Skip to Main Navigation
பேச்சுக்கள் & எழுத்துப்படிவங்கள்ஜூலை 18, 2023

'இலங்கையின் மீட்சியை நோக்கி: மீண்டெழும் சூழல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி'

மாலைதீவு நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்-ஸெர்வொஸ் நிகழ்த்திய சிறப்புரை

குட் ஆஃப்டர்னூன்! ஆயுபோவன்! வணக்கம்!

மதிப்பிற்குரிய பத்திரிகைக் கழக உறுப்பினர்களே கனவான்களே, கனவாட்டிகளே!

இலங்கையின் மீட்புக்கான பாதை பற்றியும் பசுமையான தாங்குதிறன் கொண்ட மற்றும் உள்ளடக்குகின்ற அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு ஓர் அபிவிருத்திப் பங்காளி என்ற முறையில் உலக வங்கி எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றியும் கலந்துரையாடுவதற்காக இன்று உங்கள் மத்தியில் இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கை தற்சமயம் முகங்கொடுக்கின்ற முன்னொருபோதும் இல்லாத பல்தொகுதி நெருக்கடிகளை நாமனைவரும் நன்கறிவோம்.

கடந்த வருடம் இதே நேரத்தில்இ அதாவது பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை பல தசாப்பங்களில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்ததை நாம் கண்டோம்.

பொருளாதாரம் 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதமும் 2023இன் முதலாவது காலாண்டில் 11.5 சதவீதமும் சுருங்கியது.

இந்த நெருக்கடி, மக்களின் வாழ்க்கைத் தரத்தில் அழிவுகரமான தாக்கங்களை ஏற்படுத்தியது. வறிய மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இலங்கையின் கடந்தகால அபிவிருத்தி ஆதாயங்கள் ஆபத்திற்குள்ளாகின.

எமது மதிப்பீட்டின்படிஇ 2021க்கும் 2022க்கும் இடையே வறுமை 13.1 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக இருமடங்கு அதிகரித்தது – அதாவது, மேலும் 2.5 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். 2023இல் இது மேலும் 2.4 சதவீதம் அதிகரிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். 

மேலும் அநேகமான மக்கள் வறுமையிலிருந்து ஓர் அதிர்ச்சி தள்ளிய தூரத்தில் மட்டுமே இருக்கின்றனர். எமது மதிப்பீட்டின்படி சனத்தொகையில் 5.7 சதவீதமானோர் வறுமைக் கோட்டிற்கு 10 சதவீதம் மட்டுமே மேலான நிலையில் வாழ்கின்றனர். மேலும் 5.6 சதவீதமானோர் வறுமைக் கோட்டிற்கு 10 முதல் 20 சதவீதம் மேலாக உள்ளனர்.

வறுமை மற்றும் பாதிக்கப்படும் தன்மையில் ஏற்பட்டுள்ள இந்த வியத்தகு அதிகரிப்பு, பல தசாப்தங்களாக ஈட்டப்பட்ட மனித மூலதன ஆதாயங்களை அழித்துவிட்டது. உதாரணமாக இப்பொழுது கல்வி கற்பதில் பாரதூரமான நெருக்கடி நிலவுகின்றது. 3ஆம் தர மாணவர்களில் 14 சதவீதமானவர்கள் மட்டுமே குறைந்தபட்ச எழுத்தறிவைப் பெறுகின்றனர். 15 சதவீதமானவர்களே எண்ணறிவைக் கொண்டுள்ளனர்.

நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த வேதனையான சூழ்நிலை, பொருளாதாரத்தை உறுதிலைப்படுத்துவதற்கு ஆழமான சீர்திருத்தங்களையும் வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்குத் துணிச்சலான நடவடிக்கைகளையும் தேவைப்படுத்துகின்றது. 

இத்தகைய அசாதாரணமான சவால்களின் மத்தியிலும் இலங்கை மக்கள் நம்பமுடியாத தாங்குதிறனை வெளிப்படுத்தியுள்ளனர். 

கடந்த வருடம் உணவு, மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய பொருள்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவியபோது இது தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ததோடு, கஷ்டங்களை சமாளிப்பதற்கு புதுமையான தீர்வுகளைக் கண்டுகொண்டனர். 

