சிறப்பம்சக் கதை

இலங்கையின் உயிா்ப்பல்வகைமையையும் வளங்களையும் பாதுகாப்பதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்

ஜூன் 19, 2017


Image
Photo Credit: Darshani de Silva

கதை சிறப்புக்கூறுகள்
  • இலங்கையில் சுற்றுச்சூழல் ரீதியில் மிகவும் நலிவுற்றிருக்கும் பகுதிகளில் உயிா்ப்பல்வகைமையை பாதுகாப்பதற்கும் பராமாிப்பை ஊக்குவிப்பதற்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அதிகாாிகள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றனா்.
  • குறித்த விடயத்தில் அக்கறைகொண்ட தரப்பினா் மத்தியில் இயற்கை வள முகாமைத்துவம் தொடா்பான மேம்பட்ட ஒன்றிணைப்பு அவசியமாகும் அதேவேளை மேம்பட்ட தரைத்தோற்றக்கட்டுமான முகாமைத்துவமும் அவசியமாகும்.
  • சமூகங்களின் செயல்திட்டங்கள் உயிா்ப்பல்வகைமைக்கு சாா்பான அபிவிருத்தி மற்றும் காலநிலைக்கு தாக்குபிடிக்கும் திறன் கொண்ட வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு துணைபுாிய முடியும்.

காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்புக்களை வகிப்பவா்கள் அங்கு இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடா்பாக நன்கறிவா். அந்தவகையில் காலியில் பிரதேச வனப்பாதுகாப்பு

அதிகாரி மொஹான் ஹீனடிகலவும் தனது பொறுப்பிலுள்ள வனப்பகுதியை அத்துமீறிப் படையெடுப்பவர்கள் தொடர்பில் அறிந்துவைத்துள்ளார். தனது தடத்தில் கால்வைத்துப் பயணிக்கையில் புற்தரையை ஆக்கிரமித்து லடானா கமாரா என்ற பூக்கும் படர் தாவரம் படர்ந்திருப்பதை கண்ணுற்றார். இந்தப்புற்கள் உணவிற்காக தேடியலையும் விலங்குகளுக்கு உணவளிக்கக்கூடியது. அங்கு அழையா விருந்தாளியாக நிற்கும் உயர்ந்த ஹவாரி நுகா மரங்களும் (அல்ஷ்டோனியா மக்ரோபிலா) வழித்தடத்தின் மீது தம் நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

“இந்தவகையான ஆக்கிரமித்துப்படரும் உயிரினங்கள் வனத்தின் குணாம்சத்தையே மாற்றுகின்றன. அத்தோடு அதன் உயிர்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன” என வனமெங்கும் படர்ந்திருக்கின்ற உயிரினங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் வனப்பாதுகாப்பு அதிகாரி மண்ணின் தரம் குறித்த தாக்கம் போன்றவை தமக்கு முன்பாக உள்ள ஏனைய கரிசனைகயாக காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் தென் மேற்குப்பிரதேசத்தில் வனத் திணைக்களம் முன்னெடுக்கின்ற கன்னலிய –தெடியாகல- நாகியதெனிய வனவளாகத்திட்டத்தை மேற்பார்வையிடுகின்றார் ஹீனடிகல. 10,867 ஏக்கர்கள் படர்ந்திருக்கின்ற இந்தவனப் பகுதி இலங்கைத் தீவிற்கே உரித்தான உயிரினங்களின் கோட்டையாகத திகழ்கின்றது.  இங்கு 220ற்கும் அதிகமான விலங்கின உயிரினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 41 விலங்கினங்கள் இலங்கைக்கே உரித்தான தனித்துவமுடையவை. அதேபோன்று இங்கு 301 தவார இனங்கள் உள்ளன. இவற்றில் 52 வீதமானவை இலங்கைக்கே தனித்துவமானவை. இந்த வனப்பகுதியில் உற்பத்தியாக ஓடும் மூன்று அருவிகள் நீர்வீழ்ச்சிகளுடன் இணைந்துகொண்டுள்ளன.

இங்கு ஹீனடிகல பல்வேறு முனைகளில் இருந்து யுத்தமொன்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றார். ஆக்கிமிரக்கும் உயிரினங்களை மாத்திரமன்றி ஏனைய பல சவால்களும் அவருக்கு முன்பாக உள்ளன. கடந்த பெப்ரவரி மாதத்தில் காட்டுத் தீ வனத்தின் 10 ஏக்கர் பகுதியை நாசப்படுத்தியிருந்தது. அதனைக் அணைப்பதற்கு கிராம மக்களுடன் இணைந்து கொண்டு வனப்பாதுகாப்பாளர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். “ நாங்கள் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம;” என்கிறார் ஹீனடிகல. புதிய திட்டமொன்றின் கீழ் வனத்தின் எல்லைகளை அடையாளப்படுத்துவதற்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கும் இயற்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் வனத்தின் சீரழிந்த பகுதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் கூறுகின்றார்.

இயற்கை தரைத் தோற்றக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல்

கன்னலிய –தெடியாகல- நாகியதெனிய வனவளாகத்திட்டமானது இலட்சியகரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.  உலக வங்கி அனுசரணை வழங்கிவருகின்ற இந்தத் திட்டமானது சுற்றுச் சூழல் ரீதியாக மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பிரதேசங்களிலும் அதனைச் சூழ்ந்தும் வாழ்பவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றுகின்ற அதேவேளை எங்ஙனம் இலங்கையின் செழிப்பான இயற்கை வளங்களையும் இயற்கை ஜீவிகளையும் பாதுகாக்க முடியும் என அக்கறை செலுத்துகின்றது.

