Skip to Main Navigation
செய்தி வெளியீடு அக்டோபர் 22, 2019

புதிய இலக்கு: 2030 இல் 'கற்றல் வறுமை'யை அரைவாசியாக குறைத்தல்

அனைத்து அரசாங்கங்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் அர்ப்பணிப்பு இவ் இலக்கினை அடைய அவசியமாகும். 


 வொசிங்டன்,ஒக்டோபர் 17, 2019 – 2030 ஆம் ஆண்டளவில் 'கற்றல் வறுமை' யை அரைவாசியாக குறைப்பதனை குறிக்கோளாக கொண்ட கற்றல் இலக்கினை உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இலகுவான கதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள இயலாத 10 வயதினர், கற்றல் வறுமையென வரையறுக்கப்பட்டுள்ளது.  


யுனெஸ்கோ புள்ளிவிபரவியல் ஸ்தாபனம், வங்கிகள் ஆகியன இணைந்து தயாரித்த தரவின் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தினை பெறும் 53 வீதமான பிள்ளைகள் இலகுவான கதையினை வாசித்து விளங்கிக் கொள்ள இயலாத நிலையிலுள்ளனர். வறுமை நாடுகளில் 80 வீதம் என்ற உயர் நிலையிலுள்ளது. இதுபோன்ற உயர் கற்றல் வறுமை உலகளாவிய கற்றல் நோக்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்பதனை முற்கூட்டியே கண்காணிக்கும் குறிகாட்டியாக காணப்படுகின்றது. 


'கற்றல் இலக்கினை அடையும் வெற்றி எங்கள் நோக்கத்திற்கு சிரமமானது' என உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிஸ் மால்பஸ் தெரிவித்தார். இக் கற்றல் வறுமையை சமாளித்தலானது பரந்தளவிலான சீர்திருத்தங்கள் உள்நாட்டு வளங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்துதல் அவசியமாகின்றது. சிறந்த கற்பித்தல் மற்றும் கற்றல் முன்னுரிமைகள் ஆகியவற்றின் சிறந்த இணைப்பானது உடனடி முதலீடுகளிற்கான இலக்குப் புள்ளிகளாக உள்ளன.' 


இந்த புதிய இலக்கு மனித முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கான மனித மூலதன திட்டத்தின் முயற்சிகளுடன் இணைந்தது. மனித மூலதன குறியீட்டின் பெரும்பாலான வேறுபாடுகள் நாடுகளின் சுகாதாரம், கல்வி மற்றும் உயிர்வாழ்வில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன – கல்வி வெளியீடுகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாகும். 


'வாய்ப்புகளின் சமத்துவத்தை உறுதி செய்வதில் கல்வி ஒரு முக்கியமான காரணி என்பதனை நாங்கள் அறிவோம் என உலக வங்கி குழுமத்தின் உபதலைவர் அனெட் டிக்ஸன் தெரிவித்தார். ' பல நாடுகள் கற்றல் வறுமையை கிட்டத்தட்ட அகற்றிவிட்டன – 5 வீதத்திற்கும் குறைவான அளவுகள் ஆனால் ஏனையவர்களில், இது நம்பமுடியுமான அளவுக்கு அதிகமாகவுள்ளது, மேலும் பல குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் ஆபத்திற்கு இட்டுச் செல்கின்றோம். அது ஒழுக்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கற்றல் இலக்கு ஒரு இலட்சியமான ஆனால் அடையக்கூடிய இலக்கை நோக்கி நடவடிக்கைகளை மேம்படுத்தவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.' 


பல வளர்ந்துவரும் நாடுகள் விரைவான முன்னேற்றம் சாத்தியம் என்பதனை காட்டுகின்றன. கென்யாவில், தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் மாணவர்களின் நிலைக்கு ஏற்ற உள்ளடக்கங்களுடன் ஒரு குழந்தைக்கு ஒரு பாடநூல் (ஆங்கிலம் மற்றும் கிஸ்லாஹிலி இரண்டிலும் ) வழங்குவதன் மூலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. எகிப்தில், அரசாங்கம் அதன் பாடத்திட்டத்தையும் மதிப்பீட்டு முறைகளையும் மாற்றியுள்ளது, எனவே மாணவர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பீடு செய்யப்படுகின்றார்கள். சீர்திருத்தங்களின் முக்கிய கூறு ஒரு பாடசாலை நற்சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக கற்றலில் கவனம் செலுத்துகின்றது. வியட்நாமில், தெளிவான மற்றும் வெளிப்படையான தேசிய பாடத்திட்டம் பாடநூல்களின் உலகளாவிய கிடைப்பனவு மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குறைவான வருகை ஆகியவை நாட்டின் சிறந்த விளைவுகளுக்கு பங்களித்தற்காக வரவு வைக்கப்படுகின்றன. 


