Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை நவம்பர் 4, 2021

வீதிப் பாதுகாப்புக்கான இலங்கையின் பயணம்

Image

In Sri Lanka, the estimated annual road crash deaths per capita is the highest among its immediate neighbors in South Asia.

World Bank


கதை சிறப்புக்கூறுகள்

  • 3,000 இறப்புகள் மற்றும் 8,000 காயங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நிகழும் 38,000 விபத்துக்கள் காரணமாகின்றன.
  • வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் இலங்கை போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருடாந்தம் 3-5% வரை செலவை ஏற்படுத்தும்.
  • வீதிப் பாதுகாப்பு நெருக்கடியைச் சமாளிக்க 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் முதலீடு தேவை.

பிரியந்த பெர்னாண்டோ* (34) வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றின் மீது மோதியது. அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் குடும்பத்தின் ஒரே வருமானமீட்டுபவரை இழந்தபோது அவர்களின் வாழ்க்கை உடனடியாக மாறுவதைக் கண்டனர். துரதிஷ்டவசமாக, இந்த துயரமான மற்றும் தேவையற்ற உயிர் இழப்புகள் இலங்கையில் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 38,000 விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக சுமார் 3,000 இறப்புகள் மற்றும் 8,000 கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. மதிப்பிடப்பட்ட வருடாந்த வீதி விபத்து இறப்புகள், தெற்காசியாவில் அதன் உடனடி அயல் நாடுகளில் மிக அதிகமாகவும், உலகில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஐந்து மடங்கு அதிகமாகவும் உள்ளது.

இலங்கையின் வீதிகளில் அதிக வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் வீதம் கடந்த தசாப்தத்தில் வறுமையைக் குறைத்தல் மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் 15-64 வயதுக்கு இடைப்பட்ட வேலை செய்யும் வயதுடையவர்களாகும்.

2011 மற்றும் 2018 க்கு இடையில் 67% - வாகன உரிமையின் விரைவான வளர்ச்சி மற்றும் பல்வேறு அளவுகள் மற்றும் வேகங்களின் மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்தின் பன்முகத்தன்மையால் இந்த நிலைமை மோசமடைகிறது. இதனால் பாதிக்கப்படக்கூடிய வீதிப் பயனாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 90%க்கும் அதிகமானோர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களாகும்.

இந்த போக்கு தொடர்ந்தால், அவசரமாக தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்த்தபடி, விபத்து இறப்புகள் மற்றும் காயங்கள் சீராக அதிகரிக்கும்.

இது நாட்டின் ஆரோக்கியம், நல்வாழ்வு, மனித மூலதனம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பிரச்சினையாகும். வீதி விபத்துக்கள் மற்றும் காயங்கள் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு வருடாந்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5% வரை செலவாகும் என உலக வங்கி கணித்துள்ளது. செயல்படாமை தொடர்பான செலவும் மிகவும் அதிகமாக உள்ளது.


"தேசிய வீதி விபத்து மரணங்களை 50 வீதமாக குறைப்பதற்கான நிலையான அபிவிருத்தி இலக்கு 3.6 இலக்கை அடைய வேண்டுமானால், எதிர்வரும் பத்தாண்டுகளில் இலங்கைக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது."

Image

More than 90% of crash victims in Sri Lanka are pedestrians, cyclists, and motorcyclists.

Joe Qian


இலங்கையில் மோசமான வீதிப் பாதுகாப்பு செயல்திறன் இலக்கு முன்முயற்சிகளில் குறைந்த முதலீட்டின் அறிகுறியாகும். தேசிய வீதி விபத்து மரணங்களை 50 வீதமாக குறைப்பதற்கான நிலையான அபிவிருத்தி இலக்கு 3.6 இலக்கை அடைய வேண்டுமானால், எதிர்வரும் பத்தாண்டுகளில் இலங்கைக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீடு பயனுள்ளதாக இருப்பதற்கும், நிலையான அடிப்படையில் சாலைப் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பு மற்றும் நிலையான பார்வை தேவைப்படும்.  

முன்முயற்சிகள் முறையாகவும் அளவிலும் இருக்க வேண்டும். நிறுவன திறன் வலுப்படுத்தப்பட்டு, வெற்றிகரமான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்:

  • அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் வீதியோர சமூகங்களைச் சேர்ப்பதையும் உறுதிசெய்ய பாதுகாப்பான உள்கட்டமைப்பு வடிவமைப்பை வலுப்படுத்துதல்.
  • பாதுகாப்பு இணக்க ஆட்சிகளின் முழு அதிகாரத்தையும் செயல்படுத்துவதற்கு முன், சட்ட அமலாக்க முகவர் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளால் அணுகக்கூடிய வலுவான வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிம அமைப்புகளை நிறுவுதல்.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகள் பாதுகாப்பாகவும், சாலைப் பயனாளிகள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு உள்ளடக்கிய சாலைப் பயனர் கொள்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த நிலப் பயன்பாடு-போக்குவரத்துத் திட்டமிடல் ஆகியவற்றை எளிதாக்குதல்.
  • உள்கட்டமைப்பு, வாகனம் மற்றும் சாலைப் பயனர் பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்க்கும் அனைத்து திட்டமிடல் மற்றும் கொள்கைக் கருத்தில் வேக முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை அளித்தல்.

வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான நிறுவனங்கள், வீதிகளில் அதிகரித்து வரும் அபாயங்களைச் சமாளிக்க போதுமான அதிகாரம் மற்றும் வளங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதில் நிர்வாக சவால்கள் மற்றும் வீதி விபத்து தரவுகளில் உள்ள இடைவெளிகளும் அடங்கும்.

இந்த சிக்கல்கள் முடிவுகளை மையப்படுத்திய மூலோபாயத்தை உருவாக்குவதற்கான திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அதன் போதுமான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தலை உறுதி செய்கிறது. நல்ல சாலைப் பாதுகாப்பு நடைமுறையை வரையறுப்பதற்கும்இ செயல்பாட்டிற்கான வரைபடத்தை வழங்குவதற்கும் மிகவும் பயனுள்ள, திறமையான மற்றும் அளவிடப்பட்ட முன்முயற்சிகள் தேவை.

இலக்கு வைக்கப்பட்ட வீதிப் பாதுகாப்பு முதலீடுகள் இலங்கையில் மனித மூலதனக் குவிப்புக்கு பங்களிக்கும். இது நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டின் செல்வத்திற்கும் பங்களிக்கும். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து உற்பத்தித்திறன், உலகளாவிய அணுகல், காலநிலை மாற்றம் தணிப்பு மற்றும் தழுவல் மற்றும் உள்ளூர் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட பிற நிலையான இலக்குகளுக்கும் இது பங்களிக்கும்.

தேசிய சாலைப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் முன்மொழியப்பட்ட ஸ்தாபனத்துடன் அரசு நடவடிக்கைக்கான சாதகமான அறிகுறிகள் வெளிப்பட்டு வருகின்றன. தேசிய சாலை விபத்து தரவுத்தளத்தை நிறுவுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையில் நீடித்த பாதை பாதுகாப்பு மற்றும் மக்களை மையப்படுத்திய அபிவிருத்திக்கு வழி வகுக்கும்.

*பெயர் மாற்றப்பட்டுள்ளது.



Api
Api