சிறப்பம்சக் கதை

இலங்கையின் தொழிலாளர் படைக்கு அதிகமான பெண்கள் தேவை. ஆனாலும் அவர்களை தடுத்து தூர நிறுத்தி வைத்திருப்பதென்ன?

மார்ச் 16, 2017


Image

Participants of a community youth group in a team building exercise in Hatton. 

Photo Credit: Smriti Daniel

கதை சிறப்புக்கூறுகள்
  • பெண்களை தொழிலாளர் படைக்குள் வரவேற்று உள்வாங்குவதென்பது வெறுமனெ மனித உரிமைகள் சார்ந்த விடயம் மட்டுமல்ல மாறாக அது திறமைமிக்க பொருளாதார வியூக நகர்வாகும்.
  • இலங்கையில் பெண்கள் பணியிடங்களில் நுழைவதில் பால்நிலை பாரபட்சம், இல்லங்களில் அதிக வேலைப்பளு இபால்நிலையை அடிப்படையாக் கொண்ட வருமான ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்;வேறு சவால்களை எதிர்நோக்கிநிற்கின்றனர்.
  • தொழிலாளர் படையில் தமக்குரியதான வகிபாகத்தை பெண்கள் ஏற்றுக்கொள்வதற்கு வீடுகளிலும் அலுவலகங்களிலும் காணப்படும் மனநிலைகளில் மாற்றம் ஏற்படவேண்டும்.

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எல். கோகிலவாணியின் சிந்தனைகள் தன் சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கியதாக இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. 30வயதுடைய மருத்துவமாது என்ற வகையில் அவர் இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள சமூக இளைஞர் குழுவின் அங்கத்தவர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போசாக்குநிலைமையை முன்னேற்றுவதே அவர்களின் இலக்காகும். கோகிலவாணி ஒரு தாதியாக பணியாற்றியதுடன் பால்நிலை மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் பெற்றவர். அந்தவகையில் ஹட்டனிலுள்ள சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது தனக்கே தனித்துவமான சிந்தனைகளுடன் சமூகமளித்திருந்தார்.

பேஸ்புக் போன்ற சமூக ஊடக சாதனங்களுடாக சுகாதாரத்திலுள்ள தனது நிபுணத்துவத்தை எங்ஙனம் மேலும் முன்னெடுத்து விரிவுபடுத்த முடியும் என்று கற்றறிந்துகொள்ளும் நோக்குடனேயே இந்தச் செயலமர்வில் கோகிலவாணி பங்கேற்றிருந்தார். அவருடைய பார்வையில் மிகவும் கொடூரமிக்க வாழ்க்கைச் சக்கரமானது நம்முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கின்றது : ' போசாக்கு குறைபாடு உள்ள தாயொருவர் எடைகுறைந்த குழந்தையையே பெற்றெடுப்பார். அந்தக் குழந்தைக்கு உதவாது விடின் இதே வாழ்க்கைச் சக்கரம் தொடரும்.' என்கிறார் கோகிலவாணி.

 இந்தப் பிரச்சனையானது வருமானமீட்டுகின்ற இயலுமை முதற்கொண்டு கல்வியில் அடைவுகளை பெற்றுக்கொள்வது வரைக்கும்  மலையக சமூகத்தவர்களிடையே பாரதூரமான தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது.

இந்தக் குழுவிலுள்ள ஏனைய பெண்கள் தமது பணி வாழ்க்கையை பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பான முக்கிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டனர். நோய்வாய்ப்பட்ட தாயார் வீட்டில் உள்ள நிலையில் அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைச் சுமந்துகொண்டிருக்கும்; ஒரு பெண். தொழிலையும் கல்வியையும் சமாந்திரமாக முன்னெடுக்க முடியாமல் தடுமாறிநிற்கும் இன்னுமொரு பெண். வாரநாட்கள் ஐந்திலும் பணியாற்றிவிட்டு வார இறுதிநாட்களில் படிக்கின்ற அர்ப்பணிப்புக்கொண்ட பெண் என பல்வேறு நிலைகளில் அவர்கள் காணப்பட்டனர்.