ஒரேயொரு ஆண்டில், இலங்கை தனது பொருளாதாரத்தை எதிர்நோக்கும் மோசமான சவால்களை நிவர்த்தி செய்வதில் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

நாடு தற்சமயம் பொருளாதார மீட்சிக் கட்டத்தில் உள்ளது. சில கடினமான சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சி ஆரம்பமாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொண்டமை, உள்நாட்டுக் கடன் மீளமைப்புத் திட்டத்திற்கான பாராளுமன்ற அங்கீகாரம் மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சர்வதேச நிதியுதவியைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாம் அரசாங்கத்தைப் பாராட்டுகின்றோம். 

அரசாங்கம் ஓர் இலட்சியபூர்வமான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதோடு பொருளாதாரத்தை உறுதிநிலைப்படுத்துவதற்காக வரிச் சீர்திருத்தங்கள், செலவைப் பிரதிபலிக்கும் பயன்பாட்டுப் பொருள் விலையிடல் வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு கடன் மீளமைப்பு என்பன உள்ளிட்ட சில கடினமான மற்றும் அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த சில மாதங்களில் உறுதிப்பாட்டிற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. 2022 செப்டெம்பரில் 69 சதவீதமாகவிருந்த பணவீக்கம் 2023 ஜூனில் 12 சதவீதமாகக் கீழ்நோக்கிச் சரிந்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மீளமைப்பு பற்றிய சந்தேகங்கள் அகல்வதால் சந்தை வட்டி வீதங்களும் குறைகின்றன. வெளிநாட்டு நாணயமாற்றுத் திரவத்தன்மை நிலையும் முன்னேறியுள்ளது.

இருந்தபோதிலும், இது பயணத்தின் முடிவல்ல. மீட்பிற்கான பாதை நீண்டது. இலங்கை தனது இலக்கை நோக்கித் தொடர்ந்து நகர வேண்டும்.

அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கையின் மீட்சிக்கு மிகவும் முக்கியமானவை. உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய மேலும் முக்கியமான சவால்கள் இன்னமும் உள்ளன.   நீண்டகால கடன் மீளமைப்பு நடைமுறை ஓர் முக்கியமான எதிர்மறை இடராகும். அது மேலும் நிச்சயமற்ற நிலைக்கு வழிகோலக்கூடும்.

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் மெதுவான அல்லது சீரற்ற அமுலாக்கம் மீட்புச் செயன்முறையையும் இலங்கைப் பொருளாதாரத்தில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுவதையும் மேலும் தாமதிக்கக்கூடும்  கொந்தளிப்பான உலகப் பொருளாதாரச் சூழ்நிலை இன்னுமொரு இடர் காரணியாகும். பண்டங்களின் விலைகளில் தொடர்ச்சியாக ஏற்படும் உயர்ச்சி அல்லது மேலதிக அதிகரிப்பு அத்தியாவசிய பண்டங்களின் கொள்வனவை மேலும் கடினமாக்கலாம். உலகளாவிய பொருளாதாரச் சுருக்கத்தின் விளைவாக இலங்கையில் சுற்றுலாத் துறையின் மீட்சி தாமதிக்கக்கூடும். அத்துடன் ஏற்றுமதிகளுக்கான கிராக்கியும் குறையும்.  

அரசாங்கத் துறையின் கூடுதலான பங்குஇ செயற்றிறன் குன்றிய சொத்துகளின் அதிகரிப்பு மற்றும் கண்டிப்பான திரவத்தன்மை நிலைமைகள் மத்தியில் நிதித் துறையானது மிகவும் கவனமாக் கண்காணிக்கப்பட வேண்டும்.

நெருக்கடியின் வடு விளைவுகள் எதிர்காலத்தில் வளர்ச்சி வருமானம் மற்றும் தொழில்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி வலுவான கவலைகளும் நிலவுகின்றன. நெருக்கடி தொடர்வதனால் கூடுதலான மக்கள் குறிப்பாக உயர் தொழில் திறன்களைக் கொண்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேறக்கூடும். கஷ்டத்திலுள்ள குடும்பங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தக்கூடும். நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக வியாபாரத்திற்கு அவசியமான சொத்துக்களை விற்கக்கூடும். இத்தகைய ஈடுகொடுக்கும் செயன்முறைகளின் விளைவாக வளர்ச்சி அடைவதற்கும் கூடுதலான தொழில்கள் மற்றும் வருமானத்தை உருவாக்குவதற்கும் நாடு கொண்டுள்ள ஆற்றல் காலப்போக்கில் வீழ்ச்சியடையும்  

வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மேலும் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க சமூக பாதுகாப்புச் சீர்திருத்தம் மிகவும் கவனமாக அமுல் செய்யப்பட வேண்டும். 

