Skip to Main Navigation
செய்தி வெளியீடுஅக்டோபர் 10, 2024

இலங்கையின் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டது; ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் முதலீடுகளை கவர்வதற்கும் தொடர்ச்சியான மறுசீரமைப்புகள் அவசியம்

கொழும்பு, ஒக்டோபர் 10, 2024—தற்போது இலங்கையின் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது, 2024 இல் பொருளாதார வளர்ச்சியானது 4.4 சதவீதத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் , முன்னைய எதிர்வுகூறல்களை இது விஞ்சிவிட்டது. முக்கிய கட்டமைப்பு மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள் ஆகியவற்றின்  உதவியின்   பிரகாரம்கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் ஏற்ப்பட்ட  வளர்ச்சியின் காரணமாக நான்கு காலாண்டு காலப் பகுதியில் இந்த சாதகத் தோற்றப்பாடு தொடர்ந்துள்ளது என உலக வங்கி தெரிவிக்கிறது.

உலக வங்கியின் ஆண்டுக்கு இரு முறை வெளியீடான இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலில் (Sri Lanka Development Update), எதிர்கால வாய்ப்புகள் என தலைப்பிடப்பட்ட இன்றைய வெளியீட்டில், அறவிடல் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுவதாகவும் பேரினப் பொருளியல் நிலைபெறும் தன்மையை பாதிக்கக்கூடியதாக காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளது, அத்தோடு கடனை வெற்றிகரமாக மீள்கட்டமைத்தல், மத்திய கால வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கட்டமைப்பு மறுசீரமைப்புகள் அவசியமாகும். ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், வெளிநாட்டு முதலீடுகளை கவருதல், பெண்கள் தொழிற்படை பங்களிப்புகளை மேம்படுத்துதல், உற்பத்தியை மேம்படுத்தல், மற்றும் வறுமை, உணவு பாதுகாப்பின்மை, நிதித் துறையில் காணப்படும் பாதிப்புறும் தன்மைகள் ஆகியவற்றினை பிரதான மறுசீரமைப்புக்களாக கொண்டு  அதிகளவு அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான வளர்ச்சி அடைவது அவசியமாகும்.

வியாபாரம் மூலம் உயர்வான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கான  ஆற்றல்கள் நாட்டில் காணப்படுகின்றன என  இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வருடாந்தம் 10 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்ட பயன்படுத்தப்படாத ஏற்றுமதி சார் ஆற்றல்கள் இலங்கையிடம் காணப்படுகின்றன, இதன் மூலம் சுமார் 142,500 புதிய தொழில்களை உருவாக்கலாம். அவசியமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உற்பத்தித் துறை, சேவைகள், விவசாயம் ஆகியவற்றில் பல்வகையில் ஏற்றுமதிகளை விரிவாக்கம் செய்வதற்கான காத்திரமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

“இலங்கையின் அண்மைய பொருளாதார நிலைப்படுத்தல்கள், நான்கு காலாண்டு காலப் பகுதி வளர்ச்சி மற்றும் 2023 மிகை நடப்புக் கணக்கு ஆகியன முக்கிய திருப்புமுனைகளாகும்” என மாலைதீவு, நேபாளம், இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய நாட்டுப் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் குறிப்பிட்டுள்ளார். “இத்தருணத்தில், இலங்கையானது அதனது உண்மையான ஏற்றுமதி ஆற்றல்களை உணர்வதற்கான வாய்ப்புள்ளது. இது வருடாந்தம் 10 பில்லியன் டொலர்கள் என நாம் மதிப்பிட்டுள்ளோம். பூகோள பெறுமதி சந்தையில் தனது பங்குபற்றுதலை மேலும் காத்திரமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்கு காணப்படுகின்றது, மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சியில் நிலைபெறுவதற்கு புவியியல் தோற்றப்பாட்டின் சாதகப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் பூகோள தோற்றப்பாட்டில் நன்மையை பெற்றுக் கொள்ள முடியும். முக்கியமான பொருளாதார மற்றும் ஆளுகை சார்ந்த மறுசீரமைப்புகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த தருணத்திலிருந்து முழுமையான நன்மைகளை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.”.

2025 இல் 3.5 சதவீத மிதமான வளர்ச்சி ஏற்படலாம் என இவ்வறிக்கையில் எதிர்கூறப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் வடுக்கள் காரணமாக மத்திய காலப் பகுதியினுள் மிதமான வழியில் வளர்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. . வறுமையானது படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட பொழுதிலும் கூட 2026 ஆம் ஆண்டு வரையில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்படலாம். 2024 இல் மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை விட குறைவாக பணவீக்கம் காணப்பட்டு பின்  கேள்விகள் அதிகரிக்கின்ற பொழுது படிப்படியாக  அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் ஆகியவற்றின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கானது மிகையாக காணப்படலாம் என எதிர்கூறப்பட்டுள்ளது.

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது, தெற்காசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் (South Asia Development Update) தோழமை ஆக்கமாகும், வருடத்திற்கு இரு முறை உலக வங்கியின் அறிக்கையானது தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சுபீட்சங்கள் பற்றி ஆராய்வதுடன் இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்கள் பற்றியும் பகுப்பாய்வு செய்கின்றது. 2024 ஒக்டோபரின் வெளியீடானது பெண்கள், வேலைகள் மற்றும் வளர்ச்சி என்ற தொனிப்பொருளில் இவ்வருடம்  தெற்காசியாவில் 6.4 சதவீத வளர்ச்சியை எதிர்வு கூறியுள்ளதுடன், உலகில் துரிதமாக வளர்ந்து வரும் EMDE (Emerging Markets and Developing Economy)பிராந்தியமாக தெற்காசியா  மாற்றம் பெற்று வருகின்றது. தொழிற்படையில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பூகோள வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றினால் இப்பிராந்தியம் துரிதமாக வளர்வதற்கும் அதனது அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் உதவுகின்றன என உலக வங்கியின் பிராந்திய தோற்றப்பாடு தெரிவிக்கின்றது.