 கோகிலவாணியின் நெருங்கிய தோழியான ரீ. பிரியா இன்னமும் தொழிலற்றவராக இருப்பதுடன் சரியான வேலை கிடைக்கும் என காத்திருக்கின்றார். அரசாங்கத்தில் கிடைத்தால் நல்லது என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. வேலையைப் பெற்றுகொள்வதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும் போன்ற பல தடைகள் காரணமாக தனது கனவை தொடர்வதில் அவர் ஊக்கமிழந்துபோகின்றமையை உணர முடிகின்றது. திருமண வாழ்க்கை கூட அனைத்தையும் புரட்டிப் போட்டு மாற்றியமைத்துவிடும் என பிரியா ஒத்துக்கொள்கின்றார். தற்போது 24 வயதுடையவரான அவர் தனது வாழ்க்கைத்துணையைக் கண்டு குடும்பத்தை ஆரம்பித்த பின்னரும் தொடர்ந்தும் பணிக்கு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாக கூறுகின்றார். 'கணவர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா ?' என அவரிடம் வினவியபோது அதற்கான யதார்த்தபூர்வமான சாத்தியக்கூறு உள்ளதாக அவர் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை ' தாம் அந்த சவால்களை முறியடித்து தொடர்ந்தும் பணியாற்றுவேன்' என எளிமையாக பதிலளித்தார்.

அவருடைய உறுதிப்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கின்றபோதும் இலங்கையில் தொழிலில் ஈடுபடுவர்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களை நோக்குமிடத்து  அவருக்கு எதிரானதாக அவை கோடிட்டுக்காட்டி நிற்பதை உணர்ந்துகொள்ளமுடியும். ஏனெனில் இளம்பெண்கள் வேலைவாய்ப்பற்றிருப்பது மிகவும் அதிக சதவீதமானதாக காணப்படுகின்றமை இதற்கு முக்கியகாரணமாகும்.

இந்த நிலைமையானது 2017ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத் தொனிப்பொருளான ' தொழில் உலக மாற்றங்களில் பெண்கள்' என்பதை அர்த்தபூர்வமானதாக மாற்றியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் தொழில்செய்யும் இடங்களை பெண்களுக்கு மேலும் வரவேற்பிற்குரியதாக மாற்றுவது மட்டுமன்றி தொழில்களில் பெண்களின் எண்ணிக்கையை மேலும் எங்ஙனம் அதிகரிக்க முடியும் என்பதாக தொடர்ந்தும் அமைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து இலங்கை 17வது மிகப்பெரிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ள நாடாக அமைந்திருக்கின்றது.  தொழில் தேடும் காலப்பகுதி முதற்கொண்டு வேலைக்கு அமர்;த்துதல்இ பதவி உயர்வுகளை வழங்குதல் என அனைத்துக்கட்டங்களிலும் பெண்கள் தமது தொழில்களில் பாலின பாரபட்சங்களை எதிர்கொண்டு நிற்கின்றனர். வீடுகளில் கூட யார் பிள்ளைகளைப் பராமரிப்பது வீட்டுவேலைகளில் பெரும்பான்மையான பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது போன்ற விடயங்களைக் கூட பாலினமே தீர்மானிக்கின்ற காரணியாக அமைந்திருக்கின்றது. ஆண்களைப் போலன்றி திருமணமானது தொழிற்சந்தையில் பெண்களின் பங்கேற்பு விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை ஆய்வுகள் புலப்படுத்திநிற்கின்றன.

 ' பாலின சமத்தவமானது குடும்பத்திலிருந்தும் இல்லங்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டியது அவசியம் என்பது தெளிவாகின்றது' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பணிப்பாள் கலாநிதி இடா ஸ்வராயி ரிடிகோ கூறுகின்றார்.

