உலகம் முழுவதிலும், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆரம்ப வருட சேவைகளை விரிவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உருவாகியுள்ளது. ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வியானது (ECCE), கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளதுடன் சிறுவர் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியன பாரம்பரியமாக வெளிப்படையான வித்தியாசமான களங்களைக் கொண்டிருந்தாலும், குடும்பங்களுக்கான வினைத்திறனானதும் செயற்திறனானதுமான சேவைகளை வழங்குவதற்காக இவை இரண்டையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு வளர்ந்து வரும் போக்கு உருவாகியுள்ளது.
இலங்கையில், கட்டாயமான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கு இலவசமான அணுகலை அரசாங்கம் வழங்கியுள்ள போதும், கட்டாயம் அல்லாத பாலர் வகுப்பிற்கு அது வழங்கப்படவில்லை. பல பாலர் வகுப்புகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள் தனியாரால் இயக்கப்படடுவதுடன் அவை கட்டணத்திட்கு உட்பட்டதுடன் அறவிடப்படுவதுடன், அவற்றுக்கான அணுகலும் அதை பெறுவதற்கான இயலுமையும் சனத்தொகையில் கணிசமான அளவிலான பகுதியினருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான ஆட்சேர்ப்பு வீதம் அதிகமாக முறையே 99 வீதம் மற்றும் 84 வீதமாகும். 2016 இல் 3-5 வயதுவரையான பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கான இவ்வீதமானது 56 வீதம் ஆகும்.
மலிவான சிறுவர் பராமரிப்பை அணுகுதலானது நேரடியாக ஒரு நாட்டின் தொழிற்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் பெண்கள் கல்வியில் உயர்நிலையை எட்டியிருந்தாலும், 2019 இல் தொழில் படையில் நாட்டின் பெண்களின் பங்களிப்பானது 34.5 மட்டுமே என்பதை கருத்தில் எடுப்பது அவசியமாகும்.2018 இல் சர்வதேச நிதி நிறுவனத்தினால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தையை கொண்டுள்ள ஒரு பெண்ணின் தொழிற்படை மீதான பங்களிப்பானது அவ்வாறான இளம் குழந்தை அற்ற பெண்ணுடன் ஒப்பிடுகையில் 7.4 வீதத்தினால் குறைவானதாக என கண்டுபிடிக்கப்பட்டது.
வேறுஎன்ன, இலங்கை வயதடைந்த சனத்தொகையை கொண்டிருப்பதால்-அது தெற்காசியாவிலேயே மிகவும் வேகமாக வயதடையும் சனத்தொகையை கொண்டுள்ளது -மற்றும் குடும்ப அமைப்புகள் , பால் வகி பங்குகளில் மாற்றம், கூட்டுக் குடும்பங்களிருந்தான ஆதரவு குறைவடைதல் ,வீட்டில் இளம் பிள்ளைகளை பராமரிப்பதற்கு இயலாதவர்கள் தமது குடும்பத்தை விட்டு செல்லுதல் போன்றவற்றுக்காக குழந்தை பராமரிப்பிற்கான கேள்வியை அதிகரித்துள்ளனர்.
இங்கு நல்ல விடயம் என்னவெனில் தொழில் தருநர் சிறுவர் பராமரிப்பு விருத்தியடைவதற்கு ஆதரவளிக்கின்றனர். எனினும் 2019 ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் 57.4 வீதத்தை கொண்டுள்ள முறைசாரா துறைகளில் வேலை செய்யும் பெற்றோர்களை இது சென்றடையவில்லை.