Learn how the World Bank Group is helping countries with COVID-19 (coronavirus). Find Out

நிகழ்வுகள்

இலங்கையில் தகவமைப்பு சமூக பாதுகாப்பு –பேரிடர்கள் மற்றும் காலநிலைமாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்தல்

செப்டம்பர் 25 - 26, 2018

Colombo, Sri Lanka

Image

Sri Lanka has suffered natural disasters such as floods and droughts over the last four decades. These disasters have affected poor households and the recovery and reintegration have been adhoc.

World Bank

 • இலங்கை அதிகமதிகமாக தொடர்ச்சியான, கடுமையான அதிர்வுகளை எதிர்கொண்டுவருகின்றது. 2017 ஆரம்பத்தில் இலங்கை கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் மோசமான வெள்ளத்தை சந்தித்தது.மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் 219 உயிர்களை பலியெடுத்ததுடன் 80,000 வீடுகளை அழித்தன. உணவு மற்றும் தங்குமிடங்கள் ,காப்புறுதி கொடுப்பனவுகள் மூலம் பாதிக்கப்பட்ட வீடுகளின் தேவைகளை உடனடியாக கவனிக்ககூடிய வலு இலங்கை அரசாங்கத்திடமிருந்தது.எனினும் மீளுதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பிற்கான திட்டங்கள் தற்காலிகமானவையாகவே காணப்பட்டன.வெள்ளத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ,வீடுகள் குறித்த உரிய தரவுகள் இல்லாதமையினால் அவர்களுடய தேவைகள் குறித்து கண்டறிவது கடினமானதாக இருந்தது. மேலும் இடர்களின் போது அமைச்சுகளிற்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதும் புலனாகியது.

  பேரிடரை எதிர்கொள்ளும் திறனை அதிகரிப்பது இலங்கைக்கான அபிவிருத்தி முன்னுரிமைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இதனை இலங்கை 2025ற்கான தொலைநோக்கு மூலோபாயத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.வரட்சி ,வெள்ளம் போன்ற அதிர்ச்சிகள் இவற்றை எதிர்கொள்ளும் திறனற்ற குடும்பங்களையும் வறிய மக்களையும் தீவிரமாக பாதிக்கின்றன. பேரிடர் இடம்பெறுவதற்கு முன்னரே இவ்வாறான மக்கள் மத்தியில் அதனை எதிர்கொள்வதற்கான வலுவை அந்த மக்கள் மத்தியில் அதிகரிக்கவேண்டும்  மேலும் பாதிப்பு நிகழ்ந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிற்கு துரிதமாக உதவிகளை வழங்கக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கவேண்டும் என்ற பொதுக்கருத்து உருவாகி வருகின்றது.இதனை சாதிப்பதற்கு இலங்கை தனது பணம் வழங்கும் திட்டங்கள் - மேலும் வாழ்வாதார திட்டங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு  போன்றவற்றிற்கு தீர்வை காணும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்

  இலங்கையில்  பேரிடரிற்கான உதவிகளை வழங்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது காணப்படுகின்றன. 

  இலங்கை, உலக வங்கியின் உதவியுடன் தனது சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் நவீனப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது.புதிய சமூக பதிவேடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதுடன் அடுத்த வருடமளவில் அது நடைமுறைக்கு வரும்.முக்கிய நலன்புரி திட்டங்களின் பயனாளர்கள் குறித்த பதிவுகளை  விபரங்களை இதுவே கையாள உள்ளது.வெளிப்படைதன்மை  மற்றும் பக்கச்சார்பின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பயனாளர்களை தெரிவு செய்வது சுயாதீன அமைப்பொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.அந்த அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட இலத்திரனியல் முறையை பயன்படுத்தி அவர்களிற்கு பணவழங்கலை முன்னெடுக்கும்.

  பேரிடர் உதவி வழங்கலை புதிய பாதுகாப்பு வலையமப்பு ஊடாக ஒழுங்படுத்துவது குறித்து அரசாங்க மட்டத்திலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுகின்றது.இந்த புதிய வழங்கல் முறை பல வெளிப்படை தன்மை,கொடுப்பனவுகளை வழங்கும் வேகம் உட்பட பல சாதகதன்மைகளை வழங்குகின்றது.பேரிடர் குறித்து முன்கூட்டியே எதிர்வு கூறுவதற்கும் முன்னெச்சரிக்கைக்குமான அமைப்புகளை உருவாக்குவது குறித்து பல பணிகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இவை அனைத்தையும் உள்ளடக்கிய நவீன பாதுகாப்பு வலையை எப்படி உருவாக்குவது என சிந்திப்பதற்கான தருணம் இதுவாகும்.

  எனினும் இது குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பதும் அது அனைவரையும் உள்வாங்கிய வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமானதாகும்.மேலும் சமூக பாதுகாப்பு அமைப்பு ,பல அரசாங்க திணைக்களங்கள் காணப்படும் தரவுகள் ,அமைப்புமுறைகள்,ஸ்தாபன ஏற்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியுள்ளது.

