Skip to Main Navigation
சிறப்பம்சக் கதைமார்ச் 29, 2022

இலங்கை: ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறது

The World Bank

மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நடை மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தம்பலகாமம் மக்கள்.

Photo: Jana Dharma

கதை சிறப்புக்கூறுகள்

  • நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் உட்பட தொற்றாத நோய்கள் இலங்கையில் ஏறக்குறைய 90 வீதமான நோய் சுமையை கொண்டுள்ளன.
  • தொற்றாத நோய்களின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின் நிதிச்சுமை கணிசமானது, அது சமமாக விநியோகிக்கப்படாமையால், பணக்கார மற்றும் ஏழை குடும்பங்களை வித்தியாசமாக முறையில் பாதிக்கிறது.
  • • தொற்றா நோய் மேலாண்மையானது ஆரம்பகால பரிசோதனை மற்றும் சுகாதார கட்டமைப்பிற்குள் நீண்ட கால பின்பற்றல்கள், ஆதரவான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களை உள்ளடக்கியது.

“உடற்பயிற்சி செய்து கொண்டு கிராமத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தால் என்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கூறுகின்றனர்” என்கிறார் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் டி.ஜீவராஜ்.

 

உள்ளூர் சமூகம் ஆரோக்கியமாக இருப்பதனை ஊக்குவிப்பதற்காக, டாக்டர் ஜீவராஜ் மற்றும் அவரது ஊழியர்களுடன் வீதியில் இறங்கி, "குணப்படுத்துவதற்கு முன் தடுப்போம்" என்ற தலைப்பில் சமூக நடைப்பயணத்தை நடத்தினர். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மருத்துவமனையின் முயற்சிகள் உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த சமூகத்தின் அணுகுமுறையை மாற்ற உதவியது. “சமீப காலமாக மக்கள் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை நான் அவதானித்தேன்,” என்று புன்னகைக்கிறார் டாக்டர் ஜீவராஜ்.

டாக்டர் ஜீவராஜ் அப்பகுதியில் தொற்றா நோய் மேலாண்மை திட்டத்திற்கு பொறுப்பானவர். 2020 மே மாதம் முதல், அவரும் அவரது ஊழியர்களும் 35 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர் மக்களில் அண்ணளவாக 43 சதவீதத்தினரை தொற்றா நோய்களுக்காக பரிசோதித்துள்ளனர். அப் பரிசோதனை ஆச்சரியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் அதிக எடையுள்ளவர்களாக காணப்பட்டனர், அண்ணளவாக 15 சதவீதம் பேர் உடல் பருமனாக காணப்பட்டனர், பெண்களிடையே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. "வீட்டு வேலைக்கு அப்பால், இங்குள்ள பெண்கள் ஒப்பீட்டளவில் உடலினை வருத்தாத வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர், மேலும் இது தொற்றா நோய்களுக்கான ஒரு பெரிய ஆபத்தான காரணி" என்று விளக்குகிறார் டாக்டர் ஜீவராஜ்.

தொற்றா நோய்களின் நிலையான அதிகரிப்பு இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு கடும் சவாலாக உள்ளது. தொற்றா நோய்களின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு தடுப்பில் வலுவான கவனம் செலுத்தப்பட வேண்டிய வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை அவசியமாகும், மேலும் இது நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை மறுசீரமைக்க உத்தரவாதம் அளிக்கிறது. உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய அடிப்படை சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டம் (PSSP) சுகாதார அமைச்சகத்தால் (MoH) திட்டமிடப்பட்ட முதன்மை நோய் குணப்படுத்தல் செயற்பாடு; பராமரிப்பு சேவைகளை மறுசீரமைக்கும் இடத்தில் தற்போது உள்ளது. PSSP இன் நோக்கம், ஆரம்ப சுகாதார சேவைகளின் பயன்பாடு மற்றும் தரத்தை அதிகரிக்க அரசாங்கத்தை ஆதரிப்பதாகும், அதிக ஆபத்துள்ள குழுக்களில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.

இலங்கையில் குணப்படுத்தக் கூடிய ஆரம்ப சுகாதார சேவைகள் முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனங்கள் (PMCI) மூலம் வழங்கப்படுகின்றன, இதில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் மற்றும் நாடுபூராகவும் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகள் உள்ளன இன்றுவரை நாட்டில் உள்ள 1,030 முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களில் அண்ணளவாக 350 சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் 2023 இல் இச் செயற்திட்டத்தின் முடிவில் இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் 550 ஆக காணப்படும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளரால் வழிநடத்தப்படும் இத் திட்டம், சுகாதார அமைச்சில் காணப்படும் குறித்த தேசிய திட்டங்களின் தொழில்நுட்ப தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் முதன்மை பராமரிப்பு மறுசீரமைப்பை முன்னெடுத்து வருகிறது. ஆயுட்கலாம் முழுவதும் ஏற்படக்கூடிய தொற்றா நோய்களை கண்டறிந்து செயற்படுவதற்கான அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் 35 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களில் பதிவு செய்யப்படுகிறார்கள், அங்கு அவர்களின் நிலைமைகளை நிர்வகிப்பதற்கான தொடர்ச்சியான வருகைகளுக்காக அவர்களின் உடல்நலப் பதிவுகள் பராமரிக்கப்படுகின்றனஇது காலப்போக்கில் மற்றும் பரிந்துரை வட்டம் முழுவதும் நோயாளியின் பராமரிப்பை சிறப்பாக ஒருங்கிணைக்க உதவுகிறது.

