Skip to Main Navigation
நிகழ்வுகள்

Who's Your Role Model?: #PressForProgress Photo Competition

மார்ச் 1 - மே 15, 2018

Sri Lanka

Image

இலங்கைப் பெண்கள் தமக்குரிய ஸ்தானத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது. உண்மையைக் கூறுவதெனில் இலங்கையிலுள்ள பணியிடங்களில் ஏற்கனவே மிகவும் தைரியமானதும் ,திறமைமிக்கவுமான பெண்கள் பலர் பணிபுரிந்துவருகின்றனரென நாம் நம்புகின்றோம். உங்களுக்கு அப்படிப்பட்ட யாரையேனும் தெரியுமா? நீங்கள் அப்படிப்பட்டவர்களின் ஒரு புகைப்படத்தை எடுத்து பணியிடத்திலும் இல்லங்களிலும் சமத்துவம் பேணப்படவேண்டும் என்று நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அவர்கள் எந்தவகையில் ஊக்குவிப்பாக திகழ்கின்றனர் என்பதை எமக்கு சில வரிகளில் கூறுங்கள்.

 • உங்களை ஊக்குவிப்பவர் யார்?

  இலங்கையைப் பொறுத்தமட்டில் தொழிலாளர் படையில் பெண்கள் எண்ணிகை பிந்தங்கிய நிலையிலேயே காணப்பபடுகின்றது. இலங்கையிலுள்ள பெண்களில் மூன்றில் ஒருபங்கினர் மாத்திரமே தொழிலாளர் படையில் பங்கேற்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. பாதுகாப்பற்ற சூழல் ,சமத்துவமற்ற வேதனம், கலாசார பாரபட்சம் ஆகியவற்றிற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இருந்தபோதிலும் இலங்கை மேலும் சமத்துவமிக்கதும், சுபீட்சமுடையதும், மகிழ்ச்சிமிக்கதுமான நாடாக பரிணமிக்க விரும்புகின்ற நிலையில் அதன் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமாக காணப்படும் மக்களை புறக்கணிக்கமுடியாது.

  இலங்கைப் பெண்கள் தமக்குரிய ஸ்தானத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது. உண்மையைக் கூறுவதெனில் இலங்கையிலுள்ள பணியிடங்களில் ஏற்கனவே மிகவும் தைரியமானதும் ,திறமைமிக்கவுமான பெண்கள் பலர் பணிபுரிந்துவருகின்றனரென நாம் நம்புகின்றோம். உங்களுக்கு அப்படிப்பட்ட யாரையேனும் தெரியுமா? நீங்கள் அப்படிப்பட்டவர்களின் ஒரு புகைப்படத்தை எடுத்து பணியிடத்திலும் இல்லங்களிலும் சமத்துவம் பேணப்படவேண்டும் என்று நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அவர்கள் எந்தவகையில் ஊக்குவிப்பாக திகழ்கின்றனர் என்பதை எமக்கு சில வரிகளில் கூறுங்கள்.

  நீங்கள் வித்தியாசமானமுறையில் சிந்திப்பதற்கு உங்களுடைய சொந்தங்கனவுகளை கனவுகாண்பதற்கு சமூகத்தில் காணப்படும் பிற்போக்குத்தனங்கள் விடயத்தில் சவால்விடுப்பதற்கு உங்களை ஊக்குவித்த பெண்களின் கதைகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். மகளிர் தினத்தை கொண்டாடும் தருணத்தில் இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக  #PressforProgress நாம் முயற்சிப்போம்.

   

 • “யார் உங்களது முன்னுதாரணம் ?” என்ற தொனிப்பொருளிலான புகைப்படப் போட்டி நிகழ்ச்சி உலகவங்கியின் இலங்கை பணிமனையினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் சமர்ப்பித்தல்களை மேற்கொள்வதற்கு தெரிவுகள் உள்ளன.

  1.ஊக்குவிப்பாக திகழும் முன்னுதாரணமான பெண்மணியொருவரின் முகத்தைக் காண்பிக்கும் பாரம்பரிய உருவப்படம் /புகைப்படம்

  2.உங்கள் முன்னுதாரணத்திற்குரியவரின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்ற குறியீட்டுப் படம் அன்றேல் அவருக்கு நெருக்கமான அம்சம் ( இவை தொடர்பான உதாரணங்களை இங்கே பார்வையிடமுடியும்.  புகைப்படமானது, புகைப்படமானது) இந்த புகைப்படங்களில் இருந்து எடுத்துக்கொள்ளக்கூடிய எண்ணக்கருக்களாக அவர்களது மிகவும் பிடித்தமான உடமைகள், வேலைக்கருவிகள் அல்லது மிகவும் எளிமையாக அவர்களது கையின் மிகவும் தெளிவான ஒரு Close-up புகைப்படத்தின் மூலமாக உங்களுடைய செய்தியை மறைமுகமாகவேனும் எடுத்துச்செல்லக்கூடுமாக இருப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கும் எண்ணக்கருவாகும்.

