Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை ஜூன் 29, 2017

இலங்கை அபிவிருத்தி நிலவரம்


கதை சிறப்புக்கூறுகள்

  • இலட்சியகரமான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் காண்பிக்கப்படும் அர்ப்பணிப்பு மற்றும் வலுப்பெற்று வருகின்ற உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக வங்கியானது மேம்பட்ட எதிர்காலத்தை எதிர்வு கூறியுள்ளது.
  • அண்மையில் எதிர்கொண்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சிநிலைக்கு மத்தியில் மோசமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பௌதீக ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் அதன் நெகிழ்திறனை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
  • வறுமை ஒழிப்பு விடயத்தில் இலங்கை முன்னேற்றங்களைக் எட்டியுள்ள போதிலும் எதிர்வரும் சீர்த்திருத்தங்கள் பொருளாதாரத்தின் வித்தியாசமான பிரிவுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தப்போகின்றது என்பதை கருத்திற்கொள்வது முக்கியமானதாகும்.

இலங்கை அபிவிருத்தி நிலவர அறிக்கை ( ஸ்ரீலங்கா டெவலப்மன்ற் அப்டேட்) ஆண்டிற்கு இரு தடவை தயாரிக்கப்படுகின்றது. கடந்து போன மாதங்களில் இடம்பெற்ற முக்கியமான பொருளாதார முன்னேற்றங்களை நீண்ட கால நோக்குடனும் உலகளாவிய பார்வையுடனும் அறிக்கையிடுவது மற்றும் கொள்கை முக்கியத்துவம் மிக்க விடயங்களை (விசேட அவதானத்திற்குரிய பிரிவில்) ஆராய்வது ஆகிய இரண்டு பிரதான நோக்கங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள், ஆய்வாளர் சமூகம், பொருளாதார கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கின்ற தொழில்சார் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களுக்களை மனதில் நிறுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளக மற்றும் வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும் 2016 ஆம் ஆண்டில் இலங்கை பரந்துபட்ட ரீதியில் திருப்திகரமான செயற்திறனைப் பதிவுசெய்துள்ளதாக உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி நிலவர பிந்திய அறிக்கை கூறுகின்றது. 

அண்மைக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமை போன்ற  குறிப்பிடத்தக்க சாதனைகளையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. நிதிநிலை கணக்குகளில் பற்றாக்குறையின் அளவைக் குறைத்துக்கொண்டதன் மூலமாக பொது நிதிகள் விடயத்தில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது.  இலட்சியகரமான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்துமே அரசாங்கம் அர்ப்பணிப்பு கொண்டிருக்கும் நிலையிலும் உலகளாவிய வளர்ச்சிப் போக்கானது வலுப்பெற்றுவரும் நிலையிலும் இந்த அறிக்கையானது இலங்கை தொடர்பாக மேம்பட்ட எதிர்கால கண்ணோட்டத்தை எதிர்வுகூறியுள்ளது.

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்துறையில் ஏற்பட்ட இழப்புக்களில் சிலவற்றை வலுவான மீளெழுச்சி கொண்ட முதலீட்டின் துணையுடன் இலங்கையின் நிர்மாணத்துறையானது எவ்வாறு துரிதகதியில் மீண்டெழ முடிந்ததென்பதையும் இலங்கையின் அபிவிருத்தி நிலவர அறிக்கை கோடிட்டுக்காண்பித்துள்ளது.

இருந்த போதிலும் எமது அறிக்கையானது முன்னோக்கியுள்ள சில முக்கிய சவால்களை இனங்கண்டுள்ளது,” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலகவங்கியின் சிரேஸ்ட வதிவிடப் பொருளியலாளா ரால்ஃப் வான் டூர்ன் கூறுகின்றார்.” சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வேகத்தை முன்னேற்ற வேண்டிய தேவை உள்ளது. அப்படி இல்லாதவிடத்து எதிர்கால பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரநிலையும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும். மறுமுனையில் வலுவான சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பப்படும் பணம் ஸ்திரமான நிலையில் கிடைக்கப்பெறுகின்றதன் மத்தியிலும் 2019ம் ஆண்டு முதலாக வரவுள்ள பாரிய முறிப் பத்திர மீட்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கை பலவீனமான வெளியகக் கணக்கை எதிர்நோக்கியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை வெளியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி நிலவர அறிக்கையானது, அதன் விசேட அவதானத்தின் ஓர் அங்கமாக, வளர்ச்சியை தொடர்ந்தும் இந்த நாட்டினால் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ளமுடியும் எனவும் கட்டமைப்பு ரீதியாக பலவீனமான நடைமுறைக் கணக்கை எவ்வாறு பலப்படுத்துவது எனவும் தனியார் துறையில் புதிய வினைத்திறன்மிக்க  தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது எவ்வாறு எனவும் கருத்திற்கொண்டுள்ளது.  இலங்கைத் தீவை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்வதற்கு முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் கொள்கை எதிர்வுகூறுகை போன்ற விடயங்கள் தொடர்பில் காணப்படும் கரிசனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்டக் கட்டமைப்பினை வடிவமைத்தல் தொடர்பாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

