செய்தி வெளியீடு மே 14, 2019

இலங்கையில் உள்ளுர் சேவைகளை மேம்படுத்த உலக வங்கி உதவி

கொழும்பு மே 14 ,2019 -  இலங்கையின் வடக்கு, வடமத்திய ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வாழ்கின்ற சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமொன்றில் இலங்கையுடன் உலக வங்கி இன்று கைச்சாத்திட்டுள்ளது. புதிய உள்ளுர் அபிவிருத்தி திட்டமானது வீதிகள் சுகாதாரபராமரிப்பு மற்றும் புறச் சுகாதார வசதிகள்  போன்ற அத்தியாவசியத் சேவைகளின் திட்டமிடல் மற்றும் விநியோகத்தில் உள்ளுர் சமூகங்களை நடுநாயகமாக நிறுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேபாளம் ,இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப்பணிப்பாளர் கலாநிதி ஐடா ஸ்வராய் ரிடிகோவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் முறையே உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பாக திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.  நேபாளம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப்பணிப்பாளர் கலாநிதி ஐடா ஸ்வராய் ரிடிகோவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் முறையே உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பாக திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.  

வறுமையைக் குறைப்பதில் இலங்கை கடந்த காலங்களில் நன்கு செயற்பட்டுள்ளது. தேசிய வறுமை 2016ம் ஆண்டில் 4.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்தபோதிலும் விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலவீனமான சமூக நிறுவனங்கள் ,குறிப்பாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களில் காணப்படும் பால்நிலை நலிவுநிலைகள் , இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சி அறிகுறிகள் மற்றும் ஆபத்தான நடத்தைகள் ஆகியவற்றுடன் ஆங்காங்கே வறுமைக்குட்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

 'பொதுமக்களின் குரல்களுக்கான இடைவெளியை வழங்குவதானது இந்தத்திட்டத்தின் பிரதான நோக்காகும். இது உள்ளுர் சேவை விநியோக தீர்வுகளுடன் மக்களின் தேவைகளை பொருத்திப் பார்ப்பதனை இலக்காகக் கொண்டுள்ளது' என நேபாளம் , மாலை தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார். ' உள்ளுர் மக்களின் குறிப்பாக மிகவும் நலிவடைந்த குழக்களின் தேவைகளுக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையிலான முறைமையை கட்டியெழுப்புதவற்கான  திட்டமொன்றை வழங்குதவற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.' 

இந்த திட்டமானது வீதிகள், வடிகால்கள், சந்தைகள் ,நீர் விநியோகம் சிறு நீர்ப்பாசனம் ,தகவல் தொழில்நுட்ப இணைப்புத்தன்மை மற்றும் கிராமிய மின்சாரமயப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளுர் பொருளாதார நடவடிக்கைகளையும் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையிலான உட்கட்டுமான சேவைகளுக்கான சிறியளவிலான பூர்வாங்க வழங்கலையும் கொண்டுள்ளது.

இந்த திட்டச் செயலணியின் தலைவர்களாக செயற்படும் யரிஸா சொம்மர் மற்றும் சோன்யா சுல்தான் ஆகியோர் கருத்துவெளியிடுகையில் ' இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டு மக்களின் நலனுக்கும் அணுகக்கூடியதான வலுவான உள்ளுராட்சி அதிகாரிகள் இருப்பது முக்கியமானதாகும். இலங்கை மக்களுக்கு சேவையாற்றக்கூடியதான பொறுப்புக்கூறக்கூடிய வினைத்திறனான அணுகக்கூடிய உள்ளுராட்சி அமைப்பினை உருவாக்குவதற்கு உள்ளக அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டடானது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என நாம் நம்புகின்றோம்.

இந்தப் புதிய உள்ளக அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டம்  உள்துறை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் இதில் பங்கேற்றும் நான்கு மாகாணசபைகளால்  நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மொத்த செலவு 100.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் கடனாக 70 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 23.65 மில்லியன் மானியமும் இலங்கை அரசாங்கத்தின் 7 மில்லியன் பங்களிப்பும் உள்ளடங்கும்.


செய்தி வெளியீட்டு எண்: SAR/2019

தொடர்பு

கொழும்பு
டிலினிகா பீரிஸ்
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
வொஷிங்டன்
எலேனா கரபான்
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
Api
Api