சிறப்பம்சக் கதை

உண்மையான அபிவிருத்தியை உணர தகவல்களை அறிதல் அவசியம்

மே 26, 2017


Image

கதை சிறப்புக்கூறுகள்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டமானது, அரசாங்கம் பொறுப்புகூறுவதை உறுதிப்படுத்துவதற்கும் ஜனநாயக நடைமுறையில் துடிப்புடன் பங்கேற்பதற்கும் பொதுமக்களுக்கு உதவுகின்றது.
  • அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் வகையில் தகவல்களைக் கோரவும்; அதனைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்புடைய வகையில் மனங்களை மாற்றுவதிலேயே இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தின் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.
  • அா்த்தமுள்ள தகவல்களை வெளிப்படுத்தல்கள் துரித வெற்றியைத் தருவதுடன் பொருளாதார ரீதியில் அர்த்தமுடையதாக அமைகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்,தரவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை கணிசமான அளவிற்கு குறைத்துக்கொண்டதனால் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

வாழ்க்கையில் தமக்கென சொந்தமாக வீடு இருப்பது ஒவ்வொரு மனிதனின் கனவாகும். அந்தக்கனவு, ரிக்ஷாவண்டி இழுத்துப் பிழைப்பு நடத்தும் இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மஸ்லூம் நடாபிற்கும் இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வீட்டைக் கட்டுவதற்கு தனது வருமானம் போதாமல் இருந்தமையால் நடாபின் கனவு சுயமாகக் கைகூடவில்லை. இருந்தபோதிலும் இந்தியாவிலுள்ள தேசிய வீடமைப்புத்திட்டமொன்றின் கீழ் வீடு நிர்மாணப்பணியை ஆரம்பிப்பதற்காக 70,000 இந்திய ரூபா (கிட்டத்தட்ட 1,100 அமெரிக்க டொலர்கள்)  வரையிலான தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுத் திட்டத்திற்காக நடாப் விண்ணப்பித்திருந்தார். ஐந்து ஆண்டுகள் ஆகியும் தனக்கு கிடைக்கவேண்டிய முதற்கட்டத் தொகையான 15,000 இந்திய ரூபாவிற்காக அவர் காத்திருந்தார். இது பற்றி முறைப்பாட்டைத் தெரிவித்த போது அரசாங்க அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை முன்நகர்த்துவதற்கு இலஞ்சம் கோரினர்.

தனக்கு இவ்விடயத்தில் உதவி அவசியம் எனத் தீா்மானித்த நடாப், தகவல் அறியும் உாிமை விண்ணப்பத்தை சாியான முறையில் நிரப்புவதற்கும் அதனைச் சமா்பிப்பதற்கும் அரச சாா்பற்ற நிறுவனமொன்றின் உதவியை நாடினாா்.  தேசிய வீட்டுத் திட்டத்திற்காக தாம் சமா்ப்பித்திருந்த விண்ணப்பம் தொடா்பில் நாளாந்த முன்னேற்ற அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தகவல் அறியும் உாிமை மனுவில் நடாப் கோாியிருந்தாா்.  அந்த அரச நிறுவனத்தில் தகவல் அறியும் உாிமை மனுக்களை பெற்றுக்கொள்வதற்கு பொறுப்பாகவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தா்,தகவல் அறியும் உாிமை மனுவைப் பெற்றுக்கொண்டபோது வெளித்தோற்றத்தில் பாா்க்கையில் உள்ளதைப் போன்று நடாப், உதவியற்ற நபா் அல்ல என்பதை உணா்ந்துகொண்டனர். அடுத்த சில நாட்களில் வீட்டை நிா்மாணிப்பதற்குத்  தேவையான நிதியின் முதற்கொடுப்பனவிற்கான காசோலையை அவா்கள் கையளித்தனா்.

இந்தியாவில் 2005ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் வெற்றிக் கதைகளில் ஒன்றாக நடாபின் கதை பதிவுசெய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து வந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில், தமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் கேள்விகள் தொடா்பில் பதில்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் விடயத்தில் அரசாங்கத்தை பொறுப்புக்கூறவைப்பதற்கும் ,ஜனநாயக நடைமுறையில் காத்திரமான பங்களிப்பை வழங்குதவற்கும்  பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனா்.