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 30 வீதமான பகுதி காடுகளாக காணப்படுகின்றது. நாட்டைச் சுற்றியுள்ள 1620 கிலோமீற்றா கடற்கரை பகுதி செழிப்பான கடவள கரைவள சுற்றுச்சுழலால் நிறைந்துகாணப்படுகின்றது.  இலங்கையில் தற்போது காடழிப்பு காடுகள் சீரழிந்துசெல்லுதல் மற்றும் உயிர்ப்பல் வகைமை இழப்பு ஆகியன இடம்பெற்றுவருகின்றன. 1992ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வருடத்திற்கு 7,147 ஹெக்டேயர் என்ற அளவில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. உலர் வலயத்திலுள்ள சுமார் 30 வீதமான காடுகள் சீரழிந்து போயுள்ளன.

இவ்வாறாக காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக யானைகள் போன்ற விலங்கினங்கள் மனிதர்களுடன் மோதுகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  ஆசியாவிலேயே நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் அதிகமான யானைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இலங்கையில் வருடமொன்றிற்கு 70 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 யானைகள் பலியாகியுள்ளன.  அத்தோடு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 150 கோடிகள்) பெறுமதியான பயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.  போருக்குப் பிந்திய அபிவிருத்தி வேகம் பெறத்தொடங்குகையில் வனங்களின் மீதான அழுத்தம் அதிகரித்துச் செல்கின்றது.

சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை முற்போக்கான சுற்றாடல் கொள்கைகளையும் அதற்கு ஆதரவான சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளது. இந்த விடயங்கள் இருக்கையில், லட்சியகரமான சூழல்பாதுகாப்பு முகாமைத்துவ திட்டமானது, வனஜீவிராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன பரிபாலனத் திணைக்களம் ஆகியவற்றின் நிறுவன நிர்வாகத்திறன் மற்றும் முதலீட்டு தகைமை ஆகியவற்றை வலுவூட்டுவதிலும் நடைமுறைக்கிடலிலும் அவதானம் செலுத்தி வருகின்றது.

”இயற்கைத்தரைத் தோற்ற முகாமைத்துவத்தை முன்னேற்றுவதானது எமது பரிபாலன முயற்சிகளுக்கு அத்தியாவசியமாக காணப்படுகின்றது” என வனப் பரிபாலன ஆணையாளர் நாயகம் அநுர சதுருசிங்க தெரிவித்தார். 

சமூகங்களின் ஒத்துழைப்பு அவசியம்

கன்னெலியவில் ஹீனடிகலவும் அவரது குழுவினரும் எல்லைக் கோடுகளைப் பதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காட்டில் எதிர்நோக்கும் சில விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் மற்றும் முதியோர்களையும் அவர்கள் அழைத்துவந்திருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து  உயிர்ப்பல்வகைமைக்கு சார்பானதும் காலநிலைக்கு  தாக்குபிடிக்கும் திறன் கொண்டதுமான வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான சமூகஞ்சார் செயல்திட்டத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கையின் தனிச் சிறப்பு வாய்ந்த உயிர்ப்பல்வகைமை தொடர்பாக உள்ளுர் மக்கள் மத்தியிலும் இங்கு வருகைதரும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். ஆசியப் பிராந்தியத்தில் பரப்பளவின் அடிப்படையில் செழிப்புமிக்க உயிர்ப்பல்வகைமை கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. இங்குள்ள பல உயிரினங்களை உலகில் வேறெங்கிலும் காணமுடியாதென்ற அளவில் மிகச் சிறப்பான உயிர்ப்பல்வகைமை இங்கு காணப்படுகின்றது.

இன்னமும் எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதற்கும் இழந்தவை சிலவற்றை மீண்டுமாக கட்டியெழுப்புவதற்கும் இலங்கை புத்தாக்கமிக்க புதிய அணுகுமுறைகளைக் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

“எமது முயற்சிகள் நிலைபேறானதாக வேண்டுமெனில் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பாகத்தில் மாத்திரமன்றி வனஜீவி இவன வள பாதுகாப்பு மற்றும் வன வள முகாமைத்துவம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிதிட்டங்களிலும்  பங்கேற்பதற்கு சமூகத்தவர்கள் மத்தியில் முதலிட்டு ஊக்குவித்து ஒன்றிணைக்க வேண்டியது அவசியம்” என்கிறார் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிக்குழுத் தலைவரும் உலகவங்கியின் சிரேஷ்ட சுற்றுச்சூழல் சிறப்பியலாளருமான தர்ஷனி டி சில்வா. “வனத்தின் பாதுகாப்பாளர்களாக அவர்களை வலுவூட்டும் அதேவேளை இயற்கை வளங்களில் இருந்து பலாபலன்களைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் வகையில் அவர்களுக்கு மேலும் போட்டித்தன்மை மிக்கதும் பொருத்தமானதுமான வாழ்வாதார வாய்ப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்தத் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சமூகங்கள் வழங்கிவருகின்ற ஆதரவு குறித்து ஹீனடிகல மகிழ்ச்சிகொண்டுள்ளார். வெளியிடங்களில் இருந்து வருகைதருபவர்களுக்கு இவர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகின்றனர். வனங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தகவல்களை தெரிவிப்பதனூடாகவும் மீள்நடுகை செயற்பாடுகளில் தமது அறிவையும் பாரம்பரிய நுட்பங்களையும் பகிர்ந்துகொள்வதனூடாகவும் வனங்களைப் பாதுகாக்கும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்கள் உதவி வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.


Api
Api

Welcome