  நீங்கள் நிலையானதொரு புகைப்படத்தைப் பயன்படுத்தப்போகின்றீர்களா அன்றேல் தரவுகள்

  செறிந்ததாக அன்றேல் சாரம்சத்தை உள்ளடக்கியதாக புகைப்படத்தை எடுக்கப்போகின்றீர்களாக என்பது உங்களுக்கு முன்பாக இருக்கும் தெரிவாகும். உங்கள் படத்தலைப்பில் குறித்த பெண்மணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள். எந்தவகையில் அவர் உங்களை ஊக்குவிக்கின்றார் என்ற விடயத்தை எமக்கு கூறுங்கள். நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தவரொருவரையோ, நண்பரொருவரையோ ,ஆசிரியரொருவரையோ ஏன் உங்கள் பணியிடத்தில் வழிகாட்டியாகத் திகழ்பவரையோ தெரிவுசெய்யமுடியும். ஏன் இவர் உங்கள் பாதையை மாற்றியமைத்தவர் அன்றேல் முன்மாதிரியாக திகழ்பவர் என்பதை எமக்கு கூறுங்கள்.

 • எப்போது

  நீங்கள் உங்களது புகைப்படங்களை இலங்கை நேரப்படி 2018, மே 15ம் திகதி மாலை 5 மணி  வரை சமர்ப்பிக்க முடியும்.

  எப்படி அனுப்புவது

  1. #PressforProgress என்ற நிகழ்ச்சிப் பக்கத்தினூடாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமர்பிக்கப்படுகின்ற புகைப்படங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.

  2. ஓவ்வொரு புகைப்பட சமர்ப்பித்தலுடனும் படத்தலைப்பு  #PressforProgress ஹாஸ்டெக்

  மற்றும் புகைப்படமெடுத்தவரின் பெயர் ஆகிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும்.

  3. புகைப்படத்தலைப்பானது ஆங்கிலம் ,சிங்களம் அன்றேல் தமிழ் மொழியில் எழுதப்படலாம் என்பதுடன் 8-10 வசனங்களுக்கு மேற்படக்கூடாது.

  4. புகைப்படமானது JPEG வடிவத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

  5. புகைப்படமெடுத்தவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் உள்ளடங்கலாக படங்களில் தெரியும் படியான வோர்டர் மார்க்குகள் (Watermarks) இருக்கக்கூடாது. (தேவைப்படுமிடத்து இந்த விபரங்களை படங்களில் மெடாடேடா (Metadata)வில் உட்புகுத்த முடியுமே தவிர தெரியக்கூடியவாறு படத்தில் இடம்பெறச்செய்யலாகாது)

  6. உலகவங்கியின் இலங்கைப் பணிமனையினால் நடத்தப்படுகின்ற புகைப்படபோட்டி நிகழ்ச்சிக்குசமர்ப்பிப்பதற்காகவே புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்ற விடயத்தை சம்பந்தப்பட்டவர் தெரிந்திருப்பதை புகைப்படமெடுப்பவர் உறுதிசெய்வது முக்கியமாகும். போட்டிநிகழ்ச்சியில் புகைப்படத்தை சமர்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர் இணங்கம் தெரிவிப்பதுடன் புகைப்படப்பிடிப்பாளருக்கு அனுமதியளிக்க வேண்டும்.

  7. ஒற்றை வெளிப்பாடு (Single Exposure) அன்றேல் ஒற்றை சட்டகப் படங்கள் (Single frame pictures)மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். பின்வருவன ஏற்றுக்ககொள்ளப்படமாட்டாது:

  a.  ஒன்றுக்கு மேற்பட்ட வெளிப்பாடுகள் –Multiple exposures

  b. . பனோராமா படங்களின் தொகுப்பு அது புகைப்படக்கருவியால் எடுத்தாகவோ அன்றேல் எடிட் செய்யும் மென்பொருள் கொண்டு தயார்செய்யப்பட்டதாகவோ இருக்க முடியும்.

  8. தன்னார்வ பயிலுனர் (Amateur )புகைப்படப்பிடிப்பாளர்கள் இதில் பங்கேற்குமாறு பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

  9. எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து மேலதீக விபரங்களுக்காக காத்திருங்கள்.