தொற்றா நோய் மேலாண்மை என்பது வாழ்க்கை முறை மற்றும் அணுகுமுறை மாற்றத்தையும் உள்ளடக்கியது, மேலும் அடிப்படை சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டமானது  தொற்றா நோய் தடுப்பில் காணப்படும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டம், மத மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்ட முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களுடன் இணைந்த ‘சேவையின் நண்பர்கள்’ குழுக்களை (FFC) நிறுவியுள்ளது. புதிய ஆரம்ப சுகாதாரக் கொள்கையை தங்கள் 

The World Bank

தம்பலகாமம் சேவையின் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் தொற்றா நோய் பரிசோதனைக்காக வீடுவீடாக சென்று பதிவுசெய்தல் மற்றும் விழிப்புணர்வு சேவைகளை நடாத்துகின்றனர்.

Photo: M. RAJANATHAN

சமூகங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சேவையின் நண்பர்கள் என்ற குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் திட்டத்தால் ஆதரிக்கப்படும் முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களில் தம்பலகாமம் மருத்துவமனையும் ஒன்றாகும், மேலும் டாக்டர் ஜீவராஜ் மற்றும் அவரது குழுவினர் தொற்றா நோய் பரிசோதனை மற்றும் பதிவு மூலம் பாராட்டத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  “சேவையின் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்தனர். நாங்கள் ஒரு முன் திட்டமிடப்பட்ட சந்திப்பு முறையைத் தொடங்கினோம், கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது கூட ஒரு நாளைக்கு 10 பேரை பரிசோதித்தோம். சேவையின் நண்பர்கள் குழு இல்லாமல் எங்களால் இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியை எங்களால் பராமரித்திருக்க முடியாது,” என்கிறார் டாக்டர் ஜீவராஜ்

இந்த முயற்சியில் தம்பலகாமம் செயின் நண்பர்கள் குழு தலைவர் திரு.எம்.கிருஷ்ணபிள்ளை முக்கிய பங்காற்றினார். “தொற்றா நோய்க்கான பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் மக்களுக்கு கூறினோம். பரிசோதனையின் பின்னர், இம் முயற்சியின் மூலம் அவர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக பலர் எங்களிடம் கூறினார்கள், ”என்று கூறி அவர் புன்னகைத்தார்.

சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டமானது பரிசோதனை மற்றும் பின்பற்றுவதற்கு மக்களை ஊக்குவிக்கும் வகையில் 'நோயாளி நட்பு சேவைகள்' அமைப்பை அறிமுகப்படுத்துவதையும் ஆதரித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கனை முதன்மை மருத்துவ பராமரிப்பு நிறுவனத்தின் சேவை பணிபுரியும் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இரவு நேர மருத்துவ மனைகள் நடத்தப்படுகின்றன. “முதலில், அவர்கள் சேவையின் நண்பர் குழுவிற்கு தோற்ற நோயின் ஆபத்துக் காரணிகளைப் பற்றிக் கற்றுக் கொடுத்தனர். அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு இப்போது எங்களால் முடியும்” என ராஜாங்கனை சேவையின் நண்பர் குழுவின் செயலாளர் கிரிஷாந்தி நுவல விளக்குகிறார்.

தொற்றா நோய்கள் மீதான கவனம் ஒரு அணுகுமுறை மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. "இங்குள்ள இளைஞர்கள் வேலையில் கவனம் செலுத்துகின்றனர், அனால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. இப்போது அவர்கள் முன் வந்து தங்கள் உடலில் என்ன பிரச்சனை உள்ளது மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்,” என்கிறார் தம்பலகாமம் சேவையின் நண்பர் குழுவைச் சேர்ந்த திரு.மகேந்திரன்.

சுகாதார அமைப்பினை வலுவூட்டும் திட்டம் இப்போது நடைமுறைப்படுத்தி பாதியிலேயே உள்ளது, அவ்வாறான சந்தர்ப்பத்திலும் கூட அதன் பிரதிபலன் உற்சாகமூட்டுகிறது. இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருந்தாலும், இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதன்மை பராமரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியின் சாத்தியமான தாக்கத்தையும் இந்த முயற்சிகளில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவதன் மதிப்பையும் நிரூபித்துள்ளது. "தனிப்பட்ட முறையில், நாங்கள் எங்கள் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக உணர்கிறேன்" என்று கிருஷாந்தி பெருமிதத்துடன் கூறினார்.

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image