Skip to Main Navigation
செய்தி வெளியீடு செப்டம்பர் 27, 2019

இலங்கை அதன் சாத்தியமான உற்பத்திதிறனை வெளிக்கொண்டுவர மக்களில் முதலீடு செய்யவேண்டும்

அனைத்து இலங்கையர்களதும் மேம்பட்ட கல்வி மற்றும் சுகாதார விளைவுகளைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான வளங்களை ஒதுக்கீடுசெய்வதற்கான தகவறிந்த முடிவுகளை எடுப்பதற்கு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய புதிய அறிக்கையொன்றை உலக வங்கி இன்று வெளியிட்டது.

இலங்கையின் மனித மூலதன அபிவிருத்தி: மனித மூலதனத்தின் சாத்திய ஆற்றலை புரிந்துகொள்ளுதல் என்ற அறிக்கையானது நாடொன்றின் எதிர்காலத்திற்கு மனித மூலதனத்தின் மிகுந்த முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் 2018ம் ஆண்டு முதல் உலக வங்கியினால் முன்னின்று செயற்படுத்தப்படுகின்றதான்; மனித மூலதன திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

.ஒரு குழந்தையின் பிறப்பு முதல் வயதுவந்தவராகும் வரையிலான வாழ்க்கைச் சக்கரத்தை பின்தொடர்ந்து நாடொன்றின் மனித மூலதனத்தை அளவீடுசெய்யவும் எதிர்வுகூறவும் முற்படுவதான புதிய மனித மூலதனச் குறியீட்டுச் சுட்டியை இந்தத் திட்டமானது உள்ளடக்கியுள்ளது. 

ஒட்டுமொத்தமாக 58 சதவீதமான புள்ளிகளைப் பெற்று இந்தச் குறியீட்டுச் சுட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள 157 நாடுகளில் 74ஆவது இடத்திலுள்ள இலங்கை அறிக்கையின் பிரகாரம் 2019ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது  மிதமானவகையில் மாத்திரமே செயற்படுவதை காணமுடிகின்றது. வேறுவார்த்தையில் கூறுவதானால் பூரணத்துவமான கல்வி மற்றும் முழுமையான சுகாதாரத்தை அனுபவித்து அதன் பலாபலன்களை பெறுகின்ற ஒரு குழந்தையுடன் பார்க்கும் போது தற்போது இலங்கையில் இருக்கின்ற கல்வி மற்றும் சுகாதார நிலைமைகள் தொடருமிடத்து இலங்கையில் பிறக்கின்ற குழந்தை அரைவாசிக்கும் சற்றே கூடிய வினைத்திறனுடையதாகவே விளங்கும்.

"எந்தவொரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் மக்களே மிகவும் பெறுமதி வாய்ந்தவர்களாக உள்ளனர். மக்களில் முதலீடு செய்வது புத்திசாதுரியமான 'ஸ்மார்ட்' பொருளாதாரமாகும் ," என நேபாளம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார்.  "தொழில்நுட்பமும் தானியக்கமும் வேலையின் தன்மையை தீவிரமாக மாற்றி தொழில்துறையை மாற்றியமைக்கின்றன. தற்போது ஆரம்பநிலைப் பாடசாலைகளில் கல்விபயின்றுகொண்டிருக்கின்ற சிறுவர்கள் இன்றைய காலகட்டத்தில் இல்லாத தொழில்களில் பணிபுரியக்கூடிய சாத்தியமுள்ளது. அந்தவகையில் மேல் நடுத்தர வருமானமுள்ள பொருளாதாரமாக பரிணமிப்பதற்கு இலங்கை அதன் மனித மூலதனத்தை புதியதும் உயர்மட்டத்திலுமானதாக விருத்திசெய்து கொள்வது முக்கிமானதாகும்."

தெற்காசியாவில் இலங்கை அதிகபட்சமான புள்ளிகளைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்திற்கும் வருமான குழுவினருக்குமான  சராசரியை விட அதிகமானதாகும். ஐந்து வயதுவரை உயிர்வாழ்தல் ,எதிர்பார்க்கும் பாடசாலைக் காலம், வயதுவந்தவர்கள் உயிர்வாழ்தல் போன்ற விடயங்களில் இலங்கை சிறப்பாகச் செயற்படுகின்றது. ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் சராசரியாக பாடசாலைகளில் போதுமான கற்றல் பெறுபேறுகள் காணப்படாமை ஆகியன உயர்வான புள்ளிகளைப் பெறுவதில் இலங்கைக்கு முன்பாகவுள்ள பிரதானமான தடைகளாகக் காணப்படுகின்றன.

 

"மேல் நடுத்தர வருமான வளர்ச்சி மற்றும் பிராந்திய சமபங்கு ஆகிய இரட்டைக் கண்ணோட்டத்தில் மனித மூலதன வளர்ச்சியை இலங்கை கவனிக்கவேண்டும்,"என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மனித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட தலைவரும் முன்னணி பொருளாதார நிபுணருமான ஹர்ஸ அடுரூபனே தெரிவித்தார். "மிகவும் முன்னேற்றம் கண்ட மாகாணங்களில் மனித மூலதனத்தில் துர்pதமான முன்னேற்றங்களை மேற்கொள்ளும் அதேவேளை மனித மூலதனம் குறைவாக முன்னேற்றம் கண்டுள்ள மாகாணங்களுக்கு அதிகமான வளங்களும் கொள்கைக் கவனமும் தேவையாகவுள்ளது. "

அனைத்து மட்டத்திலுமான கல்வி மற்றும் பயிற்சிகளின் மூலமாக மனித மூலதனத்தை நாடுகள் விருத்திசெய்வதற்கு உலக வங்கி உதவிவருகின்றது. இலங்கையின் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுத் திட்டமானது பின்தங்கிய வீடுகளிருந்து வருகின்ற குழந்தைகளின் ஆரம்பகால கற்றல் வாய்ப்புக்களை அணுகும் திறனை அதிகரிக்கும். பொதுக் கல்வி ,நவீன மயப்படுத்தல் திட்டத்தின் மூலமாக பொதுக்கல்வித் துறைக்கு உலக வங்கி வழங்கிவருகின்ற உதவியானது பொதுக் கல்வி முறைமையின் தரத்தை மேம்படுத்துகின்றது. இது சிறந்த ஆசிரியர் செயற்திறன் மற்றும் ஆங்கில கணித பாடங்களில் மாணவர்களின் கற்றல் விளைவுகளுக்கும் பங்களிக்கின்றது. பொருளாதார மேம்பாட்டிற்கான முன்னுரிமைப் பிரிவுகளில் சேர்வதை அதிகரிக்கவும் பட்டப்படிப்புத் திட்டங்களில் தரத்தை மேம்படுத்தவும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களை மேம்படுத்தவும் துரிதப்படுத்தும் உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் மேம்பாடு திட்டம் உதவுகின்றது.


தொடர்பு

Colombo
Dilinika Peiris
Communications Officer
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
Washington D.C.
Elena Karaban
Senior Communications Officer
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
Api
Api