Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை அக்டோபர் 17, 2021

இலங்கையில் பொருளாதார மாற்றம் மற்றும் வறுமையை குறைப்பதை துரிதப்படுத்துவதற்கான நான்கு முன்னுரிமைகள்

Image

Young girl in the window of her father's Tuk-tuk (traditional taxi) in Jaffna, Sri Lanka. 

Natalia Davidovich / Shutterstock.com


கதை சிறப்புக்கூறுகள்

  • வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் வறுமையைக் குறைப்பதிலும் இலங்கை ஒரு சிறந்த பதிவைக் கொண்டுள்ளது. ஆனால் கோவிட் -19 நெருக்கடி, வாழ்வாதாரங்கள் மற்றும் வருமானத்தில் பாரிய இழப்புகளுக்கு வழிவகுத்தது.
  • புதிதாக வெளியிடப்பட்ட “இலங்கை வறுமை மதிப்பீடு. பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்துதல்”, எனும் அறிக்கை, கடந்தகால வெற்றியின் உந்துதல்களை பகுப்பாய்வு செய்து, இலங்கை தனது பொருளாதாரத்தை மாற்றுவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மேலும் அபிவிருத்தியை அடைவதற்குமான நான்கு முக்கிய முன்னுரிமைகள் பற்றி விரிவாக ஆராய்கிறது.
  • இலங்கை நெருக்கடியிலிருந்து வெளிவரும்போது, ஏழைகள் மற்றும் வசதியற்றவர்கள் தங்கள் சுய வருமானத்திற்குத் திரும்ப உதவுவது மற்றும் நீண்ட கால வடுக்களைத் தடுப்பது முக்கியம்.

வாழ்வாதாரம் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் இலங்கை பெரும் முன்னேற்றம் அடைந்தது

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வறுமையைக் குறைப்பதிலும் இலங்கை சிறந்த வரலாற்றைப் படைத்துள்ளது. கோவிட் -19 நெருக்கடிக்கு முன்னைய தசாப்தத்தில் வறுமை குறைந்து வந்தது. 2012/13 இல் 16.2 சதவிகிதத்தில் இருந்த ஏழைகளின் பங்கு 2016 இல் 11 சதவிகிதமாகக் குறைந்தது - உலக வங்கியின் $3.20 சர்வதேச வறுமைக் கோட்டில் (2011 PPP யில்) அளவிடப்பட்டது.  

இந்த எண்ணிக்கை 2019 இல் 9.2 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. நல்வாழ்வின் பிற நடவடிக்கைகளும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன - கடந்த தசாப்தத்தில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கிய பெறுபேறுகள் மேம்பட்டதுடன் மின்சாரத்திற்கான அணுகல் தற்போது கிட்டத்தட்ட உலகளாவியதாகவுள்ளது. இவை மிகவும் பாராட்டத்தக்க அடைவுகள்.

நலன்புரியில் இத்தகைய பரந்த அடிப்படையிலான முன்னேற்றங்கள் ஏற்படுவது, பொதுவாக வாழ்வாதாரங்களின் முன்னேற்றங்களினால் ஆகும். “நிலைபேறான வறுமை குறைப்புக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணி குறிப்பாக பண்ணை அல்லாத துறைகளில் தொழிலாளர்-வருமான வளர்ச்சி ஆகும். உற்பத்தித்திறன் மேம்பட்டதுடன் தொழிலாளர்கள் விவசாயத்தில் இருந்து சிறந்த ஊதியம் பெறும் துறைகளுக்கு நகர்ந்தனர்-இந்த செயல்முறை பொருளாதார மாற்றம் என விவரிக்கப்படுகிறது” என்கிறார் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் யியோன் சூ கிம்.  கடந்த தசாப்தம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் மூலம் வகைப்படுத்தப்பட்டது. உட்கட்டமைப்பு முதலீடுகள், சந்தைகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தின, பண்ணை அல்லாத துறைகளில் வாய்ப்புகள் விரிவடைந்தன, குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 வருடங்களுக்குள் நான்கு மடங்கு அதிகரித்ததால், இலங்கை முன்னணி சுற்றுலாத் தலமாக மாற்றமடைந்தது. அத்துடன்  “பகிர்வு பொருளாதாரம்" அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் Uber, PickMe மற்றும் Airbnb போன்ற சேவைகள் நகர்ப்புறங்களில் பிரபலமானது. 

கோவிட் -19 நெருக்கடி குறிப்பிடத்தக்க பின்னடைவுக்கு வழிவகுத்ததால் வறுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரித்தது

இருப்பினும், பொருளாதாரம் மிக மோசமான இறுக்கத்தை பதிவு செய்ததால் கோவிட் -19 பல ஆண்டு கால முன்னேற்றத்தை திடீரென நிறுத்த வழிவகுத்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்த உடனேயே தொழில்வாய்ப்புகள் மற்றும் வருமான இழப்புகள் பரவலாகின. $3.20 ஏழைகளின் பங்கு 2020 இல் 11.7 சதவிகிதம் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது - இது ஐந்து வருட மதிப்புள்ள முன்னேற்றத்திற்கு சமமான பாரிய பின்னடைவாகும்.

அதிக முறைசாராமை மற்றும் பலவீனமான பாதுகாப்பு முறைகள் காரணமாக பணியாளர்களிடையே பாதிப்பு அதிகமாக இருந்தது, இது அதிர்ச்சிகளைச் சமாளிக்கும் திறனைக் குறைக்கிறது.  தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார அதிர்ச்சியைத் தடுக்கவும் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டது, ஆனால் முழுமையான தாக்கத்தை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந் நிலை அதிகரிக்க சமத்துவமின்மையும் வழிவகுத்துள்ளது.


