Skip to Main Navigation
செய்தி வெளியீடு டிசம்பர் 17, 2019

பொதுத்துறை வினைத்திறனை வலுப்படுத்தவுள்ள இலங்கை

வாசிங்டன் , டிசம்பர் 17, 2019 – இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
 
பொதுத்துறை வினைத்திறனை வலுப்படுத்தும் திட்டம் The Public Sector Efficiency Strengthening Project (PSEP)  நிதி அமைச்சின் நிறுவனரீதியான திறனை வலுப்படுத்தி அதனுடாக வினைத்திறனை மேம்படுத்தவும் சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும். இந்த ஐந்தாண்டு திட்டதின் முக்கிய இயக்கிகளாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்த மனித வளத்திறன்களின் பயன்பாடு அமைந்திருக்கும். முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் நிதி மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மானியமாக 10 மில்லியன் யூரோக்களை வழங்கி ஐரோப்பிய ஒன்றியம் PSEP   திட்டத்தின் ஓர் பங்காளராக செயற்படும்.  

'பொது நிதி முகாமைத்துவ விடயத்தில் உலக வங்கி மற்றும் அரசாங்கத்திற்கிடையிலான நீண்ட கால ஒத்துழைப்வை அடியொற்றியதாக PSEP  திட்டமானது கட்டியெழுப்பப்படும். அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மு ன்னுரிமைக்குரிய மறுசரீ மைப்பு பகுதிகளுக்கு ஆதரவளிகக்ப்படும்' என நேபாளம்  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா இஸட். ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார். ' இலத்திரனியல் கொள்முதல் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்ப அடிப்படையிலான பயன்பாடு எளிமைப்படுத்தல் மூலமாக பொது நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகூறலை முன்னேற்றும்' என அவர்  மேலும் கூறினார்.  

 'இந்த திட்டமானது மேலும் பொது நிதி நிர்வாகத்தில் சர்வதேச அனுபவத்தினைப் பயன்படுத்திக்கொள்வதனுடாக விளைவுகளின் தாக்கத்தினை அதிகரிப்பதற்கு வழிகோலும்' என இந்த திட்டத்தின் உலக வங்கி செயலணியின் தலைவரும் சிரேஸ்ட நிதி முகாமைத்துவ விசேடநிபுணருமான  மோகன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.  

மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிலிருந்து வழங்கப்படும் 225மில்லியன் அமெரிக்க

டொலர்கள்  பெறுமதியான இந்த கடன் உதவியானது 11 வருடங்கள் கருணைக்காலம் அடங்கலாக 28 வருடகால இறுதி முதிர்வைக் கொண்டதாகும். 

 

 

 

 

 

 

 


தொடர்பு

Colombo
Dilinika Peiris-Holsinger
+94115561325
dpeiris@worldbank.org
Washington D.C.
Elena Karaban
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
Api
Api