Skip to Main Navigation
செய்தி வெளியீடுஜூன் 28, 2023

பொருளாதார மீட்சிக்கும், வறிய மக்களைப் பாதுகாப்பதற்கும் உதவ இலங்கைக்கான நாட்டு பங்குடமைசட்டகத்தை கைகொள்ளும் உலக வங்கி குழுமம்

வொஷிங்டன், 2023ஜூன் 28—பொருளாதார மற்றும் நிதித் துறை ஸ்திரப்பாட்டை மீட்பதற்கும் பசுமையான, தாங்குதிறன்கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்புக்கான வலுவானதொரு அடித்தளத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் உலக வங்கிக் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இன்று இலங்கைக்கான புதிய நாட்டு பங்குடமை சட்டகம் குறித்து கலந்துரையாடியது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் விரிவான சீர்திருத்தங்களை வேண்டிநிற்கும் அதேவேளை மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு கடந்து சென்றுகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்திலேயே இந்த நாட்டு பங்குடமை சட்டகம் நடைமுறைக்குவருகிறது.2021 ஆம் ஆண்டுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் வறுமை விகிதம் 13.1 இலிருந்து 25 வீதமாக இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டது–இது 2.5 மில்லியன் வறிய மக்கள் மேலதிகமாக சேர்வதை காட்டுகிறது - மேலும் 2023 ஆம் ஆண்டில்இத்தொகை மேலும் 2.4 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"இலங்கை முன்னெப்பதுமில்லாத வகையில் இவ்வாறானதொருநெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள போதும், நாட்டின் பொருளாதாரகட்டமைப்பை ஆழமான சீர்திருத்தங்களுடன் மறுசீரமைப்பதற்கான ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தைஅளித்துள்ளது" என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் எச். ஹதாத் சர்வஸ்தெரிவித்தார். “ நாட்டு பங்குடமை சட்டகமானது(CPF)இந்த மாற்றத்தை ஆதரிக்கிறது. ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை ஊடாக, உலக வங்கிக் குழு மூலோபாயம், ஆரம்பகால பொருளாதார  ஸ்திரப்பாடு, கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. இது நிலைபெறுமானால், இந்த சீர்திருத்தங்கள் நாட்டை பசுமையான, தாங்குதிறன்கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை நோக்கிய பாதைக்குக் கொண்டுவர உதவும்.

2024 முதல் 2027 வரையான ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கிய நாட்டு பங்குடமை சட்டகமானது(CPF) அவசர பேரின நிதியியல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மனித மூலதனம் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான ஆதரவின் மீது கவனம் குவித்துத் தொடங்கும் இரண்டு-கட்ட அணுகுமுறையை உருவாக்குகிறது. முதல் 18-24 மாதங்களுக்குப் பின்னர், சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச கடன் நிவாரணம் மற்றும் நிதி உதவி ஆகியவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டு பங்குடமைச் சட்டகத்தின் (CPF) கவனமானது படிப்படியாக தனியார் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க உதவும் - குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் - மற்றும் காலநிலை மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கான தாங்குதிறனை அதிகரிக்கும் நீண்ட கால அபிவிருத்தித் தேவைகளில் முதலீடுகளை  மேற்கொள்வதை நோக்கி மாறும்.

“இலங்கையை பொருத்தவரையில் குறிப்பாக இந்த பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு வலுவான மற்றும் ஈடுபாடுள்ள தனியார் துறை மிகவும் முக்கியமானதாகும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வசதிகள் தேவை” என சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC)தெற்காசியாவிற்கான பதில் பிராந்திய பணிப்பாளர் ஷலப் டாண்டன் தெரிவித்தார். " பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதில் தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமானதாகும். இலங்கைக்கான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC)  கவனம் ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு ஆதரவளித்தல், காலநிலை நிதியளிப்பை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை செயற்பாட்டுக்கு கொண்டுவருதல் என்பவற்றின் மீது உள்ளது- இவை அனைத்தும்  அனைவரையும் உள்ளடக்கிய, தாங்குதிறன்கொண்ட மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அம்சங்களாகும்.

நாட்டு பங்குடமைச் சட்டகத்தைத் (CPF) தயாரிப்பதற்காக, உலக வங்கிக் குழுவானது, அரசாங்கம், தனியார் துறை, சிவில் சமூகம், சிந்தனையாளர்கள், கல்வித் துறைசார்ந்தவர்கள், ஊடகத் துறையினர் மற்றும் ஏனையஅபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர் குழுக்களுடன் நாடளாவிய ரீதியிலும் இணைய வழியிலும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டது.