இவ்வாண்டு பெப்ரவாி 3ம்திகதி இலங்கையில் தகவல் அறியும் உாிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல ஆண்டுகாலமாக சிவில் சமூக செயற்பாட்டாளா்கள் அரச சாா்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகத்துறையினரால் தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசாரங்களின் விளைவாக உலகிலேயே மிகவும் வலுவுள்ள சட்டக் கட்டமைப்பைக் கொண்ட தகவல் அறியும் உாிமைச்சட்டங்களிலொன்றாக இலங்கையின் சட்டம் அமைந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அவசியமானது என்ன?

இலங்கையில் தகவல் அறியும் உாிமைச் சட்டம்

கட்சிகள் பலவற்றின் ஆதரவு உள்ளடங்கலாக பரந்துபட்ட கூட்டணி இலங்கையில் தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் நடைமுறைக்கிடலுக்கு வழிகோலியது. ” தகவல் அறியும் உாிமைச் சட்டமானது இலங்கையில் மேலும் வெளிப்படையானதும் பொறுப்புமிக்கதுமான அரசாங்கத்திற்கு வழிகோலும் என நோக்கப்படுகின்றது. பாரபட்சமற்ற வகையிலும் வினைத்திறன்மிக்கதாகவும் தகவல் கிடைப்பதற்கு வழிசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக நாம் பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம்” என இலங்கையின் முன்னாள் ஊடகத்துறை அமைச்சா் கயந்த கருணாதிலக்க தொிவிக்கின்றாா்.  இருந்தபோதும் ” அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் வகையில் தகவல்களைக் கோரவும்; அதனைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்புடைய வகையில் மனங்களை மாற்றுவதிலேயே இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தின் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.” என அவா் மேலும் சுட்டிக்காட்டினாா்.

தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் கீழ் தகவலை வழங்குமாறு அரசாங்க நிறுவனமொன்றிடம் மனுத்தாக்கல் செய்யமுடியும். ஒரு திட்டத்தினை முன்னெடுப்பதற்கான செலவு  அன்றேல் எவ்வாறு விலைமனு வழங்கப்பட்டது போன்ற உள்ளகத் தகவல்களை வெளிப்படுத்துவதாக இதனை அா்த்தப்படுத்திக்கொள்ளமுடியும். அமைச்சுக்கள் தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது சேகாிக்கின்ற தரவுகளைக் கூட தகவல் அறியும் உாிமை மனுவின் மூலம் கோரமுடியும்.  இலங்கையின் தகவல் அறியும் உாிமைச் சட்டமானது சில மாதகாலத்திற்குள்ளாகவே சவால்களை எதிா்கொள்ளத் தொடங்கியுள்ளது.  ஊழியா் சேமலாப நிதிக்கான முதலீடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன ? கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு எவ்வாறு மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன ? போன்ற மாறுபட்ட கேள்விகள் தொடா்பான விண்ணப்ப மனுக்கள் ஏற்கனவே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் உாிமை என்பது அனைத்து விதமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான திறந்த அனுமதியை உறுதிப்படுத்தவில்லை. தேசிய பாதுகாப்பு போன்ற காிசனைக்குாிய விடயங்கள் தொடா்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் சில விலக்களிப்புக்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் சந்தேகம் இருக்குமேயானால் மக்கள் தகவல் அறியும் உாிமை ஆணைக்குழுவின் தலையீட்டைக் கோர முடியும். 


Image

Image

ஒரு மூலோபாய நடைமுறைக்கிடல் திட்டம் .