சீர்திருத்தப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் அரசாங்கத்திற்கு உதவ நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். மிகவும் அவசியமான இச் சீர்திருத்தங்கள் இலகுவானவையாக இருக்காது. இதற்கு உறுதியான அரசியல் விருப்பம் பரந்த அடிப்படையிலான கருத்தொற்றுமை மற்றும் ஆலோசனையும் அபிவிருத்திப் பங்காளிகளின் உதவியும் அவசியம்.

இந்த விடயத்திலேயே எமது புதிய நாட்டுப் பங்காளித்துவக் கட்டமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. உலக வங்கிக் குழுமத்தின் புதிய நாட்டுப் பங்காளித்துவக் கட்டமைப்பு ஊடான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பனவே இலங்கை மக்களுக்கு இக் கஷ்டமான காலத்தில் எமது அர்ப்பணிப்பாகும்.

கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான எமது பதில் நடவடிக்கையாக அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் வாழ்வாதாரங்களுக்கு உதவி செய்வதற்கும் உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்வதற்கும் இடமளிக்கும் வகையில் நிறுவன அமைப்புகளைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்காக உலக வங்கி அதன் தற்போதய நிதியில் பகிர்ந்தளிக்கப்படாதிருக்கும் கணிசமான தொகைப் பணத்தை ஒதுக்கீடு செய்தது.

அந்தப் பணியின் தொடர்ச்சியாகஇ இரண்டு கட்ட அணுகுமுறை ஒன்றினை முன்வைத்துள்ளது. அவசரமான பாரிய பொருளாதார மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள்இ மனித மூலதனம் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொடர்பில் இந்த அணுகுமுறை முதலாவது கவனத்தைச் செலுத்துகின்றது.

18-24 மாதங்களின் பின்பும் சீர்திருத்தத் திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் சர்வதேச கடன் நிவாரணம் மற்றும் நிதியுதவிக்கு உட்பட்டதாகவும் படிப்படியாக நீண்டகால அபிவிருத்தித் தேவைகளிலான முதலீடுகளில் அதன் கவனத்தைத் திசைதிருப்பும். தனியார் துறைத் தொழில் உருவாக்கத்தை – குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை – ஊக்குவிக்கவும் காலநிலை மற்றும் வெளி அதிர்ச்சிகளுக்கான தாங்குதிறனை மேம்படுத்தவும் அதேசமயத்தில் சமூகப் பாதுகாப்பு மற்றும் மனித மூலதனத்தில் தொடர்ந்து முதலீடு செய்யவும் இது உதவும்.

இலங்கை அதன் மீட்புப் பாதையில் செய்ய வேண்டிய ஐந்து காரியங்களை உங்களுக்குச் சொல்வதானால் அவை பின்வருவனவாக இருக்கும்: 

1. அதிக உற்பத்தி மற்றும் வெளிப்புற நோக்குடைய பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்

வர்த்தகப் பண்டங்கள் தொடர்பில் இலங்கையின் பயன்படுத்தப்படாத ஏற்றுமதி வாய்ப்பு ஆண்டுதோறும் 10 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதென எமது மதிப்பீடுகள் காட்டுகின்றன. இது 142இ500 மேலதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.   தவறவிடப்பட்டுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு வர்த்தகத்தைத் தாரளமயமாக்குவதும் கூடுதலான மற்றும் சிறந்த முதலீடுகளைக் கவருவதும் அவசியமாகும். துணைக் கட்டணங்கள் படிப்படியாக நீக்கப்படுமென வரவு செலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.  போட்டித் தன்மை மற்றும் ஏற்றுமதி நோக்குநிலையை அதிகரிப்பதற்கு பரந்த அளவில் கட்டணக் குறைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.  இதற்குச் சமாந்திரமாக முதலீட்டைக் கவர்வதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒழுங்குபடுத்தல் மற்றும் கொள்கைச் சூழலை மேம்படுத்துவதற்கு நெறிமுறையான நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பு ஒன்று தேவை. முதலீட்டு வாழ்க்கை வட்டத்தின் சகல அம்சங்களுக்கும் வசதியளிப்பதற்கு விரிவான மற்றும் தனித்தியங்கக்கூடிய “முதலீட்டுச் சட்டம்” ஒன்றைக் கொண்டுவருவதற்கான திட்டத்துடன் இலங்கை இத் திசையில் நகர்வதை காண்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