உலக வங்கி பணிப்பாளர் சபையானது இலங்கைக்கு பேரினப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மீளமைக்கும் அடிப்படைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்கால அதிர்ச்சிகளின் தாக்கத்தைத் தணிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தனியார் துறை தலைமையிலான மீட்பு மற்றும் வளர்ச்சி பாதைக்கு ஆதரவளிப்பதற்குமான இரண்டு செயற்பாடுகளுக்காக 700 மில்லியன் நிதியை வழங்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கையின்தாங்கு திறன், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார திருப்பம் (Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET)) அபிவிருத்திக் கொள்கை செயற்பாடு ($500 மில்லியன் டொலர்) பொருளாதார ஆளுகையை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் சீர்திருத்தங்களை ஆதரிக்கும். இது உடன்பாடு காணப்பட்ட முன் நடவடிக்கைகளுக்கு இரண்டு சமமான தவணைகளில் வரவுசெலவுத்திட்டநிதிப் பங்களிப்பை வழங்கும்.

சமூகப் பாதுகாப்புத் செயற்திட்டம் ($200 மில்லியன்டொலர்) வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சிறந்த இலக்கை குறுக்கோளாகக் கொண்ட வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதிலும் சமூகப் பாதுகாப்பு முறைமையின் பதில்வினையாற்றும் தன்மையை மேம்படுத்துவதிலும் இலங்கைக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கிறது.

ஜூன் 26 ஆந் திகதி வரை உலக வங்கி குழுமமானது$1.09 பில்லியன் டொலரை புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD)மூலமும்$1.17 பில்லியன் டொலரைசர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (IDA)மூலமும் நிதியுதவியைக் கொண்டுள்ளது. இலங்கையானது புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியின் (IBRD)  கடன் தகுதியை இழந்துள்ளதுடன், மேலதிக நிதியுதவியை IBRD இடம் அணுக முடியாது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (IDA) சலுகை நிதியுதவிக்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கான ஒரு மாற்றுப் படிமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD) கடன் தகுதி மீளவும் கட்டியெழுப்பும் வரை, இலங்கை சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (IDA)  வளங்களை மட்டுமே அணுக முடியும்.

நாட்டு பங்குடமைச் சட்டகமானது(CPF)  உலக வங்கி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)   மற்றும் பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவனம் (MIGA)மற்றும் அபிவிருத்திப்பங்காளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தனியார் துறையை மையமாகக் கொண்ட மிகப்பெரும் உலகளாவிய அபிவிருத்தி நிறுவனம் என்ற வகையில், கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, வர்த்தகங்களுக்கு உதவுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை தக்கவைப்பதில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)    இலங்கையில் சுமார் $1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. அண்மையில், இலங்கைக்கு பணத்தை அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியில் 30 சதவீதத்திற்கும் மேல் கையாளும் நாட்டின் மூன்று முன்னணி தேசிய வங்கிகளுக்கு நாணய பரிமாற்ற (cross-currency swap)வசதியை சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)     வழங்கியது.

இந்த வசதியானது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தற்போதைய தேவைக்கு பங்களிக்கும் வகையிலான முக்கியமான நிதியுதவியுடன் தனியார் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புத்தாக்கம், தயாரிப்பு பல்வகைப்படுத்தல், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிலையான உட்கட்டமைப்பு மற்றும் ஆழமான சமூக மற்றும் நிதி உள்ளீர்ப்பை ஆதரிப்பதன் மூலம் தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)  தொடரும்.

எல்லை கடந்த முதலீடு மற்றும் கடன்களை ஆதரிப்பதற்கான வாய்ப்புகளை பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவனம் (MIGA)  தொடர்ந்து ஆராயும். பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவனம் (MIGA) தற்போது இலங்கையில் எந்த திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்றபோதும்,நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஊக்குவிப்பதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)  என்பவற்றுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவனம் (MIGA) தனது வர்த்தக நிதி உத்தரவாதத் திட்டத்தை (IFC உடன் இணைந்து) நடைமுறைப்படுத்தக்கூடிய இலக்கு நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவனம் (MIGA) தனது பாலின மூலோபாய நடைமுறைப்படுத்தல் திட்டத்தை(Gender Strategy Implementation Plan)தனதுநிதிப் பங்களிப்பு வழங்கும் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் கண்டறியும்.

தொடர்பு

வொஷிங்டனில்
டயனா சங்
(202) 473-8357
கொழும்பில்
திலினிகா பீரிஸ் – ஹொல்சிங்கர்
+94115561325

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image