துண்டு துண்டாகத் தீர்வுகளைத் தேடும் போக்கிற்கு எதிராக எச்சரிக்கை செய்கின்ற இந்த அறிக்கையானது அனைத்து முக்கிய சவால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக காணப்படுவதுடன் அதற்கு விரிவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான சீர்த்திருத்த அணுகு முறை அவசியமாகத் தேவைப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது. கொந்தளிப்பானதொரு வெளிப்புறச் சூழ்நிலைக்கும் உள்நாட்டு அரசியல் பரிசீலனைகளுக்கும் இந்த நாடு முகங்கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளபோதிலும் உறுதிமிக்க அரசியல் விருப்பமும் அதிகார மையத்தின் ஆதரவும் இருக்குமிடத்து  சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கு உதவும் என அந்த அறிக்கை முற்றுப்பெறுகின்றது.

இந்த அறிக்கையில் காணப்படும் சில முக்கிய செய்திகள்

சீர்திருத்தங்கள் மூலமாக சவால்களை எதிர்கொள்வதானது  நிலையானதும் சமத்துவமிக்கதுமான வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும்.

பொது நிதி விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றமானது முக்கியமானதொரு அம்சம் என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

2016 இல் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகமான லாபங்களும் பிரதிலாப வருமானங்களும்,   வருமானங்களின் அதிகரிப்பில் முக்கிய பங்காற்றின. வரியற்ற வருமானங்களில் தங்கியிருப்பதைக் குறைத்துக்கொண்டு கட்டமைக்கப்பட்ட வகையில் வரி வருமானத்தை அதிகரிப்பதே முன்னோக்கிச் செல்கையில் எதிர்கொள்ள நேரிடும் முக்கிய சவாலாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் வளர்ச்சி மாதிரியை தனியார் முதலீடு சார்ந்த- வர்த்த கம் செய்யக்கூடியமையை முன்னிறுத்திய உலக பெறுமதிமிக்க வர்த்தக கட்டமைப்புடன் செருகியிருப்பதாக மாற்றியமைப்பதற்கு மிகவும் ஆழமானதும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியதுமான மறுசீரமைப்புக்கள் அத்தியாவசியமானதாகும்.

புதிய சீர்த்திருத்தங்கள் தேவைப்படும் அதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்று நாடாளுமன்றத்தினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அது தொடர்பில் அவதானம் தேவை.

மோசமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பௌதீக ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் அதன் நெகிழ்திறனை அதிகரிக்க வேண்டும்.

நாட்டின் பரந்துபட்ட பிரதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கும் வரட்சியும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி செயற்திறனில் கடுமையான தாக்கத்தை உண்டுபண்ணின.  முன்னைய காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு மக்களே பாதிக்கப்பட்டாலும் 2016 இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மண்சரிவினாலும்  ஏற்பட்ட இழப்பு 1992ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களின் போது ஏற்பட்ட இழப்பிலும் அமெரிக்க டொலரில் நோக்குகையில் இருமடங்கு அதிகமானதாகும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற காலநிலைக்கு முகங்கொடுக்கும் நெகிழ்நிறன் மேம்பாட்டு திட்டத்திற்கு (CRIP) உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது.  தற்போதைய மற்றும் எதிர்கால காலநிலை ஆபத்துக்களை இனங்காணுதல், ஆபத்துக்களை குறைப்பதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கிடல், ஆபத்துக்களை தெரிந்துணர்ந்த புதிய அபிவிருத்தி மற்றும் அதிக ஆபத்து நிறைந்ததாக இனங்காணப்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களைக் குறைக்கும் வகையிலான முதலீடுகளை முன்னெடுத்தல் என்பன அதனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உள்ளடங்கும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற காலநிலைக்கு முகங்கொடுக்கும் நெகிழ்நிறன் மேம்பாட்டு திட்டத்திற்கு (CRIP) உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. தற்போதைய மற்றும் எதிர்கால காலநிலை ஆபத்துக்களை இனங்காணுதல், ஆபத்துக்களை குறைப்பதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கிடல், ஆபத்துக்களை தெரிந்துணர்ந்த புதிய அபிவிருத்தி மற்றும்  அதிக ஆபத்து நிறைந்ததாக இனங்காணப்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களைக் குறைக்கும் வகையிலான முதலீடுகளை முன்னெடுத்தல் என்பன அதனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உள்ளடங்கும்.

