Skip to Main Navigation
செய்தி வெளியீடு நவம்பர் 3, 2021

பாதுகாப்பான, காலநிலை-நெகிழ்வான போக்குவரத்து இணைப்பு மற்றும் வலுவான விவசாய விநியோகச் சங்கிலிக்காக இலங்கையும், உலக வங்கியும் ஒன்றிணைகின்றன.

கொழும்பு, நவம்பர் 3, 2021 – உள்ளடக்கமான இணைப்பு மற்றும் அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஊடாக விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு பாதுகாப்பான,வினைத்திறன் மிக்க மற்றும் காலநிலை நெகிழ்வான இணைப்பினை வழங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் கைச்சாத்திட்டன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் சஜித் அட்டிகலவும், உலக வங்கியின் சார்பில் தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உதவித் தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபரும் கைச்சாத்திட்டனர்.

இலங்கையில், விவசாயம் - கிராமப்புற சமூகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது - விவசாயிகளை வளங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்க வீதிகளை பெரிதும் சார்ந்துள்ளது. ஏறக்குறைய அனைத்து தேசிய வீதிகளும் செப்பனிடப்பட்டிருந்தாலும், மாகாண வீதிகளில் 67 சதவீதமும், கிராமப்புற வீதிகளில் 13 சதவீதமும் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. தெற்காசியப் பிராந்தியத்தில் வீதியால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதத்தில் இலங்கை முதலிடத்தில் உள்ளது, வருடத்திற்கு சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர்.

"கிராமப்புற சமூகங்களை சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுடன் இணைக்க இலங்கையில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சாலை வலையமைப்பு மிகவும் முக்கியமானது" என்று தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உதவித் தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபர் தெரிவித்தார். "அளவிடப்பட்ட சாலை முதலீடுகள் இலங்கையில் மனித மூலதனத்தை விரைவுபடுத்துவதற்கு பங்களிக்கும், இது நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டம் இலங்கை அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தின் முக்கிய முயற்சியான "100,000 கி.மீ கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின்" ஒரு பகுதியாகும்.

"இந்த திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் எங்கள் உள்ளூர் சமூகங்களில் அதன் தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என இலங்கை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். "எங்கள் சாலை வலையமைப்பிற்கான பாதுகாப்பு, காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முழுமையான அணுகுமுறை, தொற்றுநோய்க்குப் பிந்தைய சிறந்த மீள்கட்டியெழுப்பலுக்கு முக்கியமானது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் நிதியுதவி பெற்ற போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்து முகாமைத்துவ திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கூடிய ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டங்களான iRoad I மற்றும் II ஆகியவற்றின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் மாகாண மற்றும் கிராமப்புற சாலைகள் மறுசீரமைப்பு முயற்சிகளை இந்த திட்டம் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. கற்றுக்கொண்ட பாடங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும், கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், கிராமப்புற இணைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான அமைப்பை நிறுவுவதன் மூலமும், இலங்கை அரசாங்கத்தின் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும்.

இந்தத் திட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திட்டத்தை மேற்பார்வையிட தேசிய வழிநடத்தல் குழு அமைக்கப்படும்.


தொடர்பு

கொழும்பில்
டிலினிகா பீரிஸ்
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
வொஷிங்டனில்
டயானா சங்
+1 (202) 473-8357
dchung1@@worldbank.org
Api
Api