியத்துவமற்ற சவாலாக அமையாத தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது பற்றி அவர் தனது கவனத்தை செலுத்துவார்.

எங்களது இந்த அபிவிருத்தி பற்றிய மேம்படுத்தல் தகவல்கள், தகவல்களையும் புள்ளி விபரங்களையும் உள்ளடக்கக்கூடியதாகவும், அவற்றை திரட்டி பகுப்பாய்வு செய்து அதன்மூலம் பக்கச்சார்பற்றதும் நடுநிலையானதுமான முழுமையான பார்வையை நோக்காகக் கொண்டுள்ளது. நாங்கள் தரும் தகவல்களை மட்டும் மையாமாகக் கொண்டு நாம் தீர்மானம் ஒன்றுக்கு வருவதில்லை என்பதை நீங்கள் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இந்தத் தகவல்கள் ஆர்வமுள்ள தரப்புக்களுக்கிடையே ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதுமான விவாதங்களைத் தூண்டவேண்டுமென நாங்கள் விரும்புவதே இதற்கான காரணமாகும்.

நாம் தொழில்கள் பற்றிய இந்தத் தலைப்பை இரு முக்கிய காரணங்களுக்காகத் தெரிவுசெய்தொம். 2025 ஐ நோக்கிய பார்வை, 2018 பாதீடு இந்தத் தலைப்பை முக்கியமானதாகக் கோடிட்டுக் காட்டியது; கடந்த வருடம் நாம் வெளியிட்ட எமது நாட்டுக்கான திட்டமிடப்பட்ட நாட்டு ஆய்வறிக்கையிலும் தொழில்களானவை இலங்கையின் வளர்ச்சியின் இறுக்கமான பிணைப்புக்குரிய தடையாக இருப்பதைக் கண்டறிந்திருந்தோம். 

அண்மைக்காலமாக தொழில்கள் எவ்வாறு இயற்கையாவே துரிதமாக மாறி வருகின்றன என்று நாம் அறிகிறோம்; தொழிநுட்பமானது எவ்வாறு தொழிலின் வரைவிலக்கணத்தை மாற்றுவதாகவும் சீர்குலைக்கும் ஒன்றாகவே மாறுகிறது; அது எங்கே நடைபெறுகிறது. நான் பாடசாலையில் கல்விகற்றபோது எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்ததெல்லாம் நல்ல பெறுபேறுகளைப் பெறுவது, பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவது, நல்லதொரு பட்டம் பெறுவது,அதன் பின் எமக்கு பதவியையும் ஓய்வூதியத்தையும் தருகின்ற வேலையொன்றைப் பெற்றுக்கொள்வது ஆகியவையே. உத்தியோகங்கள் விரைவாக மாறுவது புத்திசாலித்தனமாகக் கருத்தப்படவுமில்லை, மாறாக இளைப்பாறும்வரை படிப்படியாக முன்னேறுவதே நல்லது என்று கருதப்பட்டது.

அது அன்றைய நிலை.

இன்று பல நடுத்தர வருமானம் தரும் நாடுகளில் இளையோர் புதுமைகளை உருவாக்கக்கூடிய தொழில்களில் கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றனர்; அது அவர்களுக்கு சவால்களை எடுக்க எதுவாக அமைவதோடு ஒரே தொழிலில் தமது வாழ்க்கையைக் கழிக்க விரும்புவதுமில்லை. மாறாக தொழில்களில் மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக்களை அவர்கள் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் விதவிதமான ஆற்றல்களைப் பெற்றுக்கொள்ளும் வழியாகவும் கருதுகிறார்கள். பலர் உறுதியாக நிறுவப்பட்ட மிகப் பெரும் பெயர்கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவதை மட்டும் கனவாகக் கொள்ளாமல்,தாமாக புதிய நிறுவனங்களை வளர்த்து அவை தொழிற்துறையில் உள்ள பெயர்பெற்ற பெரிய நிறுவனங்களால் வாங்கப்படும் அளவுக்கு முயல விரும்புகின்றனர். 

இந்த பரபரப்புப் பாணி, நடுத்தர அளவு ஊதிய நிலையிலிருந்தும் இன்னும் இலங்கையில் வேர்விட ஆரம்பிக்கவில்லை. நான் இங்கேயுள்ள இளையவரிடமிருந்து அதிகமாக் கேள்விப்படுவது எல்லாம், பெற்றோரின் இலட்சியங்களால் அவர்கள் வைத்தியர்களாகவோ அல்லது வழக்கறிஞர்களாகவோ வருவதற்கு அல்லது அரசாங்கத் துறையில் வேலை செய்வதற்கோ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே. 

என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எங்களுக்கு பொதுத் துறையில் பணியாற்றுவதற்கு வைத்தியர்களும் வழக்கறிஞர்களும் தேவை தான். ஆனால் அரசாங்கத்திலே இருக்கிற வரையறுக்கப்பட்ட பதவிகளில் எத்தனை பேர் உள்ளீர்க்கப்படுவார்கள்? இதன் விளைவு தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோரை விட தொழில் தேடுவோர் தான் அதிகரித்துள்ளார்கள்.

