Skip to Main Navigation
செய்தி வெளியீடு நவம்பர் 27, 2020

இலங்கை கொவிட் – 19 இலிருந்து மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்பவும் உள்ளடக்கிய, தாங்குதிறன் கொண்ட வளர்ச்சியை உணரவும் முடியும்

கொழும்பு, 2020 நவம்பர் 27 - மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் புதிய வதிவிடப் பணிப்பாளராகிய  பாரிஸ் ஹத்தாத்-செர்வோஸ் இன்று இலங்கைக்கான தனது முதல் பயணத்தை நிறைவு செய்தார். இந்த விஜயத்தின் நோக்கம் முக்கிய கொள்கை வகுப்பாளர்களைச் சந்தித்து நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகளைப் புரிந்துகொள்வதாகும். நேபாளத்தின் காத்மண்டுவை மையமாகக் கொண்ட, தனது புதிய பாத்திரத்தில் வதிவிடப் பணிப்பாளரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். கொழும்பை மையமாகக் கொண்ட மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளராகிய  சியோ கந்தாவும்  ஹதாத்-செர்வோசுடன் இணைந்துகொண்டார்.

"அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு மற்றும் மாகாணங்களுக்கான எமது விஜயங்களின் போது நாங்கள் சந்தித்த  அனைவருடனும் நாங்கள் நடத்திய வெளிப்படையான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நாங்கள் பாராட்டுகிறோம். இவை எங்களுக்கு இலங்கையின் நிலையான அபிவிருத்தி கதைக்களம் மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய வளர்ந்து வரும் புரிந்துணர்வை வழங்கின” என்று மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளராகிய  பாரிஸ் ஹத்தாத்-செர்வோஸ் குறிப்பிட்டார். "உலக வங்கி இலங்கை மக்களுக்கான நீண்டகால பங்காளராவதுடன், நாட்டினது அனைத்து மக்களின் நலனுக்காகவும் நாடு அதன் முழு திறனை அடைவதற்கு உதவுவதாக உலக வங்கி  உறுதிபூண்டுள்ளது."

உலக வங்கியின் புதிய முகாமைத்துவக் குழுவானது, சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் இலங்கையில் தற்போதைய உலக வங்கித் திட்டத்துடன் தொடர்புடைய செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வச் சந்திப்புக்களை மேற்கொண்டது.

இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கான பரந்த இயலுமையை நன்கு புரிந்துகொள்வதற்கு, பரந்தளவில் சிவில் சமூக உறுப்பினர்கள், தனியார் துறைப் பிரதிநிதிகள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்த விஜயங்களில் தெற்கில் உள்கட்டமைப்பு அபிவிருத்தியைக்  கண்காணிப்பதற்காக அம்பாந்தோட்டை  மாவட்ட துறைமுகம் மற்றும் பிற வசதிகளுக்கான விஜயமும்  உள்ளடக்கப்பட்டிருந்தது. களுத்துறை மாவட்டத்தின் ஹல்தொட்டையிலுள்ள   அரசாங்க மருத்துவமனையில் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கும், தொற்றாநோய்களின் பரிசோதனை மற்றும் முகாமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு சேவைகளை வலுப்படுத்துவதற்குமான அரசாங்கத்தின் முயற்சி பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர்.

 "இந்த கொவிட் - 19 சகாப்தத்தில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை உலக வங்கி கவனத்தில் கொண்டுள்ள அதேவேளை நிலையான மீட்புக்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம். உள்ளடக்கிய மற்றும் தாங்குதிறன்மிக்க வளர்ச்சிக்குரிய கொவிட்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில் இலங்கையை மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்ப உதவுவதற்காக எங்கள் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் நிதி வளங்களை நாங்கள் பயன்படுத்துவோம்” என்று மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிட முகாமையாளராகிய சியோ கந்தா குறிப்பிட்டார். “அடுத்துவரும் 4-5 ஆண்டுகளுக்கு இலங்கையுடனான உலக வங்கிக் குழுமத்தின் பணிகளைத்  தீர்மானிக்கும் எமது புரிந்துணர்வை ஆழப்படுத்தவும், நாட்டிற்கான எமது அடுத்த பங்காண்மைக் கட்டமைப்பைத் தெரிவிக்கவும் எமது முறையான நாடு கண்டறிதலை இற்றைப்படுத்தும் செயல்பாட்டை   நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.”

முறையான நாடு கண்டறிதல் என்பது ஒரு முழுமையான பகுப்பாய்வாகும், இது பரந்தளவிலான பங்குதாரர்களுடனான ஆலோசனைகள், வறுமையைக் குறைப்பதற்கான முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் நிலையான முறையில் பகிரப்பட்ட செழிப்பை உயர்த்துவது பற்றிய தகவல்களால் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய்க்கு பிரதிபலிப்புச் செய்யும் விதமாக, உலக வங்கி தற்போதுள்ள முதலீட்டு விடயப்பரப்பை மாற்றி தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுவதற்காக ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை மீண்டும் ஒதுக்கியது. அவசரமாகத் தேவைப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்குதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தற்காலிக பண உதவி மூலம் ஆதரவளித்தல், பொதுப் போக்குவரத்தில் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், பாடசாலை மாணவர்களுக்குத் தொலைதூரக் கல்வியை எளிதாக்குதல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்குவதை மேம்படுத்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்குதல் ஆகியன ஏற்கனவே முடிந்துவிட்ட அல்லது நடந்து கொண்டிருக்கின்ற அவசரகால பிரதிபலிப்பு நடவடிக்கைகளாகும். அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் வளர்ந்து வரும் அபிவிருத்தித் தேவைகளுக்கேற்ப திட்டத்தை மேலும் சீராக்குவதற்குக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் தற்போதைய உலக வங்கியின் முதலீட்டு விடயப்பரப்பானது, போக்குவரத்து, நகர்ப்புறம், விவசாயம், நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 3.65 பில்லியன் அமெரிக்க டொலர்  பெறுமதியான  மொத்த அர்ப்பணிப்புடன் கூடிய நடைபெற்றுக் கொண்டிருக்கும் 19 செயற்றிட்டங்களை உள்ளடக்கியதாகும்.


தொடர்பு

Colombo
Dilinika Peiris
dpeiris@worldbank.org
Washington D.C.
Diana Chung
dchung1@worldbank.org
Api
Api