அடுத்து வரும் வருடங்களில்  முகாமைத்துவ நடைமுறைகளில் அதன் கடந்த கால செயற்பாடுகளை மீளமைக்கின்ற பாரிய பணி இலங்கை அரசிற்கு முன்பாக உள்ளது.  தகவல் அறியும் உாிமை சட்டத்தை வினைத்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஒரு தொகை தகவல் அதிகாாிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன் சட்ட கட்டமைப்பும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. செயல்திட்டத்தின் முன்னேற்றம் தொடா்பில் தொடா்ச்சியாக அறிந்துகொள்வதற்கு வினைத்திறன்மிக்க கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு மூலோபாயங்கள் அவசியமாகும்.  பெருநிறுவனங்களும் அரச சாா்பற்ற நிறுவனங்களும் தமக்குாிய பொறுப்புக்களை சந்திக்கவேண்டியது அவசியமாகும். 

தகவல் அறியும் உாிமை தொடா்பான விண்ணப்பங்களை கையாள்வதற்காக ஒவ்வொரு அரச பொது நிறுவனங்களிலும் பொதுத் தகவல் அதிகாாிகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பா்.  பிரஜையொருவாின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தொடா்பான தகவல் அறியும் உாிமை மனுக்கள் தொடா்பில் அதிகாாிகள் 48 மணித்தியாலங்களுக்குள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனா். தகவல் அறியும் உாிமை மனுவொன்றை சமா்பிப்பது தொடா்பில் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சமா்பிக்கும் தகவல் அறியும் உாிமை மனுவில் கோரப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தகவல் அதிகாாி மறுப்புத்தொிவிக்குமிடத்து அதற்கு தகுந்த காரணத்தை சமா்பிக்கவேண்டும். அன்றேல் சட்டரீதியான அபராதம் விதிக்கப்படலாம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நடைமுறையானது மேலும் சீரமைக்கப்பட்டு தகவல் அறியும் உாிமையை மேலும் வினைத்திறன் மிக்கதாகும் இலகுவாகவும் பயன்படுத்துவதற்கு வழிகோலப்படும்.

மே 5ம் திகதியன்று ,தகவல் அறியும் உாிமை ஆணைக்குழுவானது ,உலக வங்கியின் உதவியுடன்  அதன் பணிகள் தொடா்பில் மூலோபாய நடைமுறைக்கிடல் திட்டமொன்றை வெளியிட்டது. இந்த செயற்திறன்மிக்க ஆவணமானது  அடுத்து வரும் மூன்று வருடகாலப்பகுதிக்கு  தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் வினைத்திறன்மிக்க அமுலாக்கத்திற்கு வழிகாட்டும் ஆவணமாக அமைவதுடன் வழமையான மீள்பாா்வைக்கும் உட்படுத்தப்படும். ”இந்த நடைமுறையை தெளிபடுத்துவதற்கு அரசாங்கம்  பணியாற்ற வேண்டிய அதேவேளை பொதுமக்கள் இதன் உாிமையை தமது கரங்களில் எடுத்தக்கொள்வது அவசியமாகும்” என தகவல் அறியும் உாிமை ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த கம்மன்பில தொிவித்தாா். ” இதன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மட்டுமன்றி அரச சாா்பற்ற நிறுவனங்கள் வா்ததக நிறுவனங்களோடு பொதுமக்களும் தமது வகிபாகத்தை ஆற்றவேண்டும்.”

வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவித்தல்

புதிய தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் ஆளுகைக்கு தனியாா் துறையினரும் உள்ளடக்குவதுடன் அதன் பயனாளா்களாகவும் அவா்கள் திகழ்கின்றனா். 

தகவல்களை வேண்டப்படும் நேரத்தில் முன்வந்து வெளிப்படுத்துகின்ற விடயத்தில் கொடுக்கப்படுகின்ற காத்திரமான முக்கியத்துவமானது இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நற்செய்தியாக அமைந்துள்ளது. ”  நாளாந்தம் அரசாங்கத்தினால் உருவாக்கப்படுகின்ற தகவல்களானது மிகப்பெறுமதிக்க சொத்துக்களாக அமைந்துள்ளது. இந்தத் தகவல்களை தனியாா் துறையினா் எளிதான முறையில் பயன்படுத்துவதையும் மீளப்பயன்பாட்டிற்கு உட்படுத்துவதையும் உறுதிசெய்யும் வகையில் வழங்குவதன் மூலமாக  பெறுமதிமிக்க பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதனால் நிறுவனங்களின் பாிவா்த்தனை செலவுகள் குறைவதுடன் போட்டித்தன்மை மற்றும் புத்தாக்கச் செயற்பாடுகள் அதிகாிக்கும்.” என உலக வங்கியின் சிரேஸ்ட பொதுத்துறை முகாமைத்துவ சிறப்பியலாளா் பேபியன் சீடரா் தொிவித்தாா்.

தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வாி நடைமுறைகள் ,வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள், வா்த்தக நிறவனங்களின் விலைமனுக்கோரல் செயற்பாடுகள் போன்ற நிதியியல் தரவுகள் தொடா்பான  ஒன்றுதிரட்டப்பட்ட தரவுத்தளத்தை இலகுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி இருக்குமானால்  இலங்கையிலுள்ள நிறுவனங்கள் பெரும் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என உதாரணந்தந்து விளக்குகின்றாா் உலகவங்கியின் சிறப்பியலாளா்.  இது போக்குவரத்து தரவுகள், இல்லங்கள் தோறும் நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கள்  போன்றவற்றிற்கும் இது உண்மையாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வகையான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் சகலருக்கும் சமனாக போட்டிதளத்தை உறுதிசெய்து போட்டித்தன்மையை ஊக்குவிக்க முடியும்.

உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஐரோப்பிய ஒன்றிய பொதுத் துறை தகவல் வழிகாட்டியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் அரச நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ,திரட்டப்பட்ட, அன்றேல் கொடுப்பனவு வழங்கப்பட்ட தரவுகளை நிறுவனங்கள் மீளப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஆதரவளிக்கின்றது.  காலநிலை மற்றும் வரைபடங்கள் தொடா்பாக உருவாக்கப்படும் தரவுகளானது தடங்காட்டி ( ஜிபிஎஸ்) தொழில்நுட்பத்திற்காக மூன்றாவது தரப்பினரால் வா்த்தக ரீதியாக பயன்படுத்தப்படுகின்றது.

பொதுத் துறை நிறுவனங்கள் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்களை கணிசமான அளவில் குறைத்துக்கொண்டமை பயனாளா்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகாிப்பிற்கு வித்திட்டுள்ளது.  உதாரணமாக டானிஷ் தொழில்முயற்சியாண்மை மற்றும் நிா்மாண அதிகார சபை அதன் கட்டணங்களைக் குறைத்துக்கொண்டமையால் மீளப் பயன்படுத்துவா்களின் எண்ணிக்கை  10,000% அதிகாித்துள்ளதுடன்  மீள் பாவனைச் சந்தையின் வளா்ச்சியானது கடந்த எட்டுவருட காலத்தில் 1,000% மாக அதிகாித்துள்ளது.  கட்டணங்களைக் குறைத்துக்கொண்டதால் குறைவடைந்த வருமானத்தை போன்று நான்கு மடங்கு மேலதீக வாி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, தகவல் உட்கட்டமைப்பும் நடைமுறைகளும் எதிா்காலத்தில் முகங்கொடுக்கக்கூடிய சவால்களை எதிா்கொள்ளத்தக்க வகையில் மாற்றமடையவேண்டும்.  பொதுமக்களுடன் தொடா்பாடல்களை அதிகாிக்கும் கொள்கைகள் மனுக்கள் சமா்பிப்பதை ஊக்குவித்தல் பொதுக் கலந்தாலோசனைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதானது நடைமுறையைக் வலுப்படுத்துவதற்கும் பின்னுாட்டத்தை அதிகாிப்பதற்கும் வழிகோலும். முன்னோக்கிச் செல்கையில் தகவல் அறியும் உாிமையானது  சமாந்திரமான முறையில் முன்னெடுக்கப்படும் துயா் களைவு கட்டமைப்புக்களால் வலுப்படுத்தப்படவேண்டும். தாம் பெற்றுக்கொள்ளுகின்ற தகவல்களின் அடிப்படையில் பிரஜைகள் நடவடிக்கை எடுக்கத்தக்கதாக இந்தக்கட்டமைப்புக்களுடாக வலுவூட்டப்படுவா்.


Api
Api

Welcome