 • ஏற்றுக்கொள்ளக் கூடிய சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து இலங்கையின் அபிவிருத்தி சமூகத்தில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இலங்கையில் தற்போது காணப்படும்  சமூக பாதுகாப்பு  மற்றும் பேரிடரினை கையாளும்  முறையை மேலும் முன்னேற்றகரமானதாக மாற்றலாம் என ஆராய்வதுமே இந்த உயர்மட்ட மாநாட்டின் நோக்கமாகும்.இலங்கை இதன் பல்வேறு அங்கங்கள் குறித்து  கவனம் செலுத்;தி வரும் அதேவேளை இது குறித்து நீண்ட தூர அடிப்படையில் சிந்திப்பதும் புதிய சமூக பதிவேட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த அமைப்புகளை ஒன்றிணைக்கலாம் என ஆராய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.இந்த விடயத்துடன் தொடர்புபட்டவர்களின் பல்வகைதன்மையை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய பேரிடர் சுழல்  சமூக பாதுகாப்பு மற்றும் பேரிடரை எதிர்கொள்ளும் கொள்கைகள், குறித்து பொதுவான புரிந்துணர்வை ஏற்படுத்துவதும், உண்மையான ஒன்றிணைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சமூக பாதுகாப்பு முறையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து  ஆராய்வதும் அவசியம்.

  இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகத்தில் பெருமளவு அனுபவமும் அறிவும் காணப்படுகின்றது இதனை இலங்கைக்கு சிறந்த தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தலாம்.இந்த மாநாடு இலங்கையின் தற்போதைய கொள்கைள், திட்டங்கள் மற்றும் விநியோக முறைகள் குறித்து ஆராய்வதுடன் அவற்றில் காணப்படும் இடை வெளிகள் குறித்தும் ஆராயும்.சிறந்த முறையில் செயற்படும் அமைப்பு முறைகளை கொண்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் மாதிரிகள் குறித்து அறிக்கைகளை ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.மேலும் இந்த மாதிரிகளில் இருந்து இலங்கைக் பொருந்தக்கூடிய எவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறி;த்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் ஆராய்வார்கள்.

  திட்டம் வரிசை

  வடிவம் 

  இலங்கையின் தேசிய திட்;டமிடல் திணைக்களம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. உலக வங்கியும் பிரான்சின் அபிவிருத்தி முகவர் அமைப்பும் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளன.தொடர்புபட்ட அனைத்து அமைச்சுகளையும் சேர்ந்த சிரேஸ்ட அமைச்சர்கள்,புத்திஜீவிகளின் அமைப்பினை சேர்ந்த பிரதிநிதிகள்,கல்வி மான்கள் அபிவிருத்தி சகாக்கள் உட்பட 100ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வார்கள்.எத்தியோப்பியா,இந்தோனேசியா மெக்சிக்கோ,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் தங்களுடைய திட்டங்கள் மற்றும் சீர்திருத்த அனுபவங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

  மாநாடு இரண்டு  நாட்களிற்கு ஆறு அமர்வுகளை கொண்டிருக்கும்.அதன் பின்னர் இரு சமாந்திர செயலமர்வுகள் இடம்பெறும்.நான்கு கருப்பொருள்களை கொண்டுள்ள உலக வங்கியின்சமூக சமூக பாதுகாப்பு குறித்த வடிவமைப்பின் பின்னரே இந்த அமர்வுகள் தொடரும்.இது நான் கருப்பொருள்களை உள்ளடக்கியது.- தகவல்கள்,திட்டங்கள்,நிதி மற்றும் ஸ்தாபன ரீதியிலான ஒருங்கிணைப்பு.ஒவ்வொரு அமர்வும் இதில் ஏதாவது கருப்பொருளொன்றை கொண்டிருக்கும்.இலங்கை நிலவரம்  குறித்த  அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும்,மேலும் இரு சர்வதேச பிரதிநிதிகள் தங்கள் நாட்டின் சாதனைகள் குறித்து உரையாற்றுவார்கள்,மேலும் இலங்கையில் புதிய கண்டுபிடிப்புகளிற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடலொன்றும் இடம்பெறும்.இது தவிர வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் அவர்களின் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான அமர்வுகளும் காணப்படும்.இரண்டாவது நாள் மதிய உணவிற்கு பின்னர் பாதுகாப்பு வலை குறித்தும், முன்கூட்டிய எச்சரிக்கைக்கான தரவுகள் குறித்தும்,பேரிடர் ஆபத்து நிதி குறித்தும் மூன்று தனித்தனியான செயலமர்வுகள் இடம்பெறும்.இந்த செயலமர்வுகள் முதல் இரு நாட்களில் கற்றுக்கொண்ட விடயங்களை இலங்கை தொடர்பான விடயங்களில் பொருத்திப்பார்ப்பதற்கும் சீர்திருத்த அபிவிருத்தி திட்டமொன்ற உருவாக்குவதற்குமான வாய்ப்பை பங்குகொண்டவர்களிற்கு வழங்கும். 

Event Liaison