தொழிலாளர் வர்க்கத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதானது வெறுமனே மனித உரிமைகளுக்கு உதவுகின்ற விடயமாக மட்டுமன்றி அது திறன்மிக்க பொருளாதார நகர்வாக கருதப்படுகின்றது.  இலங்கை அதன் தொழிலாளர் படையை வினைத்திறன் மிக்கதாக  வளர்த்தெடுக்க வேண்டுமாயின் மேலும் அதிகமான பெண்களை வரவேற்று உள்வாங்குவது அவசியம் என்பதை ஆய்வுகள்  வெளிப்படுத்தியுள்ளன. ' பல்வகைமையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்ளச் செய்வதில் நாம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். தொழிலிடங்களில் பல்வகைமை உண்டெனக் காண்பிப்பதற்கான வெறும் அடையாளமாக மாத்திரம் அது அமைந்துவிடக்கூடாது' என உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார். பல்வகைமையானது வியாபார நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு வலுவூட்டிநிற்கின்றது.  தேவைகளைச் சந்திக்கின்ற போதிலும் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற போதிலும் பல்தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் பல்வகைமை என்பது தமது பணியாளர்கள் தொடர்பில் திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகோலுகின்றது.

இலங்கையிலுள்ள பட்டதாரிப் பெண்களில் அனேகமானவர்கள் அரசாங்கத் தொழில்களை விரும்பி நாடுகின்ற போதிலும் கூட ரீ. புpரியா போன்ற ஆர்வமிக்க பெண்களை தனியார் துறையிலுள்ள வாய்ப்புக்களை ஆராயுமாறு ஊக்குவிக்கப்படவேண்டியது அவசியம் என உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார். இளம் பெண்களுக்கு எதிர்கால தொழிற்துறை பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்இ இருக்கக்கூடிய தொழில்களுக்கு ஏற்புடைய  விண்ணப்பதாரிகளை உருவாக்கும் வகையில் பாடநெறிகளை வடிவமைப்பது போன்ற இதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கப்படவேண்டும். பெண்களின் பங்கேற்பு தொடர்பான நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட விடயங்கள் தொடர்பாக கொள்கைத்தயாரிப்பாளர்கள்  தமக்குரித்தான பணியை முன்னெடுக்க வேண்டிய அதேவேளை எமது மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை அனைத்து இலங்கையர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 ' புள்ளிவிபரங்களை நோக்குமிடத்து அரச துறையை விடவும் தனியார் துறையில் பெண்களுக்கான தொழில்செய்யும் சூழ்நிலையானது மிகவும் கடிமானதாக அமைந்துள்ளதென்பது மிகவும் தெளிவானது' என்கிறார் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் இதனை பெண்களுக்கான பாதுகாப்பற்ற தன்மை என்ற உணர்வாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடியும் என குறிப்பிடுகின்றார்.  பெண்கள் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் ஏற்புடைய சூழ்நிலையை உருவாக்கும் சவாலை இலங்கையின் தனியார் துறையினர் பொறுப்பேற்கவேண்டும்.

பணிபுரியும் இடங்களின் உள்ளேயும் வெளியேறும் அணுகுமுறைகளிலும் முன்னுரிமைக்குரிய விடயங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது.  இல்லாவிடின் பெண்களின் பங்கேற்பானது தொடர்ந்தும் குறைவாகவே காணப்படுவதைத் தடுக்க முடியாது போகும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பெண்கள் தமக்குரியதான பெரும் பாத்திரத்தை வகிக்கமுடியும்.  ' ஏன் பெண்களென்ற வகையில் தடைகளை உடைத்தெறிவதற்கு நாம் மேலும் ஏன் செய்யக்கூடாது என நாம் எம்மத்தியிலேயே கேள்விகளை எழுப்பவேண்டும்?  நாம் விரும்பாத நிலைக்குள் ஏன் நாம் தொடர்ந்தும் முடங்கிக்கிடக்க வேண்டும்' என உலக வங்கியின் வதிவிடப்பணிப்பாளர் மேலும் சிந்தனையைத் தூண்டுகின்றார்.

தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பை மேலும் அதிகரிப்பதில் மாற்றங்களைச் செய்தவற்கு இல்லங்கள் முதற்கொண்டு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க நாம் திடசங்கற்பம் பூணவேண்டும். பெண்கள் வலுப்பெறுவது என்பது ஒட்டுமொத்த மனித சமூதாயம் வலுப்பெறுவதற்கு ஒப்பானதாகும் என்பதை சிந்தனையில் செலுத்தி செயற்படுவோமானால் நிச்சயமாக  மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.


Api
Api

Welcome