விவசாயத்துறை காப்பீட்டு திட்டத்தை வலுப்படுத்துதல் அனர்த்தங்களுக்கு பிந்திய காலப்பகுதியில் நிதியை துரிதமாக பகிர்ந்தளிக்க வழிகோலும் வகையில் தேசிய அனர்த்த ஒதுக்கீட்டு நிதியத்தை அமைத்தல் ஆகியன இடைக்கால தீர்வுகளில் உள்ளடங்கும்.

நிதி ஒருங்கிணைப்பினால் ஏழைகள் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பில் பரிசீலிப்பது கொள்கையளவில் முக்கியமானது.

தீவிரமான வறுமை நிலையானது இலங்கையில் வீழ்ச்சிகண்டுள்ள போதிலும் நடுத்தர வறுமையானது தொடர்ந்தும் அதிகமாகவே காணப்படுகின்றது.  2012 - 2013 காலப்பகுதியில் சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 சதவிகிதமானவர்கள் மற்றும் தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களில் நான்கில் ஒருபகுதியினர் நாளொன்றிற்கு 3.10 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான ஊதியத்திலேயே வாழ்க்கையை நடத்தினர். மேலும் வறுமை பீடித்த பிரதேசங்கள் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் தோட்டத்துறைப் பகுதிகளிலும் மொனராகலை மாவட்டத்திலும் தொடர்ந்தும் இருந்தகொண்டிருக்கின்றன.  2004ம் ஆண்டிற்கும் 2014ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த தேசிய உற்பத்தியுடன் நோக்குகையில் சமூக உதவிக்கான செலவீனம் வீழ்ச்சி கண்டுள்ளது.  பாதிக்கபட்டவர்களை அடையாளப்படுத்துவதில் காணப்படும் வினைத்திறனற்ற செயற்பாட்டால் செலவிடப்படும் பணமானது சில சந்தர்ப்பங்களில் சரியான நபர்களைச் சென்றடைவதில்லை.

வறுமை ஒழிப்பு விடயத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை காண்பித்துள்ள போதிலும் எதிர்வரும் சீர்திருத்தங்கள் எவ்வாறு பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் மீதும் தாக்கம் செலுத்தப் போகின்றது என்பதை கருத்திற்கொள்வது முக்கியமானதாகும்.  பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு பலாபலன்கள் கிடைக்கும் அதேவேளை  போட்டித்தன்மையின் அதிகரிப்பினாலும்  உள்ளுர்  தொழிற்துறைக்கான பாதுகாப்பு குறைவடைவதாலும் சில துறைகள், சில நிறுவனங்கள் ,பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்படுவர்.

வறியவர்கள் மீது புதிய வரிகளின் விநியோகத்தினால் ஏற்படக்கூடிய  பாதகத்தைக் குறைப்பதற்காக கவனமாக அவதானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தற்போதைய பெறுமதிசேர் வரி விலக்களிப்பின் கட்டமைப்பாக இருக்க முடியும்.  உண்மையாக நோக்குமிடத்து அனைத்து வெற் வரி விலக்களிப்புக்களும் வறியவர்களுக்கு உதவுகின்ற விடயத்தில் குறைந்தளவிலான வினைத்திறனைக் கொண்டிருக்கின்றன.  வெற் வரி முறைமையை எளிதாக்குகின்ற அதேவேளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலைமைப்பின் கீழான செலவுகளால் பதிலீடு செய்வது  வறியவர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் வினைத்திறன்மிக்கது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய நகர்வுகள் மறுசீரமைப்புக்களினால் பாதகமான முறையில் தாக்கமுற்றவர்கள் மிகவும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும். 


Api
Api