Skip to Main Navigation
நிகழ்வுகள்

பெண் புகைப்படக் கலைஞர்களுக்கான அழைப்பு

செப்டம்பர் 8 - அக்டோபர் 7, 2018

Sri Lanka

Image

• மூலோபாய பங்காளர்- கொழும்பு மாநகர சபை (CMC)
• வெளிக்கொண்டு செல்லல் மற்றும் ஊக்குவிப்பு - இலங்கை தேசிய புகைப்படக் கலைஞர்கள்
• ;ஏஜென்ஸி பங்காளர்.- ஷிப்ட் சொல்லுசன்ஸ் (SHIFT Solutions)
• அட்வகஸி பங்காளர்-  அட்;வகாடோ இன்ஸ்டிடியுட்
• டிசைன் என்கேஜ்மண்ட பங்காளர்-- AOD
• நகரும் கண்காட்சி பங்காளர்- பிக்மீ ( Pick Me)
• ஒன்லைன் ஊடகப் பங்காளர் - ரோவர் மீடியா (Roar Media)
• ஊடக பங்காளர் - விஜய நியூஸ்
• விருது பங்காளர்- அபான்ஸ் மற்றும் சினமன் லைவ்


உலக வங்கியின் இலங்கைக்கான பணிமனையின் எண்ணக்கருவில் உதித்து, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள புகைப்படப் போட்டி, உலக வங்கி குழுமத்தின் கலை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றுடனான நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன்   நடாத்தப்படுகின்றது

உலக வங்கியின் இலங்கைக்கான பணிமனை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து மேலும் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்புடன் ஒரு புகைப்பட போட்டியை நடத்தும் அதேவேளை இலங்கையில் வாழ்கின்ற அன்றேல் பிறந்த பெண்கள் ,நாட்டிலுள்ள சமூகம் மற்றும் சுற்றாடலைப்பற்றிய தமது தனித்துவமான பார்வையை புகைப்படமாகப் பிடித்து 2018 ஒக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர்  கிடைக்கத்தக்கவாறாக தமது புகைப்படங்களை சமர்பிக்கவேண்டும். 

 • ஆர்வமிக்க 'அமைச்சூர்' புகைப்படப்பிடிப்பாளர்கள் ,வளர்ந்துவரும்  கலைஞர்கள் மற்றும் தொழில்சார் புகைப்படப்பிடிப்பாளர்கள் என அனைத்துதரப்பு பெண் புகைப்படவியலாளர்களும் இந்த புகைப்படப் போட்டியில் பங்கேற்க முடியும். எந்தவிதமான வயதுக் கட்டுப்பாடுகளும் கிடையாது. 

  இந்தப் புகைப்படப் போட்டிக்கான பரந்துபட்ட தொனிப்பொருளாக ' இலங்கைப் பெண்களிற்கு மென்மேலும் அதிகமாக, சிறப்பான தொழில்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்போம்'  (#PressforProgress for More and Better jobs for Sri Lankan Women”' என்பது அமைந்துள்ளது.

  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு விதங்களில் பெண்கள் ,   அன்றாட வாழ்வில் பெண்கள் ,  பெண் தொழில் முனைவோர் ,  தேர்ச்சிமிக்க துறைகளில் பணியாற்றும் பெண்கள் மற்றும் பெண் தலைவர்களைக் காட்சிப்படுத்துகின்ற அசல் புகைப்படங்களை உலக வங்கி குழுமம் எதிர்பார்க்கின்றது. 

  தொனிப்பொருளுடன் தொடர்புடையதாக இருத்தல் ,  வெளிப்படுத்தப்படும் செய்தியின் சக்தி,  தொனிப்பொருளைக் கையாள்கையில் காண்பிக்கப்படும் அசல்தன்மை,   படைப்பாற்றல், தொழில்நுட்ப தரம் மற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் பணிமனையொன்றில் காட்சிப்படுத்தப்படுவதற்கு பொருத்தமுடையதன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே புகைப்படங்கள் நடுத்தீர்க்கப்படும்.

  அனைத்து புகைப்பட சமர்பிப்புக்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் வெற்றபெற்ற புகைப்படம்; மற்றும் வெற்றிபெற்ற புகைப்படக கலைஞர் ஆகியவற்றை தீர்மானிப்பதற்காக ஒக்டோபர் 22ம் திகதி முதல் ஒக்டோபர் 27ம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச நடுவர் குழாமொன்று அவற்றை மதிப்பாய்வு செய்யும்.