தொழில் என்பதன் கருத்தை நாம் மீள வரைவிலக்கணப்படுத்தவேண்டும் என்பதே எனது முன்மொழிவாகும். முறையான தொழிலுக்கு எதிராக முறைசாரா தொழில் என்று இரண்டாக பிரிக்கப்படக்கூடிய நிலை இப்போது கிடையாது; அல்லது வாழ்க்கை முழுவதும் ஒரே தொழிலில் இருக்க விரும்புகிற இளையோர் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள விரும்பத் தயாரில்லை. நாம் தொழில்களை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளவர்களாக இளையோர் உருவாவதை விரும்புகிறோம்,சமீபத்திய எதிர்காலத்தில் அப்படியானவை இருக்குமா என்பதைக்கூட எம்மிற்பலர் அறியமாட்டோம். கொள்கைகளை உருவாக்குவோர், தனியார் துறையினர், பொதுத் துறையினர் ஆகியோரை நாளைய கண்டுபிடிப்பாளராகவும் தொழில் தருனர்களாகவும் அவர்கள் மாறுவதற்கு உள்ள தடைகளைத் தளர்த்துவதற்கான அழுத்தங்களை அவர்கள் வழங்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 

ஆனால் இது தற்காலத்தில் தொழில் உலகத்தின் பல்வேறு அம்சங்களையும் சவாலுக்கு உட்படுத்தும். நாளைய தொழில்கள் முற்றிலும் வித்தியாசமாக அமையுமென்றால், தற்போதிருக்கும் கல்வித்திட்டம் எதிர்காலத்துக்குத் தேவையான புத்தாக்கத்துக்கும் திறன் வளர்ச்சிக்கும் எவ்வாறு உதவுவதாக அமையும்?

எவ்வாறு தொழிற்பயிற்சி மையங்கள் வாழ்நாளில் ஒரே தரம் மட்டும் வழங்கப்படும் பயிற்சியாக அமையலாம்  அமையாமல் தொடர்ந்து செல்லும் வகையில் இளையோரின் திறன் விருத்தியை வழங்குவதாக எவ்வாறு அமையவேண்டும். தொழில்கள் மெய்நிகர் நிலை நோக்கி செல்கின்ற நிலையில், ஒரே அலுவலகத்தில் அமர்ந்து மக்கள் வேலை செய்கின்ற மாதிரிகளா அல்லது வேறுவிதமான அலுவலக மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் தகுந்த வெளிப்பாடுகளையும் தாக்கத்தையும் வழங்கும் மாதிரிகளை உருவாக்கவேண்டுமா? 

இப்போதுள்ள நிலையான தொழில்களை தலைகீழாக மாற்றி மீண்டும் அதே வகையான தொழில் மாதிரிகளை உருவாக்கிவிட முடியாது.

தொழில்களிலிருந்து விலகுவதும் சேர்வதுமான, முறைசார்ந்தவற்றிலிருந்து முறை சாரா தொழில்களுக்கு மாறுகின்ற முறைகள் மீண்டும் உருவாகும் நடைமுறை இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பே இருக்கும் என்பதில் சிறியளவே ஐயமுள்ளது. சுலபமாக நகரும் இயல்பே எதிர்கால இளையோருக்கான முக்கிய வார்த்தையாக அமையப்போகிறது. ஆபத்துக்களை எதிர்கொள்ளுதல் என்பது எங்கள் தலைமுறையினரைவிட அவர்களுக்கு மிக இலகுவானதாக இருக்கும். அத்துடன் அவர்கள் அமைப்புமுறைகளைஇந்தப் புதிய நடைமுறைகளுக்கு ஏற்றதாக அமையும் விதமாக மாற்றியமைத்துக்கொள்ள உந்துவார்கள். 

சிலர் தோல்விகளை எதிர்கொள்ள நேரிடுவதால் வழிகளும் இருக்கும்; எனவே எதிர்காலத்தில் அவர்கள் தாம் விரும்பிய தொழில்களில் பணியாற்ற,தொழில்களை உருவாக்கிக்கொள்வதைத் தொடர்வதற்கு உதவுவதே எம் வகிபாகமாகும். எனவே, எல்லைகளை விரிவுபடுத்தி அடுத்த தொழிலதிபர்களாக வரும் எண்ணம் கொண்டுள்ள இளையோர் இந்த உலகம் உங்களுக்காகத் தயாராகவே உள்ளது. நீங்கள் உங்களுக்கான  ஆரம்ப முயற்சிகளை ஆதரிக்கக்கூடியவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய கேள்வியை ஏற்படுத்தவேண்டும் -  அத்துடன் தோல்விகளுக்கு அஞ்சவும் கூடாது. புதிய தலைமுறை தொழில்களை இடம் வழங்கி ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் இளையோர் தங்கள் திறன்களைப் பெற்றுக்கொள்ளும்வரை காத்திருக்காதீர் - அவர்களை அணுகி திறன்களை அபிவிருத்தி செய்ய உதவுவதோடு, புதுமைகளைக் கண்டறியக்கூடிய தளத்தை உருவாக்கிக் கொடுங்கள்.

 நன்மைகள் எல்லாப் பக்கங்களுக்கும் கிட்டும் என்பதில் சிறியளவு ஐயமே உள்ளது. 

இவை தான் என்னுடைய கண்ணோட்டங்கள். மற்றவர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்னுடைய பாத்தரமானது ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதே.  இங்கே முன்னிலைப்படுத்துகைகள் நிறைவுபெற்ற பின்னர் நீங்களும் இந்த விவாதத்தில் இணைந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 

பதிப்பார்ந்த பங்குபற்றல் குழுவினர் எதிர்காலத் தொழிற்துறை பற்றி மேலும் அதிகமாகக் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு நிறைவு செய்ய விரும்புகிறேன். ரல்புடனும் அவர்களுடனும் இணைந்துகொள்ளுங்கள்.

செவிமடுத்தமைக்கு நன்றிகள்.

Api
Api