Image

As Sri Lanka emerges from the crisis, it will be important to help poor and vulnerable communities get back on their feet.

World Bank


கோவிட் இற்குப் பின்னரான மீட்பு முயற்சிகளை அறிவிப்பதற்கான நான்கு முன்னுரிமைகள்

உலக வங்கியின் புதிய அறிக்கையான, இலங்கை வறுமை மதிப்பீடு: பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை முன்னெடுக்கும் சமீபத்திய முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள வெற்றியின் உந்துதல்களை விபரிக்கிறது. இது வாழ்வாதாரம் மற்றும் வறுமையில் கோவிட் -19 நெருக்கடியின் ஆரம்ப தாக்கத்தையும் கவனமாக பகுப்பாய்வு செய்கிறது.  இலங்கை தனது பொருளாதாரத்தை மேலும் மாற்றவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் வறுமை குறைப்பு மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தியை நோக்கி ஒரு நிலைபேறான பாதையை அடைய நான்கு முன்னுரிமைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.  

விவசாய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே முதல் முன்னுரிமை.  கட்டமைப்பு மாற்றம் நடக்கின்றது ஆனால் அது மெதுவானது.  அதிக மதிப்புள்ள, ஏற்றுமதி சார்ந்த பயிர் கலவைகளை நோக்கி விவசாயிகளின் மாற்றத்தை ஆதரிப்பது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் விவசாயிகள் கணிசமாக ஏழைகளாக இருப்பர். காலநிலை- திறன் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட வேளாண்-தளபாடங்கள் அல்லது மதிப்புச் சங்கிலிகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் திட்டங்களின் கலவையிலிருந்து இந்தத் துறை பயனடையலாம்.

இரண்டாவது முன்னுரிமை கிராமப்புறங்களில் பண்ணை அல்லாத வேலைகளை ஊதியத்துடன் அணுகுவதற்குள்ள தடைகளை நிவர்த்தி செய்வதாகும். விவசாயம் அல்லாத செயல்பாடுகள் அதிகரித்துவரும் முக்கியமான மற்றும் சாத்தியமான வாழ்வாதார ஆதாரமாகும்.  வாழ்வாதாரம் குறித்த தீர்மானங்களை எடுப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது: அதிக கல்வித் தகைமை கொண்டவர்கள் பண்ணை துறைகளை விட பண்ணை அல்லாத துறைகளில், அதிக ஊதியம் பெறும் வேலைகளில் வேலை செய்ய கணிசமான வாய்ப்புள்ளது. குறைந்த வருமானம் தரும் நடவடிக்கைகளில் பல்வகைப்படுத்துவது வருமானத்தை அதிகரிக்க உதவாது என்பதை இது குறிக்கிறது. பண்ணை அல்லாத துறை மாறுபட்டதாக இருந்தாலும், சுற்றுலாத்துறையில் மூலோபாய முதலீடுகள் கிராமப்புற வருமான வளர்ச்சியை ஆதரிக்கின்ற அதேநேரம் குறைந்த திறன் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அதன் வேலைவாய்ப்பு உருவாக்கம் சாத்தியமாகிறது.

மூன்றாவது முன்னுரிமை தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமான பரந்த சீர்திருத்தங்களை ஆதரிப்பதாகும். இது தொழிலின் தரத்தை மேம்படுத்த நிச்சயம் உதவும்.  இலங்கையில், முறைசாராமை பரவலாக உள்ளது, இது சுமார் 70 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது தாழ்ந்த தொழில் நிலைமைகள், வரையறுக்கப்பட்ட வேலை பாதுகாப்பு மற்றும் குறைந்த வருமானம் காரணமாக வறுமையின் அதிக ஆபத்து ஆகியவற்றுடன் வலுவாக தொடர்புடையது. சர்வதேச சான்றுகளுக்கு ஏற்ப, சீர்திருத்தங்கள் முறைசாரா தன்மையை இலக்காகக் கொள்வதை விட முறைசாராமைக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொள்ளலாம்.

இறுதியான முன்னுரிமை இடம்சார்ந்த மாற்றத்தை ஊக்குவிப்பது மற்றும் உள்ளடக்குவதை வலுப்படுத்துவதாகும். இடம்சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் இதில் அடங்கும். “மனித மூலதனத்தில் முதலிடுதல்- சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு - இலங்கை குழந்தைகளின் திறனைத் திறப்பதற்கும் எதிர்கால உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் முக்கியம்" என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் சியோ காந்தா கூறுகிறார்.

இலங்கை நெருக்கடியிலிருந்து வெளிவரும்போது, வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கும். சமீபத்திய கணிப்புகள் வளர்ச்சி 3.3 சதவீதத்திற்கு மீளும் என்றும் வறுமை 2021 இல் 10.9 சதவீதத்திற்கு குறையும் என்றும் சுட்டிக்காட்டுகிறது - பிந்தையது இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட மேல் நிலையிலேயே உள்ளது. ஏழைகள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கள்  சுய வருமானத்திற்குத் திரும்புவதையும் நீண்ட கால பாதிப்பைத் தடுப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்- உதாரணமாக, நீண்ட கால பாடசாலை விடுமுறைகள் குறிப்பிடத்தக்க கல்வி இழப்புகளுக்கு வழிவகுத்தன. அத்துடன் மனித மூலதனத்தில் விரிவடைந்த ஏற்றத்தாழ்வுகள் வளர்ச்சியைக் குறைத்து நீண்ட கால சமூக இயக்கத்தையும் குறைக்கும்.Api
Api