Skip to Main Navigation
செய்தி வெளியீடு நவம்பர் 3, 2017

இலங்கையின் புதிய வளர்ச்சி மாதிரியின் வெற்றிக்கு அபாயங்களை ஒருங்கிணைந்த வகையில் வெற்றிகொள்வது மிக முக்கியம்

கொழும்பு, நவம்பர் 2, 2017 - வளர்ச்சியை நிலைபேறானதாக வைத்திருப்பதற்கும், தொழில்களை உருவாக்குவதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும் இலங்கை மேலும் அதிகமான தனியார் முதலீடுகளை நோக்கியும், வர்த்தகம் பண்ணக்கூடியதான துறைவழி வளர்ச்சி மாதிரியை நோக்கியும் நகர்வது அவசியமானது என உலக வங்கியின் புதிய அபிவிருத்தி நிலவர அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் பொருளாதாரம் எதிர்கால முன்னோக்கிய பார்வை மற்றும் கொள்கை முன்னுரிமைகள் என்பவற்றை எடுத்துரைக்கும் விசேடத்துவமான அரையாண்டு அறிக்கையான இவ் அபிவிருத்தி நிலவர அறிக்கையில் இத்தகைய மாற்றத்தை நோக்கிய முன்னோக்கிய பாதை வழிகாட்டியை காண்பிக்கின்ற ஆவணமாக Vision 2025 ஐ அங்கீகரித்துள்ளது.

அபிவிருத்திக்கான அதிகமான வாய்ப்புக்களை திறந்துவிடுவதுடன் பாரம்பரியமான இடர்களுக்கு முகங்கொடுப்பதில் இலங்கை நெகிழ்வுடையதாக மாற்றும் அதேவேளை, இந்த புதிய வளர்ச்சி மாதிரியை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கு சிறப்பான இடர் முகாமைத்துவமானது ஒத்துழைத்து வழிகோலும் என்பதற்கான வலுவான தர்க்கத்தை இந்த அபிவிருத்தி நிலவர அறிக்கை முன்வைக்கின்றது.

குடும்பங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த இடர்களை நன்றாக முகாமைத்துவம் செய்வது அவசியமாகும்.

நிதியியில் மற்றும் வர்த்தக கொள்கை சீரமைப்புக்கள் செய்தல், பொதுக் கடன் மற்றும் உறுதியான கடன்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான இடர்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக அபிவிருத்தி நிலவர அறிக்கையின் நடப்பு பதிப்பானது அவதானம் செலுத்துகின்றது.

வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கட்டடத் தொழிற்துறையிலும் வெளியகத்துறைகளிலும் ஏற்பட்ட பெரும் தாக்கம் காரணமாக 2017ம் ஆண்டின் முதலாவது அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் வளர்ச்சியானது 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

மொத்த தேசிய உற்பத்தியுடன் பார்க்கையில் (2016ல் 79.3 சதவீதம்) ஒப்பீட்டளவில் அதிகமான பொதுக்கடன் காணப்படுகின்றமை, அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரச முகவரமைப்புக்களிற்கு வழங்கப்படுகின்ற திறைசேரி உத்தரவாதங்கள் (2016ல் மொத்த தேசிய உற்பத்தியில் 7.1 சதவீதம்) ஆகிவற்றினால் நிதிய அபாயங்களானது 2017ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் தொடர்ந்தும் உயர்வானதாகக் காணப்பட்டது.

குறிப்பிடத்தக்க சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017ல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயற்திறனைக் காண்பிக்கின்றதுடன் 2017க்குள் பொருளாதார வளர்ச்சியானது 4.6 சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2017 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக்கொண்டது. இதேவேளை இலங்கை அரசாங்கமானது, பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், கடந்த செப்டம்பர் மாதத்தில் புதியதொரு உள்நாட்டு வருமான சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது இதில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

‘இலங்கை அதன் தூரதரிசனப் பார்வையாக இலட்சிய வேட்கையுடன் வெளியிட்டுள்ள Vision 2025ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மேல், நடுத்தர வருமானம் நிலையை ஈட்டும் பயணமானது நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையிலும், நாட்டிலுள்ள மிகவும் நலிவடைந்த தரப்பினரில் அதிகமானவர்களை ஒதுக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டு ஏற்றுமதியை தலைமையாகக் கொண்டுள்ள வளர்ச்சி மாதிரியை முன்னெடுத்துச் செல்கின்ற இயலுமையிலுமே தங்கியுள்ளது.' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவித்தார்.

அபிவிருத்தி பிந்திய நிலவர அறிக்கைக்கு அமைவாக Vision 2025 ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புதிய வளர்ச்சி மாதிரியானது, அரச முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகம் செய்ய முடியாத துறைசார் வளர்ச்சி மாதிரியில் இருந்து தனியார் முதலீட்டை அடியொற்றி வர்த்தகம் செய்யக்கூடியதான துறைசார் வளர்ச்சி மாதிரியாக மாற்றம் பெறவேண்டும். இந்த நகர்வானது பெரியதும் விரைவாக வளர்ச்சி கண்டுவருகின்றதுமான உலக பொருளாதார வல்லரசுகளுக்கு அருகாமையில் இருக்கின்ற இடவமைப்பு சாதகத்தன்மையில் இருந்து பயன்களை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு வழிகோலும்.

வர்த்தகத்திற்கு சிநேகபூர்வமான சூழ்நிலையை மேம்படுத்துவதற்கும் தீர்வைகள், வினைத்திறனற்ற எல்லை அனுமதி நடைமுறைகள் போன்ற வர்த்தகத்திற்கு பங்கம் விளைவிக்கும் தடங்கல்களை நீக்குவதற்கும் தேவையான முக்கியமான சீர்திருத்தங்களை இந்த பிந்திய நிலவர அறிக்கையானது அடையாளங்கண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விரிவான பொது நிதி முகாமைத்துவ சட்டமொன்றை வரைதல், கடன் முகாமைத்துவ நிகழ்ச்சி நிரலில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் மற்றும் கணக்காய்வாளர் சட்டத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றை முன்னுரிமைக்குரியதாக எடுத்து செயற்படுதலானது முன்னேற்றத்திற்கு அவசிமானது என பட்டியலிட்டுள்ளது.

'இந்த மாற்றமானது அதற்குரித்தான அபாயங்களையும் வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. இது பல பேரண்டப்பொருளாதார அபாயங்கள் தொடர்பில் இலங்கையை மேலும் நெகிழ்வுடையதாக மாற்றும் ஆனால் புதியவற்றிற்கு ஆட்படுத்தும்.' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஸ்ட வதிவிட பொருளியலாளாரும் இந்த அறிக்கையின் படைப்பாளர்களில் ஒருவருமான ரல்ஃப் வன் டூர்ண் தெரிவித்தார். 'அடிக்கடி அதிகரித்துவருகின்ற இயற்கை அனர்த்தங்கள் மென்மேலும் தயாராகவிருக்க வேண்டியதன் அவசியத்தை கோரிநிற்கின்றது.  சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இடர் அபாயங்களை நன்கு முகாமைத்துவம் செய்வது முக்கியமானதாகும்.  பேரண்ட நிதியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அதன் தயார்நிலைத் தன்மையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக இலங்கை அதன் இலக்கை அடைந்துகொள்ளமுடியும்.'  என இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் உலக வங்கியின் அவதானிப்பை மேற்கொண்டு வன் டூர்ண் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 


தொடர்பு

In Colombo:
Dilinika Peiris-Holsinger
+94115561325
dpeiris@worldbank.org
Api
Api