  வெற்றி பெற்ற புகைப்படங்கள் கொழும்பிலுள்ள  ( இல. 73 / 5 காலி வீதி கொழும்பு- 3)உலகவங்கியின் பணிமனையிலும் கொழும்பு மாநகர சபையிலும்  2019ம் ஆண்டு ஜனவரியில் ( ஒரு திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்) தற்போதைய நிலையில் நடைபெறும். கண்காட்சியின் போது வெற்றி பெற்ற புகைப்படங்களுக்கு பரிசுகள்  வழங்கப்படும். இந்தக் கண்காட்சியின்போது விபரக் கையேடு ஒன்றும் வழங்கப்படும்.

 • கலைஞர்களுக்கான பங்குபற்றல் வழிகாட்டுதல்கள்

  • முழுமையாக நிரப்பப்பட்ட நுழைவுப் படிவம் ( இணைப்பைப் பார்க்கவும்)

  • 10ற்கு அதிகப்படாத ஆனால் 3ற்கு குறையாத கலர் அன்றேல் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை டிஜிற்றல் வடிவமைப்பில் ஒவ்வொரு கலைஞர்களும் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  

  புகைப்படங்களைச் சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்

  • புகைப்படங்களை குறைந்த  தெளிவுதிறன் கொண்ட படக் கோப்புக்களாக அனுப்ப முடியும். தேவையான அதிகபட்ச கிடைமட்ட பரிணாமம் 1920 pixels பிக்ஸல்களாகவும் அதிக பட்ச செக்குத்துப் பரிமாணம் 1080 pixels பிக்ஸல்களாகவும் உள்ள அதேவேளை தெளிவுதிறன் 300 dpi ஆகும். படக் கோப்பு அதிக பட்சமாக 2  MBஆக இருத்தல் வேண்டும்.  உங்கள் புகைப்படக் கோப்பு நுழைவுப் படிவங்களை infosrilanka@worldbank.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். இதன் போது மின்னஞ்சலின் Subject lineல் Competition #PressforProgress for More and Better Jobs for Sri Lankan Women எனக்குறிப்பிடவும்.

  • இதே மின்னஞ்சலில் தயவு செய்து நுழைவுப் படிவத்தை இணைக்கவும்..

  மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே சமர்பித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

  காலக்கெடு

  முழுமைப் படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி உள்ளுர் நேரப்படி 23.59 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.    

  தகைமை

  ஆர்வமிக்க 'அமைச்சூர்' புகைப்படவியலாளர்கள், வளர்ந்துவரும் கலைஞர்கள் மற்றும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள தொழில்சார் கலைஞர்கள் என்ற அடிப்படையில்  பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். வயது வரையறை ஏதும் இந்தப் போட்டிக்கு கிடையாது. உலக வங்கி குழுமத்தைச் சேர்ந்த  ஆலோசகர்கள், பயிலுனர்கள், ஒப்பந்தக்காரர்கள் அடங்கலாக உலக வங்கி பணியாளர்கள் இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள்.  உலக வங்கி ஆதரவளிக்கும் திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டப் பணியாளர்கள் இதில் பங்கேற்க முடியும். நடுவர் குழாமிலுள்ளவர்களின் நெருங்கிய சொந்தக் காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் தூரத்து உறவினர்களும் கூட இந்த போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. 

  தொடர்பாடல்

  தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கு மாத்திரமே 2018 நவம்பர் 3ம்திகதி தெரியப்படுத்தப்படும். 

  பதிப்புரிமை

  ( போட்டி நிகழ்ச்சியின் இறுதியில் உலக வங்கிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டாலே அன்றி) புகைப்படங்கள் கலைஞர்களுக்குரித்தான சொத்துக்களாக இருக்கும். உலக வங்கியின் பொறுப்பிலுள்ள காலப்பகுதியில்  வங்கியின் காப்புரிமையினால் பாதுகாக்கப்பட்டிருக்கும். 

  தெரிவுசெய்யும் செயன்முறையும் பரிசுகளும் 

  தெரிவாளர் குழாமும் பரிசுகளும்

  உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி ஐடா சுவராய் ரிடிகோவ் தலைமையில் மைக்கல் போலே மற்றும் அன்றியா போல்டெக் ஆகியோரை  உள்ளடக்கிய சர்வதேசக் குழு, கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்யவுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் காட்சித்திறன் என்றவடிவில் பரிசுகள் வழங்கப்படும்.  பரிசு பற்றிய சரியான விபரங்கள் 2019ம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும். 