துரதிஷ்டவசமாக, பல நாடுகளில் தற்போதைய முன்னேற்றத்தின் வேகம் இன்னும் மெதுவாகவே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் காணப்பட்ட மிக விரைவான விகிதத்தில் நாடுகள் தங்கள் கற்றல் வறுமையை குறைத்தாலும், அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இலக்கு 2030 இற்குள் அடையப்படாது.
'கற்றல் வறுமையை குறைந்தது அரைவாசியாகக் குறைப்பது சாத்தியமானது, ஆனால் பாரிய அரசியல், நிதி மற்றும் நிர்வாகக் கடமைகள் மற்றும் முழு அரசாங்க அணுகுமுறையும் தேவை' என உலக வங்கி குழுமம், உலகளாவிய கல்வி பணிப்பாளர் ஜெய்மி சாவெட்ரா கூறினார். கற்றல் வறுமையை பூஜ்ஜியமாக எடுத்துக் கொள்வது – அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்க முடிகிறது என்பதனை உறுதிப்படுத்தவது ஒரு அடிப்படை வளர்ச்சி நோக்கமாகும். இது பசி அல்லது தீவிர வறுமையை நீக்குவது. அனைத்து குழந்தைகளிற்கும் கற்பதற்கான உரிமையுண்டு – ஒவ்வொரு நாட்டிலும், வறுமையை எவ்வாறு, எப்போது ஒழிக்க முடியும் என்பதை வரையறுக்கவும், வரும் ஆண்டுகளில் இடைநிலை இலக்குகளை நிர்ணயிக்கவும் ஒரு தேசிய உரையாடல் தேவை.


இந்த இலக்கையடைய நாடுகளுக்கு உதவவும், அவர்களின் மக்களின் மனித மூலதன விளைவுகளை மேம்படுத்தவும் வங்கி 3 காரணிகளை பயன்படுத்தும்.

  • வாசிப்புத் தேர்ச்சியை மேம்படுத்துவதில் திறம்பட நிரூபிக்கப்பட்டுள்ள நாட்டின் தலையீடுகளை உள்ளடக்கிய கல்வியறிவு கொள்கை தொகுப்பு: போதுமான நிதி திட்டங்களில் அடித்தளமாக உள்ள கல்வியறிவிற்கான அரசியல் மற்றும் தொழில்நுட்ப உறுதிப்பாட்டை உறுதி செய்தல்: உறுதியாக கட்டமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள கற்பித்தல் மூலம் கல்வியறிவிற்கான பயனுள்ள கற்பித்தலை உறுதி செய்தல்: சரியான மட்டத்தில் கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்தல் மற்றும் நடைமுறையில் பாடசாலை ஆசிரியரிற்கு பயிற்சி அளித்தல்: அனைவருக்கும் நூல்கள் மற்றும் வாசகர்களை அணுகலை உறுதி செய்தல்: மற்றும் குழந்தைகளிற்கு அவர்களின் சொந்த மொழியில் கற்பித்தல்.
  • முழு கல்வி முறைகளையும் வலுப்படுத்த ஒரு புத்துணர்ச்சியூட்டப்பட்ட கல்வி அணுகுமுறை - இதனால் கல்வியறிவு மேம்பாடுகள் நீடிக்கப்பட்டு அளவிடலாம். மற்றும் பிற அனைத்து கல்வி முடிவுகளையும் அடைய முடியும். இந்த அணுகுமுறை 5 பிரிவுகளை கொண்டுள்ளது. 


1. தயாரிக்கப்பட்ட மற்றும் ஊக்கப்படுத்தப்பட்ட கற்றவர்கள்
2. திறமையான மற்றம் மதிப்புமிக்க ஆசிரியர்கள்
3. கற்றலுக்கான வசதியான வகுப்பறைகள்
4. பாதுகாப்பான மற்றும் உள்ளடங்களான பாடசாலைகள் மற்றும்
5. நன்கு நிர்வகிக்கப்படும் கல்விமுறை 

  • ஒரு இலட்சிய அளவீட்டு மற்றம் ஆய்வு நிகழ்ச்சி நிரல் - கற்றல் முடிவுகள் மற்றும் அவற்றின் இயக்கிகள் இரண்டினையும் அளவிடுதல், அத்துடன் புதிய தொழில்நுட்பங்களின் ஸ்மார்ட் பயன்பாடு உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கை சார்ந்த ஆய்வு மற்றும் புதுமை என்பன அடித்தள திறன்களை எவ்வாறு உருவாக்குகின்றது என்பது.

மாற்றம் விரைவாக பாரியளவில் பாரிய சனத்தொகைக்கு அவசியம் தேவை. தொழில்நுட்பம் இல்லாமல் அதை செய்ய இயலாது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை அடைவதற்கு ஆதாரங்களை உறுதிப்படுத்த திறந்த மூல டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் அமைப்புகள் பயன்படுத்தப்படும். 


முன்னேற்றத்தைக் கண்காணிப்பது, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கற்றலை அளவிடுவதற்கான திறனில் வியத்தகு முன்னேற்றத்தைக் கோருகிறது. உலக வங்கி – யுனெஸ்கோ புள்ளிவிபர ஸ்தாபனம், நாடுகளில் கற்றல் மதிப்பீட்டு முறைகளை வலுப்படுத்தவும், காலப்போக்கில் மற்றும் சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய வழிகளில் செயல்திறனை சிறப்பாகக் கண்காணிக்க கற்றல் குறித்த நாட்டின் தரவின் பரப்பையும் தரத்தையும் மேம்படுத்த உதவும். மேலும், உலக வங்கியின் புதிய கற்றல் மதிப்பீட்டுத் தளம் மாணவர்களின் கற்றலை மிகவும் திறமையாக மதிப்பீடு செய்ய நாடுகளுக்கு உதவும். 


செய்தி வெளியீட்டு எண்: 2019/055/EDU

தொடர்பு

வொசிங்டனில்
Kimberly Versak
+1 (202) 458-8881
kversak@worldbankgroup.org
ஒலிபரப்பு கோரிக்கைளுக்கு
Sanchez-Bender
(202) 473-5863
msanchezbender@worldbankgroup.org
Api
Api