2.மற்றுமொரு நெருக்கடியைத் தடுப்பதற்கு பொருளாதார ஆட்சி முறையை மாற்றுதல்

தற்போதய நெருக்கடிக்கு வழிகோலிய நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை இலங்கை வலுப்படுத்த வேண்டும். நிதி மற்றும் கடன் முகாமைத்துவம் தொடர்பில் பாராளுமன்றத்தினால் சுயாதீனமாகவும் பக்கச்சார்பு அற்ற முறையிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டமை இத் திசையில் எடுக்கப்பட்ட ஒரு சரியான நடவடிக்கையாகும். 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு ஆட்சி முறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பைக் காண்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அரச மூலவளங்களின் முகாமைத்துவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை முன்னேற்றுவதற்கு ஒரு புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டமும் கடன் முகாமைத்துவச் சட்டமும் உதவும். ஊழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பு நிறுவப்படுதல் முக்கியமானதாகும்.

3.SOEக்களினால் முன்வைக்கப்படும் போட்டித்தன்மை வரையறைகள் மற்றும் ஆட்சிமுறைப் பிரச்சினைகள்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில்  முக்கியமான பங்கினை வகிக்க முடியும். எனினும் அரச சொத்துகளின் பலவீனமான நிர்வாகத்துடன் SOEகளின் சார்பாக மூலவளங்கள் தவறான முறையில் ஒதுக்கப்படுவது நிதி இழப்புகள் போட்டித்தன்மை மற்றும் முதலீட்டின் பாதிப்புக்கு வழிகோலும். அத்துடன் மக்களுக்கு வழங்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகளின் தரமும் குறையும்.   துரதிர்ஷ்டவசமாக இதுவே நிதிக்கான அணுகலின் குறைபாடான முகாமைத்துவம் உள்ளடங்கலாக அநேகமான ளுழுநுகளின் நிலைமையாகும். அரசுக்குச் சொந்தமான வங்கிகளின் (SOE) நிதி நிலைமையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய சீர்திருத்தக் கொள்கையானது போட்டித்தன்மைஇ முதலீடு சேவை வழங்கல் மற்றும் ஆட்சி முறையை மேம்படுத்துவதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் வர்த்தக ரீதியான SOEகள் மீளமைப்பதற்கும் உரிமை மாற்றம் செய்வதற்கும் விரிவானதொரு அணுகுமுறையை வடிவமைத்துள்ளது. அமுலாக்கம் வெற்றிகரமாக அமைய வேண்டுமாயின் மீளமைப்பு மற்றும் உரிமை மாற்றக் கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறந்த நடைமுறை மற்றும் வெளிப்படைத் தன்மை ஊடாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பங்காளிகளுடனான விரிவான ஈடுபாடும் தரமுயர்ந்த நிபுணத்துவத்தின் ஒன்றுதிரட்டலும் தேவைப்படும்.  நிதிச் சமநிலை மற்றும் தனியார் துறையின் தலைமையிலான வளர்ச்சியின் மீது மாற்றகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பிரதான சீர்திருத்தத்தை அமுலாக்குவதில் அரசாங்கத்திற்கு உதவ நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

4. செயற்பாட்டு எல்லைகளை முன்னேற்றுவதற்கும் எதிர்கால அதிர்ச்சிகள் உள்ளிட்ட விடயங்களிலிருந்து வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்கும் நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பைத் தொடர்ச்சியாகப் பலப்படுத்துதல் 

சேமநல அனுகூலக் கொடுப்பனவுகள் திட்டம் நிறைவேற்றப்பட்டதையும் சமூகப் பதிவேட்டின் அமுலாக்கத்தையும் நாம் வரவேற்கின்றோம்.