  கண்காட்சி அமைப்பு

   தெரிவு செய்யப்படும் கலைஞர்களின் ஆக்கங்கள் உலக வங்கியின் கலை நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கொழும்பிலுள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனம் (Academy od Design – AOD) ஆகியவற்றினூடாக ஓரு நபர் கண்காட்சி நடைபெறவுள்ளது. பிக்மி ((Pick me) நிறுவனத்தினூடாக முச்சக்கர வண்டிகளின் மூலம் நகரும் கண்காட்சி கொழும்பின் பல பாகங்களிலும் இடம்பெறும். இந்தக் கண்காட்சி  உலக வங்கியின் கொழும்பு பணிமனை மற்றும் கொழும்பு மாநகர சபை மற்றும் கீழே பட்டியல் படுத்தப்பட்ட கூட்டாளர் நிறுவனங்கள் ஆகியவற்றின் நெருங்கிய ஒருங்கிணைப்பின் கீழ் கொழும்பில் நடத்தப்படவுள்ளது. 

  கலைஞர்களின் பொறுப்பு     

  தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பிரதான பொறுப்புணர்வு என்னவெனில்; கண்காட்சியை ஏற்பாடு செய்யும் காலப்பகுதியில் உலக வங்கியின் இலங்கைப் பணிமனையின் தொடர்பாடல்களின் போது பொறுப்புணர்வுடன் உடனுக்குடன் பதில்களை அனுப்புவதை உறுதிப்படுத்தல். உரியநேரத்திற்குள்ளாக பணிமனையின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை உறுதிசெய்க. 

   

  கடைசியாகப் புதிய தகவல் சேர்த்தது: செப்டம்பர் 8, 2018

 • பங்காளரும் பங்காளர் வழிகாட்டுதல்களும்  

  உலக வங்கி பணிமனையின் பொறுப்பு

  கண்காட்சிக்கான புகைப்படங்களை அச்சிடுவதற்கும், கட்டமைப்பதற்கும் ஏற்படும் கட்டணங்களை உலக வங்கியின் இலங்கைப் பணிமனை செலுத்தும்.  கலைஞர்கள் தம்முடைய புகைப்படங்களை தாமே அச்சிடுவதற்கு விரும்பம் தெரிவிக்குமிடத்து அச்சிடுவதற்கும் கட்டமைப்பதற்கும் போக்குவரத்திற்கும் ஏற்படும் செலவுகளின் அளவைப் பார்த்து அதனை அனுமதித்து அதற்கு ஏற்படும் செலவுகளை மீளச் செலுத்த பணிமனையினால் முடியும். 

  பணிமனை அதன் வளாகத்தில் கண்காட்சி நிறுவுதலுக்கு பணம் செலுத்தும்.  ஆனால் கலைஞர்களுக்கு பணிமனையினால் எந்த கட்டணத்தையும் செலுத்த முடியாது. 

  பணிமனையாது கண்காட்சியின் ஒரு சிற்றேட்டை வடிவமைத்து அச்சிட்டு அதனை விநியோகி;க்கும்.  ஒவ்வொரு கலைஞருக்கும்  சிற்றேட்டின் 10 பாராட்டுப் பிரதிகள் கிடைக்கப்;பெறும்.

  உலக வங்கி குழுமத்தின் நிகழ்ச்சிகளுக்கு அமைவாக உலக வங்கிக் குழுவின் திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழக்கமான வழிகளில் பணிமனை ஊக்குவிக்கும். 

  பங்காளர் நிறுவனங்களின் பொறுப்புக்கள்  

  இலங்கையில் பெண்கள் தொழிலாளர் படையில் பங்கேற்பதை ஊக்குவிப்தற்காக ஆற்றுகின்ற பணி மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் பங்காளர்  நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன.  

  • மூலோபாய பங்காளர்- கொழும்பு மாநகர சபை (CMC)

  • வெளிக்கொண்டு செல்லல் மற்றும் ஊக்குவிப்பு - இலங்கை தேசிய புகைப்படக் கலைஞர்கள்

  • ;ஏஜென்ஸி பங்காளர்.- ஷிப்ட் சொல்லுசன்ஸ் (SHIFT Solutions)

  • அட்வகஸி பங்காளர்-  அட்;வகாடோ இன்ஸ்டிடியுட்

  டிசைன் என்கேஜ்மண்ட பங்காளர்-- AOD

  நகரும் கண்காட்சி பங்காளர்- பிக்மீ ( Pick Me)

  • ஒன்லைன் ஊடகப் பங்காளர் - ரோவர் மீடியா (Roar Media)

