Skip to Main Navigation
செய்தி வெளியீடு நவம்பர் 9, 2021

இலங்கைக்கு விஜயம் செய்த உலக வங்கியின் துணைத்தலைவர், மக்களில் முதலீடுகள் மற்றும் மீட்சிக்கான நெகிழ்வுத்திறனுக்கான ஆதரவினை மீளவலியுறுத்தினார்

கொழும்பு, நவம்பர் 9, 2021 – இலங்கைக்கான ஆறு நாள் விஜயத்தை இன்று நிறைவு செய்த உலக வங்கியின் தெற்காசிய துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபர் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து அனைவரையும் உள்ளடக்கியதும், நெகிழ்வுத்திறன் கொண்டதுமான இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கான உலக வங்கியின் உறுதிமொழியை மீளவலியுறுத்தினார்.

இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து இலங்கையை மீட்பதற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் உலக வங்கியின் ஆதரவின் முக்கிய பகுதிகள் குறித்து ஸ்காஃபர் விவாதித்தார். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த திட்ட அதிகாரிகள், தனியார் துறை மற்றும் வளர்ச்சி பங்காளிகளையும் ஸ்காஃபர் சந்தித்தார்.

"கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பாக இலங்கை மக்கள் மகத்தான மீண்டெழுந்தன்மையையும் உறுதிப்பாட்டையும் வௌிப்படுத்தியுள்ளனர். இணைய வழியான பாடசாலைக் கல்வியில் பங்கேற்கும் அளவுக்கு இணைய சமிக்ஞையைப் பெறுவதற்கு ஆபத்தான உயரங்களில் ஏறிநிற்கும் மாணவர்கள் மற்றும் தடுப்பூசிகள் வயதானவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய கூடுதல் எல்லைக்குச் சென்ற பொது சுகாதார அதிகாரிகள் பற்றிய கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபர் கூறினார். "இலங்கை மக்களின் உணர்வை நான் பாராட்டுகிறேன், மேலும் இலங்கை மீண்டும் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்போது உலக வங்கியின் ஆதரவைத் தொடர உறுதியளிக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மனித மூலதனத்தை துரிதப்படுத்துதல்: எதிர்கால உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பசுமை, மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல் தொடர்பான அமைச்சுக் கொள்கை உரையாடலில், உலக வங்கியின் மனித மூலதனத் திட்டத்தில் இலங்கை இணைந்துள்ளதாக அறிவித்தது. உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு மனித மூலதனத்தை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது. உலக வங்கி, இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இலங்கையர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் தேவைகளை ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் முழுமையான முறையில் நிவர்த்தி செய்வதில் பணியாற்றும்.

"உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு போட்டித்திறன் மிக்க நாடாக மாறுவதற்கான மனித மூலதன ஆற்றலின் வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்று ஸ்காஃபர் கூறினார். "பசுமை, மீள்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியை நோக்கி நாட்டை வலுப்படுத்துவதற்காக மக்களிடம் முதலீடு செய்வதற்கான அர்ப்பணிப்புக்காக இலங்கை அரசாங்கத்தை நான் வாழ்த்துகிறேன்" என அவர் மேலும் கூறினார்.

தொற்றுநோய் ஏற்கனவே சவாலான நிதி மற்றும் பெரிய பொருளாதார நிலைமையை மோசமாக்கியுள்ளது. உலகளவில் அதிகரித்து வரும் உணவு மற்றும் எண்ணெய் விலைகளின் சுமைகளைச் சுமக்கும் ஏழைகள், மிகவும் ஆபத்தில் இருப்பவர்கள் மீது சமமற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

சந்தை தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் திறன்கள் மற்றும் முதலீட்டு சூழலை மேம்படுத்துதல் மூலம் ஆற்றல் மாற்றத்திற்கான தனது திட்டங்களின் மூலம் இந்த உலகளாவிய அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது பார்வையை மேன்மைதங்கிய ஜனாதிபதி ராஜபக்ஷ விவாதித்தார். இவை, பொது முதலீட்டை நிறைவு செய்வதற்கும், நிதி மற்றும் வெளி நிலை மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கும், அளவிடப்பட்ட தனியார் முதலீட்டிற்கான அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய தளமான காலி கோட்டையையும் ஸ்காஃபர் பார்வையிட்டார். உலக வங்கி மூலோபாய நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இந்த தளத்தைப் பாதுகாக்க உதவுகிறது, இதில் தளத்தின் பாரம்பரிய மதிப்பை மீட்டெடுப்பது மற்றும் மேம்படுத்துவதும் பாதுகாப்பு மற்றும் வெள்ளப் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் அடங்கும். பெருநகர கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவுடன், வெள்ள முகாமைத்துவம் மற்றும் கொழும்பு நகரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஸ்காஃபர் அவதானித்தார்.

இலங்கையில் விவசாய விநியோகச் சங்கிலிகளை இணைக்க பாதுகாப்பான, காலநிலை-எதிர்ப்புச் சாலைகளை வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய இணைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஸ்காஃபர் தனது பயணத்தை முடித்தார். இந்த கையொப்பத்தை ஒட்டி, இலங்கை வீதி பாதுகாப்பு அறிக்கையை வெளியிடும் விசேட நிகழ்வும் நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் இணைந்து இடம்பெற்றது.


தொடர்பு

கொழும்பில்
டிலினிகா பீரிஸ்
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
வொஷிங்டனில்
டயானா சங்
+1 (202) 473-8357
dchung1@@worldbank.org
Api
Api