முன்னோக்கிச் செல்லும்போது சமூகப் பாதுகாப்பு அமைப்பானது உயிர்த்துடிப்பு உள்ளதாகவும் விளைபயன் மிக்கதாகவும் வெளிப்படையானதாகவும் தாங்குதிறன் கொண்டதாகவும் இருப்பதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும். இது பின்வருவனவற்றின் மூலம் செய்யப்பட வேண்டும்: (1) தீவிரமான தொடர்பாடலில் இருந்து நன்மையடைய பதிவுகளை ஆரம்பித்தல்; (2) தற்போதுள்ள பயனாளிகளைத் தாமதமின்றி மீள உறுதிசெய்தல்; (3) தகுதிநிலைத் தீர்மானங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கும் குறைதீர்ப்புச் செயன்முறையை மேலும் முன்னேற்றுதல்; (4) சேவைகளை வழங்குவதற்குச் சமூகப் பதிவேட்டைப் பயன்படுத்துவதற்கு ஏனைய சமூகத் திட்டங்களை இயலச் செய்வதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட உதவிகளை வழங்குதல் மற்றும் (5) அதிர்ச்சி நிகழ்வொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் சேவைகள் மற்றும் அனுகூலங்களின் வழங்கலைத் அதிகரிக்க இடமளிக்கு வகையில் விசேட அம்சங்களை அமைப்பில் உட்புகுத்துதல்.

5.மனித மூலதனத்திலான முதலீடுகளுக்கு முன்னுரிமையளித்தல்

ஏற்கனவே மிகவும் அனுகூலமற்ற நிலையில் இருப்பவர்கள் பின்விடப்படாதிருப்பதையும் அவர்கள் தமது ஆற்றல்களைப் பூரணமாகப் பயன்படுத்த இடமளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கு ஆரம்ப வருடங்களிலான கல்வியிலும் அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வியிலும் ஏற்படுள்ள வியத்தகு அதிகரிப்பை நிவர்த்தி செய்வதும் தரமான அத்தியாவசிய உடல்நலப் பராமரிப்புச் சேவைகளுக்கான அணுகலை ஊக்குவிப்பதும் முக்கியமானதாகும். 

தொற்றுநோய் பரவலுக்கு தயார் நிலையில் இருக்கும் வகையில் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கும் பேரழிவு இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்துவது அடுத்து நிகழக்கூடிய அதிர்ச்சிக்குப் பதிலளிக்க முக்கியமானது.

இறுதியாகஇ திறன்களின் அபிவிருத்திக்காகவும் பசுமை மாற்றத்திற்காக இளைஞர்கள் மற்றும் வளர்ந்தவர்களின் திறன்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்காகவும்  மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி  மற்றும் பயிற்சியின் அணுகல் மற்றும் தரம் பலப்படுத்தப்படுவதும் முக்கியமானதாகும். 

இலங்கையைப் பொறுத்தவரையில் உண்மையாகவே தேவைப்படுவது என்னவென்றால், சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக அமுல் செய்யப்படுவதுதான். 

ஆழமான மற்றும் நிரந்தரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அமுல் செய்வதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை தற்போதய நெருக்கடி வழங்குகின்றது. இச் சீர்திருத்தங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கஷ்டமானவையாகத் தோன்றக்கூடும்.

ஆனால் நாம் இப்போது நேரத்திற்கு எதிரான ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதே போன்ற இன்னுமொரு நெருக்கடிக்கு இலங்கை முகங்கொடுக்க முடியாது. எதிர்கால அதிர்ச்சிகளுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒரு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை தற்போதய நெருக்கடியிலிருந்து விரைவாகவும் வலுவாகவும் மீட்சி பெறுவதற்குஇ பத்திரிகையாளர்கள் ஊடகத் துறையினர் மற்றும் நிபுணர்கள் என்ற முறையில் - அதைவிட முக்கியமாக பிரஜைகள் என்ற முறையில் - நீங்கள் இச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதோடு அவற்றை முறையாக அமுல் செய்வதற்குத் தீர்மானம் எடுப்பவர்களைப் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களாக வைத்திருக்கவும் வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.  கடந்த காலங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க சீர்திருத்தப் பின்வாங்கல்களை அனுபவித்தது. எனவே அரசாங்கம் இக் கடினமான சீர்திருத்தங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவதற்கு அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன். 

இது அவசரமானதுஇ அத்துடன் சாத்தியமானது. இலங்கை தன்னைச் சிறப்பாக மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்த முக்கியமான வேளையில் நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.

பொஹோம ஸ்துதி!  நன்றி!  தாங்க் யூ!

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image