பேச்சுக்கள் & எழுத்துப்படிவங்கள் செப்டம்பர் 27, 2019

இலங்கை மனித மூலதன அபிவிருத்தி : மனித மூலதனத்தின் திறன் ஆற்றல் மற்றும் நம்பிக்கையை உணர்தல்

மதிப்புக்குரிய அதிதிகள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள். இலங்கையில் மனித மூலதன அபிவிருத்தியில் தொடர்ச்சியான பங்குபற்றல்களை ஆரம்பித்து வைப்பதில் பெருமையடைகிறேன்.

கடந்த ஆறு தசாப்தங்களாக, இலங்கை தனது மக்களின் மனித மூலதனத்தில் கட்டியெழுப்புதலில் முனைப்பாக இருந்து, இன்று, சுகாதாரத்திலும் கல்வியிலும் தனது தெற்காசிய அண்டை நாடுகளை முந்தியிருக்கிறது.

உலக வங்கியானது இலங்கையுடன் இந்தப் பாராட்டக்கூடிய இந்தப் பயணத்தில் ஒரு இணைபிரியா உறுதியான பங்காளராக இருந்திருப்பதில் பெருமையடைகிறது.

ஆனாலும் இந்தப் பிராந்தியத்தில் முன்னிலை பெறுவது மட்டுமே இன்றைய துரிதகதியில் முன்னேற்றம் பெறும் அறிவுசார் பொருளாதாரத்தில் வெற்றிகொள்ள இலங்கைக்குப் போதுமா? தொழினுட்பமும் தானியங்கிமுறையும் துரிதகதியில் தொழிலின் இயல்பை மாற்றுவதுடன் தொழிற்துறையின் வடிவமைப்பையும் மாற்றுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இப்போது ஆரம்பப் பாடசாலைகளில் உள்ள குழந்தைகள் இப்போது இல்லாத தொழில்களை செய்யக்கூடும். 

அப்படியானால், உருவாகிவரும் இந்தப் புதிய உலகுக்குலு இலங்கை எவ்வாறு தயாராகவேண்டும்? 

தெளிவாக, அதற்கான விடை அதன் மக்களிலேயே தங்கியுள்ளது. சந்தேகமில்லாமல் அவர்கள் தான் ஒரு நாட்டின் விலைமதிப்பில்லாத வளம்.

அதனால்,ஒரு நாடு தன்னுடைய எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான மிக முக்கியமான தீர்மானமாக மனித மூலதனத்தில் முதலிடுவதே அமையும்.

ஆனால் மனித மூலதனம் என்று நாம் எதை அர்த்தப்படுத்துகிறோம்?

மிக எளிதான வார்த்தைகளில் மனித மூலதனம் என்பது மக்கள் சமுதாயத்தின் உற்பத்தித்திறன் கொண்ட முழுமையான ஆற்றலுடன் வாழ்வதற்கு தங்கள் வாழ்நாட்காலம் முழுவதும் கட்டியெழுப்பிய அறிவு, திறன்கள் மற்றும் சுகாதாரம் ஆகியவையே.

அதற்கு உறுதியான சத்துணவு மற்றும் சுகாதார பராமரிப்பு, அதனுடன் கூடிய சிறந்த தரமான பாடசாலைக் கல்வி - வருடக்கணக்கிலான சாதாரண கல்வியை விட - மற்றும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தேவைப்படும் திறன்கள் விருத்தி ஆகியன அவசியமாகின்றன.

ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு மனித மூலதனம் எவ்வளவு மிக முக்கியமானது என்பதை அறிந்து, உலக வங்கி 2018இல் மனித மூலதனத் திட்டத்தை ஆரம்பித்தது.

இந்தத் திட்டமானது ஒரு குழந்தையின் பிறப்பு முதல் வயதுவந்த நிலை வரையிலான வாழ்க்கை வட்டத்தைத்  தொடர்வதன் மூலமாக ஒரு நாட்டின் மனித மூலதனத்தை அளவிடுவதற்கும் எதிர்வுகூறுவதற்குமாக புதிய மனித மூலதனச் சுட்டெண்ணையும் உள்ளடக்குகிறது.

இந்த அறிக்கையானது 2019இல், இலங்கையானது ஒட்டுமொத்தளவில் 58 வீதத்துடனும் , சுட்டெண் ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ள 157 நாடுகளில் 74 ஆம் இடத்துடனும், உலகளாவிய ரீதியில் ஓரளவு மிதமாகவே இருந்துள்ளது. வேறுவிதமாக சொல்வதாயின், தற்போதைய கல்வி மற்றும் சுகாதார நிலைகள் தொடரும் நிலையில்,இலங்கையில் பிறந்த ஒரு குழந்தை முழுமையான கல்வியும் சுகாதாரமும் பெற்றால்  அனுபவிக்கும் நன்மையை விட, அவனோ அவளோ உற்பத்தித் திறனில் பாதியளவு விட சற்று அதிகமாக (உற்பத்தித்திறனின் 58%)மட்டுமே இருப்பர்.

இதற்கு மாற்றாக, சிங்கப்பூரில் இன்று பிறந்த குழந்தைகள் தமதுமுழுமையான ஆற்றலில் 88 வீதத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஜப்பான் மற்றும் கொரியாவில் உள்ளவர்கள் 84 வீதத்தை அடையலாம். தெற்காசியாவில் மிகச்சிறப்பாக விளங்கும் நாடாக இலங்கை இருக்கின்றபோதிலும் மனித மூலதனத்தில் சீனா, மலேசியா,மொங்கோலியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகளை விடப் பின்தங்கியுள்ளது.

முக்கியமாக, ஒவ்வொரு மாகாணங்களினதும் மனித மூலதனஅடைவை பகுப்பாய்வு செய்கிற நேரம், இந்த அறிக்கையானது விபரங்களை ஆழமாக நோக்குகிறது.

கல்வியும் சுகாதாரமும் மாகாணங்களில் பொறுப்பேற்கப்பட்டுள்ள இரண்டு விடயங்களாக இருப்பதனால், கொள்கைகளை உருவாக்குவதிலும் அவர்கள் முன்கொண்டு செல்வதற்கான வழிவகைகளை உருவாக்கும் விதமாகவும், மாகாண மட்ட கொள்கை வகுப்பவர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இந்தப் பெறுபேறுகள் முக்கியமாக உதவியாக இருக்கும் என்பதை உணர்வார்கள்.

மொத்தத்தில், மனித மூலதனத்தை புதிய, உயரிய நிலைக்கு அபிவிருத்தி செய்வதானது, இலங்கைக்கு இலங்கை நாடும் உயர் நடுத்தர வருமான பொருளாதாரமாக வருவதற்கு முக்கியமானதாக அமையும். எனவே நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து, நாட்டின் முழுமையான நம்பிக்கை மற்றும் ஆற்றலை உணர்வதற்கு சேர்ந்து செயற்பட தொடர்ந்தும் முன் நகர எண்ணம் கொண்டுள்ளோம்.

 நன்றி.

Api
Api