 • தகைமையும் நடுத்தீர்ப்பும்

  1. இந்தப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கைப் பிரஜைகள் அன்றேல் இலங்கையில் வதியும் அனைவரும் பங்கேற்க முடியும்.

  2. தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு சமர்ப்பித்தலை மாத்திரமே மேற்கொள்ளமுடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

  3. உலக வங்கி குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆலோசகர்கள் ,தற்காலிக பயிலுனர்கள் ஒப்பந்தக்காரர்கள் ,மற்றும் அவர்களது ஊழியர்கள் இதில் பங்கேற்ற முடியாது. இருந்தபோதிலும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உலக வங்கி குழும ஊழியர்களின் உறவினர்கள் இதில் பங்கேற்க முடியும்.

  4. ஒரு முன்னணி புகைப்படப்பிடிப்பாளர், ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் ,மற்றும் உலகவங்கியைச் சேர்ந்த பாலின விசேட நிபுணரொருவர் ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழாம் இந்தப் போட்டியை நடுத்தீர்க்கும். அவர்களுடைய முடிவே இறுதியானதாகும்.

  5. சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் பின்வரும் அடிப்படையில் நடுத்தீர்க்கப்படும் : (1) தொனிப்பொருளோடு எந்தளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கின்றது (2) படைப்பாற்றல் மற்றும் புகைப்படத்தலைப்பின் உணர்வுபூர்வமான தாக்கம் (3) புகைப்படத்தின் அழகியல் அம்சம்

  6. உலகவங்கியின் இலங்கைப்பணிமனையினால் எடுக்கப்படும் தீர்மானமே  இறுதியானதாகும்.

  இறுதித்தினம்

  இந்த போட்டி நிகழ்ச்சி 2018, மே 15ம் திகதி நிறைவடைகின்றது. வெற்றியாளர்கள் மற்றும் பரிசுகள் தொடர்பான விபரங்கள் ஜுன் மாதம் அறிவிக்கப்படும்.

  விருதுகள்

  போட்டிக்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து இறுதிப்பட்டியில் ஒரு தொகையானவர்கள்

  தெரிவுசெய்யப்படுவர். வெற்றிகரமான சமர்ப்பித்தல்கள் அங்கீகரிக்கப்படும். அதில் முதல் மூன்று இடங்களைப் பெறும் சமர்ப்பித்தல்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுக்கள் வழங்கப்படும் என்பதுடன்அங்கீகாரமளிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். வெற்றிபெறும் சமர்ப்பித்தல்கள் உலக வங்கியின் இலங்கை பணிமனையின் இணையத்தளத்திலும் பேஸ்புக் பக்கங்களிலும் உலகவங்கியின் தெற்காசிய பிராந்திய இணையவழித்தளங்களிலும் ஊக்குவிக்கப்படும். 

  முதல் 20 சமர்பித்தல்களுக்கும் டோக்கன் பரிசுக்கள் வழங்கப்படும்.

  கேள்விகள்

  போட்டியின் விதிமுறைகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் 011 5561325 / infosrilanka@worldbank.org  இருப்பின் எம்மை தொடர்புகொள்ளுங்கள்

  பதிப்புரிமை

  இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக உங்களுடைய புகைப்படங்களுக்கான பதிப்புரிமையை நீங்கள் தொடர்ந்தும் பெறுவதுடன் உங்கள் புகைப்பட சொந்தக்காரராகவும் நீங்கள் இருப்பீர்கள். அத்தோடு நீங்கள் விரும்பும் எந்தவழியிலும் அவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் புகைப்படத்தில் அடையாளங்காணக்கூடியதாக இருக்கின்றவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் இந்தப் போட்டி நிகழ்ச்சிக்காக நீங்கள் எடுத்த புகைப்படத்தை சமர்ப்பிக்கப்போகின்றீர்கள் என்பதை தெரிந்திருப்பவர்களாகவும் அதற்கு உங்களுக்கு பிரத்தியேக அனுமதி தந்தவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் சமர்பிக்கும் புகைப்படங்கள் அச்சு பிரசுரங்கள் ,உலக வங்கி இலங்கைப் பணிமனையின் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மற்றும் வேறு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதற்காக நீங்கள் அனுமதி வழங்குகின்றீர்கள். அத்தோடு உங்கள் புகைப்படங்கள் பிரதிபண்ணப்பட்டு வேறு நாடுகளிலும் உங்களுடைய பெயருக்கு உரிய அங்கீகாரம் தரப்பட்டு எத்தகைய கொடுப்பனவுகளும் இன்றிப் பிரசுரிக்கப்படுவதற்கு நீங்கள் அனுமதியளிக்கின்றீர்கள்.

get in touch