Skip to Main Navigation
செய்தி வெளியீடு ஜூலை 25, 2018

கல்விக்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இலங்கை –உலகவங்கி கைச்சாத்து

Image

World Bank


வொஷிங்டன்இ ஜுலை 25, 2018-; கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தத்தில் இலங்கையும் உலக வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன.

General Education Modernization Project (GEM ) என்ற பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக  பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் பல்வகைப்படுத்தும். பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரத்தில் தெரிவுகளை இந்தத் திட்டம் விரிவாக்கும். அந்தவகையில் மாணவர்கள் கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பர். ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் டிஜிட்டல் முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் மீதே கவனம் குவிக்கப்படும். 

' கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை வியாபிப்பதில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடு என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ரீதியான கற்றல் வெளிப்பாடுகளை மேலும் முன்னேற்றவேண்டும். உயர் தரத்திலான பொதுக் கல்வி கட்டமைப்பானது 21ம் நூற்றாண்டின் தொழில் தேவைகளுக்கான கேள்வியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்கும் என்பதில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ' என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலகவங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவிக்கின்றார். ' இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யத் தேவையான அடிப்படைத் திறன்களை விசேடமாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தை அனைத்து சிறுவர்களும் பெற்றுகொள்வதற்கான சந்தர்ப்பத்தை உறுதிசெய்வதில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.' ஏன அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டமானது (தரம் 1-5 வரையான) முன்பள்ளி மற்றும் (தரம் 6-13 வரையான) இரண்டாம் நிலைக்கல்வியைத் தொடரும் பாடசாலை மாணவர்களுக்கு பயன்தருவதாக அமையும். தொழில்நுட்பக் கல்வி தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பாடசாலைகளிலுள்ள முகாமைத்துவ பணியாளர்களும் இந்த திட்டத்தினால் பயன்பெறுவர்.

கல்வித் துறையில் இலங்கையின் நீண்டகால பங்காளராக உலகவங்கி திகழ்கின்றது. உலக வங்கியினால் ஆதரவளிக்கப்படும் பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும்  Transforming School Education System Project (TSEP)திட்டமானது தரம் 1-11 ( வயது 6-16) வரையுள்ள மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடரும் விகிதத்தை 87 சதவிகிதத்திற்கு அதிகமாக அதிகரிக்க உதவியுள்ளது. கற்றல் பெறுபேறுகள் தொடர்பான சுழற்சிமுறை ஒழுங்குகிற்கமைவான தேசிய மதிப்பீட்டு பொறிமுறையை அறிமுகம்செய்துள்ளது. அனைத்துவலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதற்காக பாடசாலையை அடிப்படையாகக்கொண்ட முகாமைத்துவத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதீகமாக  கல்வி நிர்வாகத்தின் பரவாலக்கப்பட்ட படிநிலைகளின் திறன்களை வலுவாக்குவதற்கு கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டமானது துணைபுரிந்துள்ளது. 

'பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது நடுத்தரவருமானம் மற்றும் உயர் வருமானமுள்ள கல்விக் கட்டமைப்புக்களை உடையதான சர்வதேச தராதரத்திற்கு ஏற்புடையதாக முன்பள்ளி மற்றும் இரண்டாம் நிலைக்கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் நவீனமயப்படுத்துவதற்கு துணையாக அமையும்.' என உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் செயலணித் தலைவருமான ஹர்ஸ அடுரூபனே தெரிவித்தார். '  பொதுக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் ஆதரவளிக்கப்படும் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் ஆகியன  கற்றல் வெளிப்பாடுகளின் முன்னேற்றத்திற்கும்  மாணவர்களின் மத்தியில் உயர் சமூக உணர்வுபூர்வ திறன் வெளிப்பாடுகளுக்கும் வழிகோலும்' என அவர் மேலும் தெரிவித்தார்.  

இன்றையதினம் கைச்சாத்திடப்பட்ட பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாடங்களையும் அனுபவத்தையும் கொண்டு கட்டியெழுப்பப்படுவதுடன் பொதுக் கல்வித் துறைக்கான உலக வங்கியின் ஆதரவை வலுப்படுத்துவதாகவும் அமையும். 

 


செய்தி வெளியீட்டு எண்: SAR/2019

தொடர்பு

Colombo
Dilinika Peiris-Holsinger
+94115561325
dpeiris@worldbank.org
Washington
Joe Qian
+1 (202) 473 5633
jqian@worldbank.org
Api
Api