  • ஊடக பங்காளர் - விஜய நியூஸ்

  • விருது பங்காளர்- அபான்ஸ் மற்றும் சினமன் லைவ்

  இந்த முன்முயற்சியின் இரண்டாவது  கட்டத்திற்காக மேலதீகமாக பங்களிப்புக்களை மேற்கொள்வது பற்றி உலக வங்கி ஆராய்ந்து வருகின்றது. இந்த வகையில் பெண்கள் தொழில்களுக்கு செல்வதை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புக்கொண்டுள்ள சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும்  தனியார் துறையினரை கூட்டாளராக இணைந்துசெயற்பட முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருதுகளை கொள்வனவு செய்தல்  போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்குதல் போன்ற மாறுபட்ட விடயங்களுக்காக பங்களிப்புக்களைச் செலுத்த முடியும். 

  ஒரு பங்காளர் என்ற வகையில் நீங்கள் பின்வரும் அனுகூலங்களை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்?    

  • சமூக ஊடகங்கள்: உங்களுடைய பெயரையும் குறியீடையும் காண்பிக்கும் வலைப்பதிவு ஒன்றை உடனடியாக 1.5மில்லியன் எண்ணிக்கையிலானவர்கள்  பார்க்கத்தக்க வகையில் உலக வங்கியின் தெற்காசியா மற்றும் இலங்கை பேஸ்புக்  மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஊடாக பிரசுரிக்கப்படும். 

  • இணையம்: உலக வங்கியின் http://www.worldbank.com/srilanka இணையத்தளத்தினூடாக உங்கள் பெயர் உங்கள் லோகோ (Logo)ஆகியவற்றை முன்பே தீர்மானிக்கப்பட்ட பக்கத்திற்கு கொண்டு செல்லுதல்.

  • உங்கள் பெயரும் லோகோவும் (Logo)) நிகழ்வுகள், பிரசுரங்கள்;ஊடக நேர்காணல்களின் போது ( எங்கெல்லம் முடியுமோ) அங்கெல்லாம் உள்ளடக்கப்படும். 

  • உங்களது படைப்புக்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவதுடன் பிரதான அனுசரணையாளர்களால் முன்னெடுக்கப்படும் உரைகளின் போதும் நிகழ்வுகளின் போதும் உங்கள் பெயர்கள் சரியான முறையில் சுட்டிக்காட்டப்படும். 

  பங்காளர்  உடன்படிக்கை

  போட்டிக்கான அழைப்பு, கலைப் படைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல் , கண்காட்சி மற்றும் நிறுவல்  தொடர்பான அனைத்துவிதமான செலவுகளுக்கும் உலக வங்கி பொறுப்பேற்கும். இந்தக் கண்காட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய  நிகழ்வின் இரண்டாம் கட்ட முன்முயற்சிக்கு தேவையான நேரத்தையும் வளங்களையும் ஒதுக்கித்தருவதற்கு பங்காளர்கள் இணக்கம் தெரிவிப்பர். இந்த முன்முயற்சியில் பங்கேற்கும் ஏனைய நிறுவனங்களுக்கு உலகவங்கி நிதிக்கொடுப்பனவுகளை செய்யமாட்டாது. பங்காளர்கள் தமது நேரத்தை தாமாக முன்வந்து ஒதுக்குவதுடன நிகழ்ச்சிகள் அடங்கலான வெளித்தொடர்பை கட்டியெழுப்பும செயற்பாடுகளுக்கு இணை அனுசரணை வழங்க முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் பெண்களை தொழிற்படையில் இணைந்துகொள்கின்ற நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் முன்னெடுக்கின்ற பிரசாரத்தின் நோக்கங்களுடன்  ஒட்டியதாக பங்காளர்கள் தாம் முன்னெடுத்துவருகின்ற ஏதேனும் முன்முயற்சிகள், எமது பிரசார ஊக்குவிப்பு திட்டம் கண்காட்சி அன்றேல் அதனோடு தொடர்புபட்ட உசாத்துணை நிகழ்வுகளுடன் மேற்பொருந்தும் நிகழ்வுகளாக இருக்குமிடத்து அதற்கு பங்களிக்குமாறு பங்காளர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.; 

  .இந்த முன்முயற்சியில் உலக வங்கியோடு இணைந்து செயற்பட விரும்புபவர்கள்  infosrilanka@worldbank.org என்ற மின்னஞ்சலூடாக தொடர்புகொள்ளவும். 

for questions