Skip to Main Navigation
BRIEFமார்ச் 8, 2023

2023-2026 இலங்கை பங்குடைமை சட்டகத்திற்கான ஆலோசனைகள் (CPF)

The World Bank

Joe Qian/ World Bank

உலக வங்கிக் குழு (WBG) 2023-2026 காலப்பகுதிக்கான இலங்கையுடனான அதன் புதிய, நாட்டு பங்குடைமை சட்டகத்தை (CPF) தயாரித்து வருகிறது. இந்த செயன்முறையானது இலங்கையின் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் மற்றும் உலக வங்கி குழு எவ்வாறு உதவ முடியும் என்பன பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு - அரசாங்கம், சர்வதேச நிதி நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளைக் கொண்ட பரந்த அளவிலான பங்குதாரர்களுடனான ஆலோசனைகளை உள்ளடக்கியதாகும்.

பின்னணி

நாட்டின் பங்குடைமை சட்டகத்தை (CPF) தயாரிப்பதில், உலக வங்கிக் குழு (றுடீபு) இலங்கையின் சவாலான சூழல் மற்றும் கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட நிதி மூலங்கள் குறித்த பிரக்ஞையுடன் உள்ளது. நாட்டின் பங்குடைமை சட்டகமானது (CPF) மிகவும் தனித்துவமானதாகும் - இது நாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தித் தேவைகளுக்கு உதவுவதற்கான குறிப்பான நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது. இதில் உலக வங்கிக் குழுவின் (WBG) உதவிக்கான ஒரு வினையூக்க பங்கை அரசாங்கம் காண்பதுடன், உலக வங்கிக் குழு தனித்துவமான பெறுமானத்தைச் சேர்க்கமுடியும்.

தயாரிக்கப்பட்டுவரும் நாட்டின் பங்குடைமை சட்டகமனாது (CPF), வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கைக்கு உதவுவதையும், பசுமை, தாங்குதிறன், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் மீட்புக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் பங்குடைமை சட்டகமனாது அரசாங்கத்தின் உடனடி மற்றும் நடுத்தர கால மூலோபாய முன்னுரிமைகளுடன் இணைந்ததாகும். இந்த நோக்கத்திற்காக, உலக வங்கிக் குழு பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்கால அதிர்ச்சிகளின் தாக்கத்தைத் தணிக்கவும், மற்றும் உள்ளடக்கிய மற்றும் தனியார் துறை தலைமையிலான மீட்பு மற்றும் வளர்ச்சிப் போக்கை ஊக்குவிப்பதற்குமான அடித்தள சீர்திருத்தங்களை ஆதரிக்கும்.

நாட்டின் பங்குடைமை சட்டகமனாது (CPF) இரண்டு உயர்நிலை நோக்கங்களில் கவனம் செலுத்தும்:

  • தாங்குதிறன், உள்ளீர்ப்பு மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்
  • மனித மற்றும் இயற்கை மூலதனத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்

மேலும், ஆட்சியை மேம்படுத்துதல் மற்றும் பசுமை வளர்ச்சி என்பன  இலங்கைக்கான உலக வங்கிக் குழுவின் அனைத்து நடவடிக்கைககளிலும் பொதுவான கருப்பொருளாக அமையும்.  

நாட்டின் பங்குடைமை சட்டகமானது அண்மைய அபிவிருத்தி இற்றைப்படுத்தலான இலங்கைக்கான அண்மைய இற்றைப்படுத்தப்பட்ட முறைமை சார்ந்த நாட்டு பகுப்பாய்வு மற்றும் நாட்டில் உள்ள சவால்கள் மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றிய பகுப்பாய்வுகள் மூலம் தகவலளிக்கப்பட்டதாகும்.

ஆலோசனைகள்

நாட்டின் பங்குடைமை சட்டகத்திற்கான பொதுமக்கள் ஆலோசனைகளில் அரசாங்கம், சர்வதேச நிதி நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் நிகழ்நிலை மற்றும் நேருக்கு நேர் சந்திப்புகளை உள்ளடக்கியிருக்கும்.

ஆர்வமுள்ள பங்குதாரர்கள் 2023 மார்ச் 8 முதல்  2023 மார்ச் 29 வரை திறந்திருக்கும் ஒரு இணையவழி ஆலோசனை தளம் மூலமாகவும் கருத்துக்களை வழங்கலாம்.

இணையவழி மூலமான ஆலோசனையின் நோக்கம் புதிய நாட்டு பங்குடைமை சட்டகத்தின் (CPF)  ன் வழிகாட்டல் மற்றும் நோக்கம் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆர்வமுள்ள பங்குதாரர்களிடமிருந்து பரந்த பின்னூட்டங்கள் மற்றும் கருத்துகளைப் பெறுவதாகும். இங்கு 2023 – 2026 க்கான இலங்கை பங்குடைமை சட்டகம் இணைக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து உங்கள் கருத்துக்கள், கேள்விகள் அல்லது ஆலோசனைகளை இலங்கையில் உள்ள உலக வங்கியின் அலுவலகத்திற்கு infosrilanka@worldbank.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக அனுப்பி வையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்